இன்றைக்கு ஐப்பசி மாதம் பிறந்திருக்கிறது. இந்த ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்று சொல்லுவார்கள். ஐப்பசி மாதத்தில் துலாஸ்தானம் செய்வது அதி சிறப்பு வாய்ந்த பரிகாரமாக சொல்லப்பட்டுள்ளது. துலாஸ்தானம் என்றால், காவிரி கரைக்கு சென்று, அந்த காவிரி கரைபுரண்டு ஓடக்கூடிய தண்ணீரில் குளித்து ரங்க நாதனை தரிசித்தால் அது நமக்கு கோடி புண்ணியத்தை தேடித் தரும். ஐப்பசி முதல் நாள் இந்த வழிபாட்டை பலரும் மேற்கொள்வார்கள்.
ஐப்பசி மாதம் முதல் நாள் இந்த வழிபாட்டை செய்ய முடியாதவர்கள் கூட ஐப்பசி மாதம் முடிவதற்குள் திருச்சி சென்று காவேரி நதிக்கரையில் நீராடி ரங்க நாதனை தரிசனம் செய்யலாம். தவறு கிடையாது. இந்த குளியலையும் வழிபாட்டையும் மேற்கொள்பவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடிய தோஷங்கள் விலகும். ஜாதக கட்டத்தில் இருக்கக்கூடிய தோஷங்கள் விளக்கும் என்பது சாஸ்திர ரீதியான உண்மை.
ஐப்பசி மாதம் ரங்கநாதன் வழிபாடு
ஆனால் எல்லோராலும் இந்த துலாஸ்தானம் செய்ய முடியாது. ஸ்ரீரங்கம் சென்று ரங்க நாதனே தரிசனம் செய்ய முடியாது. ஸ்ரீரங்கத்திற்கு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் இந்த வழிபாட்டை சுலபமாக மேற்கொள்ளலாம். கொஞ்சம் தூரமாக இருப்பவர்கள் கோவிலுக்கு செல்ல வாய்ப்பு அமையவில்லை என்பவர்கள் எல்லோருக்கும் இந்த ரங்கநாதரின் அருள் கிடைக்க வேண்டும் என்றால் என்ன வழிபாடு செய்யலாம். அதை தான் இப்போது ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
முதலில் ஐப்பசி மாதம் முழுவதும் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து குளிக்க வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீரில் நீங்கள் குளித்தாலும் தவறு கிடையாது. பச்சை தண்ணீரில் குளித்தாலும் தவறு கிடையாது. அந்த தண்ணீரில் இரண்டு சிட்டிகை மஞ்சள் பொடி போட்டு ரங்கநாதா ரங்கநாதா என்று 11 முறை சொல்லிவிட்டு, அந்தத் தண்ணீரை எடுத்து குளிக்கும் போது துலாஸ்தானம் செய்த புண்ணியம் நம்மை வந்து சேரும், காவிரி நதியில் குளித்த புண்ணியமும் நம்மை வந்து சேரும் என்று சொல்லப்பட்டுள்ளது.
தினமும் தலைக்கு தான் குளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் வெறும் உடம்புக்கு குளித்தாலும் இந்த முறைப்படி குளிக்க வேண்டும். சரி இன்றைய தினம் முடிந்துவிட்டது. ஐப்பசி முதல் நாள் நாமெல்லாம் இன்று காலையிலேயே குளித்து விட்டோம். என்ன செய்வது.
கொஞ்சம் மஞ்சள் தண்ணீரை டம்ளரில் எடுத்துக்கொண்டு ரங்கநாதா ‘ரங்கநாதா’ என்று 11 முறை சொல்லிவிட்டு இந்த மஞ்சள் தண்ணீரை தலையில் தெளித்துக் கொண்டு மாலை பூஜையில் ரங்கநாதரை நினைத்து விளக்கு ஏற்றி, ரங்கநாதனை நம் வீட்டிற்கு அழைத்தால் ரங்கநாயகியோடு நம் வீட்டிற்கு வந்து தேவையான செல்வ கடாட்சத்தை கொடுத்து விடுவார் அந்த பெருமாள்.
இன்று மாலை தொடங்கி இந்த வழிபாட்டை தினம் தோறும் செய்து வாருங்கள். நாளை முதல் ரங்கநாதரை நினைத்து வீட்டிலேயே துலாஸ்தானம் செய்துவிட்டு காலையிலேயே விளக்கு ஏற்றி வழிபாட்டை மேற்கொள்ளலாம். ரங்கநாதர் என்பவர் சுக்கிர பகவானின் அருளை நமக்கு பெற்று தரக்கூடியவர். இந்த ரங்க நாதனை இந்த ஐப்பசி மாதத்தில் தினம்தோறும் நினைத்து வழிபாடு செய்தால் தானாக சுக்கிரனின் அருளும் நமக்கு கிடைத்துவிடும்.
இதையும் படிக்கலாமே: பணகஷ்டம் நீக்கும் லட்சுமி நாமங்கள்
பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்வும் இந்த வழிபாடானது நமக்கு கை கொடுக்கும். தோஷங்களுக்கு தோஷமும் நீங்கியது, பண கஷ்டமும் நீங்குவதற்கு உண்டான வழியும் கிடைத்தது. இவ்வளவு அற்புதம் வாய்ந்த வழிபாட்டினை யாரேனும் தவறு விடுவார்களா. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அந்த ரங்க நாதனை இந்த ஐப்பசி மாதம் முழுவதும் உங்கள் வீட்டில் வைத்து வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.