- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணகஷ்டம் நீக்கும் லட்சுமி நாமங்கள்

பணகஷ்டம் நீக்கும் லட்சுமி நாமங்கள்

- Advertisement -

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் என்பது இருக்கும். அந்த கஷ்டங்களுக்கு அடித்தளமாக திகழக்கூடியது பணமாகத்தான் இருக்கும். பணத்தால் தான் பலவிதமான கஷ்டங்கள் ஏற்படுகின்றது. அந்த பணம் நம்மிடம் தாராளமாக இருக்கும் பட்சத்தில் நூற்றுக்கு 99 சதவிகித கஷ்டங்கள் நீங்கிவிடும் என்றே கூறலாம். இந்த கஷ்டங்களை நீக்குவதற்கு பணம் நம்மிடம் தாராளமாக இருக்க வேண்டும். தாராளமான பணவரவை தரக்கூடிய மகாலட்சுமி நாமங்களை பற்றி நான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பணகஷ்டம் நீக்கும் லட்சுமி நாமங்கள்

பணத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவர் மகாலஷ்மி தாயார். சுக்கிர பகவானுக்கு அதி தேவதையாகவும் மகாலட்சுமி தாயார் திகழ்கிறார். பணம் தொடர்பான அனைத்து விதமான வேண்டுதலையும் நாம் மகாலஷ்மி தாயாரிடம் தான் முன்வைக்க வேண்டும் என்று நம் அனைவருக்குமே தெரியும். அவ்வளவு சிறப்பு மிகுந்த மகாலட்சுமி தாயாரை நாம் பல வழிமுறைகளில் வழிபாடு செய்வோம். எவ்வளவு வழிபாடுகள் செய்தும் நமக்கு கஷ்டங்கள் தீரவில்லை, பணத்தேவை பூர்த்தியடையவில்லை, பண வரவு அதிகரிக்கவில்லை, பணம் வீண் விரயம் ஆகிக்கொண்டே இருக்கிறது என்று நினைப்பவர்கள் வெள்ளிக்கிழமை, பௌர்ணமி, அமாவாசை போன்ற தினங்களில் மகாலட்சுமியின் இந்த 27 நாமங்களை முழுமனதோடு கூறி வழிபாடு செய்தாலே தீராத பணக்கஷ்டமும் தீர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதற்கு நாம் மகாலட்சுமி தாயாருக்கு ஒரே ஒரு தாமரைப் பூவாவது வாங்கி அவருடைய பாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அடுத்ததாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு நெய்வேத்தியமாக ஏதாவது ஒரு இனிப்பு பொருளை வைக்க வேண்டும். மகாலட்சுமி தாயாருக்கு மாதுளம் பழம் என்பது மிகவும் பிடிக்கும் என்பதால் மாதுளம் பழம் முத்துக்களை உதிர்த்து ஒரு கிண்ணத்தில் வைத்து நெய்வேத்தியமாக வைக்கலாம். இப்படி வைத்துவிட்டு மகாலட்சுமியின் 27 நாமங்களை கூற வேண்டும். இந்த நாமங்களை கூறும் பொழுது மல்லிகை பூவால் அர்ச்சனை செய்யலாம் அல்லது குங்குமத்தால் அர்ச்சனை செய்யலாம் அல்லது மஞ்சளால் அர்ச்சனை செய்யலாம் அல்லது அட்சதையால் அர்ச்சனை செய்யலாம்.

மகாலட்சுமியின் நாமங்கள்

- Advertisement -

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் த்வீபலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் த்யாப்ரதாயை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தனலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தேனுலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தனப்ரதாயை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தர்மலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தைர்யலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் த்ரவ்யலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் த்ருதிப்ரதாயை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நபோலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நாதலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நேத்ரலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நயப்ரதாயை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நாட்யலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நீதிலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நித்யலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நிதிப்ரதாயை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் பூர்ணலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் புஷ்பலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் பஸூப்ரதாயை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் புஷ்டிலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் பத்மலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் பூதலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ப்ரஜாப்ரதாயை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ப்ராணலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ப்ராபாலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ப்ரஜ்ஞாலக்ஷ்ம்யை நமஹ

இதையும் படிக்கலாமே:கடன் இல்லாத வாழ்க்கை வாழ வழிபாடு

மகாலட்சுமி தாயாரின் 27 நாமங்களை முழு மனதோடு மகாலட்சுமி தாயாரை நினைத்து கூறுபவர்களுக்கு தீராத பண கஷ்டமும் தீர்ந்து நல்ல செல்வ செழிப்புடன் வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்