இந்த ஐப்பசி மாதத்தை குபேரர் மாதம் என்றும் சொல்லுவார்கள். குபேரருக்கு பணத்தை கொடுத்தவர் யார் என்ற வரலாறை கொஞ்சம் புரட்டி பார்த்தால் ஐஸ்வர்யேஸ்வரர் தான் என்பது நமக்கு புரியும். இந்த பூமியில் இருக்கும் அனைவருக்கும் ஐஸ்வர்யத்தை கொடுத்தவர், இந்த குபேரருக்கும் ஐஸ்வர்யத்தை கொடுத்தவர் ஈசன் தான்.
ஆகவே ஈசனை வழிபாடு செய்தால் குபேரரின் அருள் கடாட்சத்தை சுலபமாக நம்மால் பெற முடியும். ஐஸ்வர்ய கடாட்சத்தையும் சுலபமாக நம்மால் பெற முடியும். குபேரருக்கு உகந்த இந்த ஐப்பசி மாதத்தில் சிவன் கோவிலுக்கு செய்ய வேண்டிய தானங்கள் என்னென்ன. சிவன் மனது குளிரும் போது, குபேரருது மனது சந்தோஷப்பட்டு நமக்கான பணம் நம் கையை வந்து சேரும். இதுதான் இந்த பரிகாரத்தில் மறைந்திருக்கும் சூட்சமம்.
ஐப்பசி மாதம் சிவன் வழிபாடு
கட்டாயம் சிவபெருமான் மனம் குளிர வேண்டும் என்றால் அவருக்கு நீங்கள் வில்வ இலைகளை இந்த ஐப்பசி மாதம் திங்கட்கிழமையில் வாங்கி தானமாக கொடுக்க வேண்டும். இது கட்டாயம். இது தவிர சிவன் கோவிலுக்கு பசு சான விபூதி, பஞ்சகவ்ய விளக்கு, வாசனை மிகுந்த சாம்பிராணி தூபம், நல்லெண்ணெய், இப்படி உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி தானமாக கொடுக்கலாம்.
இது அல்லாமல் சிவன் கோவில் குருக்களை போய் கேளுங்கள். அந்த கோவிலுக்கு என்ன பொருள் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது என்று. சில கோவில்களில் லைட் எரியாமல் இருக்கும். குழாயில் தண்ணீர் வராமல் இருக்கும். அந்த கோவிலை சுற்றி பக்தர்கள் வலம் வர முடியாமல் செடி, கொடிகள் வளர்ந்திருக்கும். பாதை கல்லும் முள்ளும் மோசமாக இருக்கும்.
அதையெல்லாம் சரி செய்தாலும் உங்களுக்கு புண்ணியம் வந்து சேரும். சிவபெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும். உங்களுடைய பணப் பிரச்சனை எல்லாம் தீரும். மேல் சொன்ன அத்தனை விஷயங்களையும் ஒரு மனிதரால் செய்ய முடியாது. உங்களால் எது முடியுமோ, ஏதோ ஒரு எளிய பரிகாரத்தை சிவன் கோவிலுக்கு உங்கள் கையால் செய்யுங்கள்.
நாளைய தினம் 21.10.2024 ஐப்பசி மாதத்தின் முதல் திங்கட்கிழமை வரவிருக்கின்றது. வாய்ப்பு கிடைத்தால் மேல் சொன்ன வழிபாட்டு முறைகளை, பரிகாரங்களை பின்பற்றி பலன் பெறுங்கள். அப்படியே வில்வ இலைகளை வாங்கி சிவபெருமானுக்கு கொடுத்து, உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொண்டீர்கள். சிறிது நேரம் அந்த சிவன் கோவிலில் அமர்ந்து ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை சில நிமிடங்கள் சொல்லிவிட்டு வாருங்கள். அது உங்களுக்கு புண்ணியத்தை சேர்க்கும்.
இதையும் படிக்கலாமே: பிரகாசமான வாழ்க்கையை தரும் தீபலட்சுமி வழிபாடு
வாழ்நாளில் இறுதி கட்டத்தில் சிவபெருமானின் பாதத்தில் சென்றடைய ஒரு வழியையும் காண்பித்துக் கொடுக்கும். இந்த திங்கட்கிழமை இந்த பரிகாரத்தையும் வழிபாட்டையும் மேற்கொள்ள முடியாது என்பவர்கள் அடுத்தடுத்து வரக்கூடிய ஐப்பசி மாத திங்கட்கிழமையும் இந்த வழிபாட்டை மேற்கொண்டு சிவபெருமானின் ஆசியை பெறலாம். கூடவே குபேரர் உங்களுக்கு செல்வ வளத்தை கேட்காமலேயே வாரி வாரி கொடுத்து விடுவார் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் மேல் சொன்ன ஆன்மீகம் பரிகாரங்களை செய்து பலன் பெறலாம்.