ஐப்பசி பௌர்ணமியில் சோடசக்கலை நேரம் என்ன? இந்த 2 மணி நேரம் நீங்கள் இதை செய்தால் உங்கள் வாழ்க்கையே மாறிவிடுமா?

pournami-thiyanam-siva-vilam
- Advertisement -

ஐப்பசி பௌர்ணமி திதியை அன்ன பௌர்ணமி என்று குறிப்பிட்டு கூறுவார்கள். மேலும் ஐப்பசி பவுர்ணமி மிகவும் விசேஷமானது. இன்னாளில் வரக் கூடிய சோடசக்கலை நேரம் அற்புத சக்திகளை நமக்கு அள்ளிக் கொடுக்கக் கூடியது. எனவே இந்த நாளை தவறவிடாமல் சிவ வழிபாடு மேற்கொள்வதும், சோடசகலை நேரத்தை குறித்து வைத்து, அந்த நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டியதும் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

munivar

ஐப்பசி மாதத்தில் வரும் இந்த பவுர்ணமியில் எத்தகைய வேண்டுதல்களையும் நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய அற்புத நேரம் தான் சோடசக்கலை நேரம். சோடசக்கலை நேரத்தை பயன்படுத்தி மாபெரும் முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள் தங்களுடைய குண்டலினி சக்தியை அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய மாபெரும் பலன்களைக் கொடுக்கக் கூடிய இந்த சோடசக்கலை நேரம் நாளை வர இருக்கிறது. ஒவ்வொரு பௌர்ணமி மற்றும் அமாவாசை திதியும் முடிந்த பின்பு வரும் குறிப்பிட்ட நேரத்தை சோடசக்கலை நேரம் என்கிறோம்.

- Advertisement -

இந்நேரத்தில் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து தியானம் மேற்கொள்ள வேண்டும். பின்பு நீங்கள் மனதில் என்ன வேண்டுதல்களை நினைத்தாலும் அந்த வேண்டுதல்கள் உடனே பலிக்கும் என்பது நம்முடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் நாளை ஐப்பசி மாதம், மூன்றாம் தேதி, பிலவ வருடத்தில், புதன்கிழமையில் இரவு 7.54 மணி முதல் 9.54 மணி வரையிலான இந்த இரண்டு மணி நேரம் சோடசகலை நிகழ்கிறது. இந்நேரத்தில் ரேவதி மற்றும் அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் வழிபடுவது சிறப்பு பலன்களை பெறுவதற்கு வழிவகுக்கும்.

lingam-vilva-archanai

இன்றைய நாளில் சிவபெருமான் படத்திற்கு அலங்காரம் செய்து வில்வ இலைகளால் அர்ச்சிப்பது இன்னும் நமக்கு விசேஷமான பலன்களை கொடுக்கும். சிவபெருமானுக்கு உகந்த தயிர் சாதத்தை நைவேத்தியம் வைக்கலாம். எத்தகைய பாவங்களும் நீங்கி நல்வாழ்வு பெற வில்வார்ச்சனை கட்டாயம் சிறந்த பரிகாரமாக இருக்கும். ஒருவருடைய உடலும் ,மனமும் சோர்ந்து காணப்பட்டால் அவர்கள் இந்த பௌர்ணமியில் சிவபெருமான் வழிபாடு மேற்கொள்ளலாம். எத்தகைய தீராத பிணியையும் தீர்த்து வைக்கக் கூடிய இந்த ஐப்பசி பவுர்ணமியில் சிவனுக்குரிய மந்திரங்களை உச்சரிப்பது நல்லது. எந்த மந்திரமும் தெரியாதவர்கள், ‘ஓம் நமச்சிவாய’ என்கிற இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை உச்சரித்து பலன் பெறலாம்.

- Advertisement -

மாலையில் குளித்து முடித்து சோடசக்கலை நேரம் ஆக இருக்கும் 7.54 மணிக்கு உங்கள் வீட்டின் பூஜை அறையில் அமைதியாக அமர்ந்து தியானம் மேற்கொள்வது நல்லது. தியானத்தில் முழுவதுமாக நீங்கள் என்ன விஷயத்தில் இருந்து வெளியில் வர நினைக்கிறீர்கள்? உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை பட்டியலிடுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை பிரபஞ்சத்தில் இருக்கின்றன. ஒருவருக்கு இருக்கும் பிரச்சினை இன்னொருவருக்கு இருப்பதில்லை. ஒருவருக்கு கடன் பிரச்சினை என்றால், ஒருவருக்கு குடும்பத்தில் பிரச்சனை இருக்கும்.

mantra-thiyanam

இப்படி அவரவர் பிரச்சினைக்கு ஏற்ப வேண்டுதல்களை வைக்க வேண்டும். குறிப்பாக சோடசகலை நேரத்தில் கடன் பிரச்சனை தீர வழிபடுவது வழக்கம். எத்தகைய தீராத கடன் தீர இந்த இரண்டு மணி நேரம் அமைதியாக தியானத்தில் உங்கள் கடன் தீர வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்வது அற்புத பலன்களை கொடுக்கும். நீங்கள் தியானம் மேற்கொள்ளும் பொழுது வடக்கு திசையை நோக்கி அமர வேண்டும். தியானம் முடிந்த பின்பு நைவேத்தியமாக வைத்த தயிர் சாதத்தை பைரவர் வாகனம் ஆகிய நாய்களுக்கு படைக்கப் எத்தகைய பகைவர்களும் தலைதெறிக்க ஓடுவர்.

- Advertisement -