Bharti Airtel : டேட்டா என்றால் இனி ஏர்டெல் தான். வாடிக்கையாளர்களை கவரும் சலுகையின் முழுவிவரம் – லிஸ்ட் இதோ

Airtel

இந்தியாவின் முன்னணி நிறுவனமான பாரதி ஏர்டெல் பலவருடங்களாக தொலைபேசி சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியா முழுவதும் ஏர்டெல் நிறுவனத்திற்கு எண்ணற்ற பயனாளர்கள் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். இந்தியாவில் இப்போது ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால் அதற்கு ஏற்றார் போன்று அனைத்து சிம் நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சலுகையினை அளித்து வருகின்றனர்.

airtel 1

தொடர்ச்சியாக ஒரு நிறுவனம் சரியான ஒரு சலுகையினை அளித்து வருகிறது என்றால் நம் பாரதி ஏர்டெல் என்று குறிப்பிடலாம். அதனாலேயே மற்ற சிம் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் குறையத்தொடங்கிய போதும் ஏர்டெல் நிறுவனத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. தற்போது அதனை உறுதி செய்யும் வகையில் ஏர்டெல் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப டேட்டா சலுகையினை அளித்துள்ளது. அதன் முழுவிவரம் கீழே :

199 பிளான் : 199 ரூபாய்க்கு ஏர்டெல் வழங்கும் இந்த பிளான் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. கால்ஸ் அனைத்தும் இலவசம் மற்றும் ரோமிங்கும் இலவசம். 28 நாள் சலுகையின் படி நாள் ஒன்றிற்கு 1.5GB நெட் டேட்டா உங்களுக்கு தரப்பட்டுள்ளது.

399 பிளான் : 399 ரூபாய்க்கு ஏர்டெல் வழங்கும் இந்த பிளான் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. கால்ஸ் அனைத்தும் இலவசம் மற்றும் ரோமிங்கும் இலவசம். 84 நாள் சலுகையின் படி நாள் ஒன்றிற்கு 1GB நெட் டேட்டா உங்களுக்கு தரப்பட்டுள்ளது.

448 பிளான் : 448 ரூபாய்க்கு ஏர்டெல் வழங்கும் இந்த பிளான் 82 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. கால்ஸ் அனைத்தும் இலவசம் மற்றும் ரோமிங்கும் இலவசம். 82 நாள் சலுகையின் படி நாள் ஒன்றிற்கு 1.5GB நெட் டேட்டா உங்களுக்கு தரப்பட்டுள்ளது.

509 பிளான் : 509 ரூபாய்க்கு ஏர்டெல் வழங்கும் இந்த பிளான் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. கால்ஸ் அனைத்தும் இலவசம் மற்றும் ரோமிங்கும் இலவசம். 90 நாள் சலுகையின் படி நாள் ஒன்றிற்கு 1.4GB நெட் டேட்டா உங்களுக்கு தரப்பட்டுள்ளது.

airtel 2

குறிப்பு : அனைத்து பிளானுக்கும் நாள் ஒன்றிற்கு 100 இலவச மெசேஜ்கள் அனுப்பும் வசதியும் உள்ளது குறிப்பிடதக்கது.