Bharti Airtel : ஏர்டெல், வோடபோன், ஜியோ, பி.எஸ்.என்.எல், இதில் யார் ப்ரீபெய்டு பெஸ்ட் – நெட்ஒர்க் அலசல்

Network
- Advertisement -

இந்தியாவில் எப்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ வந்ததோ அப்போதிலிருந்து டெலிகாம் நெட்ஒர்க்குகள் அனைத்தும் தங்களது கட்டணத்தை குறைக்க ஆரம்பித்தனர். அப்போதிலிருந்து ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் சிறந்த சலுகைகளை பெற ஆரம்பித்தனர். இந்த பதிவில் சமீபத்திய ப்ரீபெய்டு பிளானில் எந்த நெட்ஒர்க் சிறந்த ஆஃபர்களை வழங்குகிறது என்று பாப்போம். அனைத்து நெட்ஒர்க் ஆஃபர்களின் முழுவிவரம் இதோ :

Vodafone

வோடபோன் 169 ரூபாய் ப்ரீபெய்டு பிளான் : இந்த பிளான் மூலம் வோடபோன் வாடிக்கையாளர்கள் அளவில்லா கால்ஸ் மற்றும் 1GB டேட்டா தினமும் பயன்படுத்தலாம். இந்த பிளான் 28 நாட்கள் வரை செல்லுபடியாகும். தினமும் 100 மெசேஜ்கள் வரை அனுப்பலாம். மேலும் லைவ் டிவி மற்றும் படங்கள் மற்றும் வோடபோன் பிளே ஆப் ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.

- Advertisement -

வோடபோன் 199 ரூபாய் ப்ரீபெய்டு பிளான் : இந்த பிளான் மூலம் வோடபோன் வாடிக்கையாளர்கள் அளவில்லா கால்ஸ் மற்றும் 1.5GB டேட்டா தினமும் பயன்படுத்தலாம். இந்த பிளான் 28 நாட்கள் வரை செல்லுபடியாகும். தினமும் 100 மெசேஜ்கள் வரை அனுப்பலாம். மேலும் லைவ் டிவி மற்றும் படங்கள் மற்றும் வோடபோன் பிளே ஆப் ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.

airtel 1

ஏர்டெல் 169 ரூபாய் ப்ரீபெய்டு பிளான் : இந்த பிளான் மூலம் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அளவில்லா கால்ஸ் மற்றும் 1GB டேட்டா தினமும் பயன்படுத்தலாம். இந்த பிளான் 28 நாட்கள் வரை செல்லுபடியாகும். தினமும் 100 மெசேஜ்கள் வரை அனுப்பலாம். மேலும் ஏர்டெல் டிவி போன்ற செயலிகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

- Advertisement -

ஏர்டெல் 199 ரூபாய் ப்ரீபெய்டு பிளான் : இந்த பிளான் மூலம் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அளவில்லா கால்ஸ் மற்றும் 1.5GB டேட்டா தினமும் பயன்படுத்தலாம். இந்த பிளான் 28 நாட்கள் வரை செல்லுபடியாகும். தினமும் 100 மெசேஜ்கள் வரை அனுப்பலாம். மேலும் ஏர்டெல் டிவி போன்ற செயலிகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

Jio

ஜியோ 149 ரூபாய் ப்ரீபெய்டு பிளான் : இந்த பிளான் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பலனை அளிக்கும். இந்த பிளான் மூலம் வாடிக்கையாளர்கள் 42GB வரை டேட்டாவை பயன்படுத்தலாம். தினமும் 1.5GB என 28 நாட்களுக்கு இந்த பிளான் செல்லுபடியாகும். மேலும், இலவச கால்ஸ் மற்றும் 100 மெசேஜ்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் ஜியோவின் அனைத்து சேவைகளையும் பயன்படுத்தி கொள்ளலாம்.

ஜியோ 198 ரூபாய் ப்ரீபெய்டு பிளான் : இந்த பிளான் மூலம் ஜியோ வாடிக்கையாளர்கள் 56GB வரை டேட்டாவை பயன்படுத்தலாம். தினமும் 2GB என 28 நாட்களுக்கு இந்த பிளான் செல்லுபடியாகும். மேலும், இலவச கால்ஸ் மற்றும் 100 மெசேஜ்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் ஜியோவின் அனைத்து சேவைகளையும் பயன்படுத்தி கொள்ளலாம்.

Bsnl

பி.எஸ்.என்.எல் 186 ரூபாய் ப்ரீபெய்டு பிளான் : இந்த பிளான் மூலம் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் 28 நாட்களுக்கு இலவச கால்ஸ் மற்றும் 100 மெசேஜ்கள் மேலும் தினமும் 1 GB டேட்டாவினை பயன்படுத்திக்கொள்ளலாம். ஒருவேளை 1GB டேட்டா தீர்ந்தபின் 2.2GB வரை குறைவான வேகம் கொண்ட டேட்டாவினை பயன்படுத்தி கொள்ளலாம்.

- Advertisement -