- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஐஸ்வர்யத்தை அள்ளித் தரும் ஆகாச தீபம்

ஐஸ்வர்யத்தை அள்ளித் தரும் ஆகாச தீபம்

- Advertisement -

ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பு மிகுந்த மாதம் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட மாதங்களில் தீபத்திற்கு பிரசித்தி பெற்ற மாதமாக திகழ்வதுதான் கார்த்திகை மாதம். கார்த்திகை மாதம் முழுவதுமே நம்முடைய வீட்டில் மாலை நேரத்தில் நிலை வாசலில் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்யும் வழக்கத்தை பலரும் வைத்திருப்பார்கள். இருப்பினும் ஐஸ்வர்யத்தை வாரி வழங்கக்கூடிய ஆகாச தீபத்தை ஏற்றும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆகாச தீபம் வழிபாடு

எட்டுத்திக்குகளுக்கும் நன்றி செலுத்தும் விதத்தில் ஒரு மாதம் முழுவதும் அதாவது தொடர்ச்சியாக 30 நாட்கள் வரை இந்த ஆகாச தீபத்தை நாம் ஏற்றி வைத்து வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான வறுமை சூழ்நிலையும் மாறி மகாலட்சுமியின் அருளால் செல்வ செழிப்புடன் வாழ முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் எட்டு திக்குகளிலும் இருக்கக்கூடிய அனைத்து விதமான தடைகளும் விலகும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த தீபத்தை ஐப்பசி மாத அமாவாசை முடிந்த மறுநாள் அன்று தொடங்கி கார்த்திகை மாதம் அமாவாசைக்கு முதல் நாள் வரை ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஈசானிய மூலையில் ஏற்ற வேண்டும். அதாவது வடகிழக்கு மூலையில் ஏற்ற வேண்டும். பொதுவாக இந்த தீபத்தை வீட்டிற்கு வெளியே வடகிழக்கு மூலையில் தான் ஏற்ற வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் இந்த நேரத்தில் அதிக அளவில் காற்றும் மழையும் இருக்கும் என்பதால் நாம் இதை நம்முடைய வீட்டிற்குள் இருக்கக்கூடிய வடகிழக்கு மூலையில் ஏற்றலாம்.

வடகிழக்கு மூலையை சுத்தம் செய்து அதற்கு மேல் ஒரு மனைப் பலகையை போட்டு அந்த மனை பலகைக்கு மேல் எட்டு இதழ்களைக் கொண்ட தாமரை பூவை பச்சரிசி மாவினால் கோலமாக போட வேண்டும். அந்த மனைப் பலகையின் நான்கு மூலைகளிலும் மஞ்சள் குங்குமம் வைத்து மலர்களையும் வைக்க வேண்டும். இப்பொழுது அந்த கோலத்திற்கு நடுவே ஒரு தட்டை வைத்து அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள். அந்த அகல் விளக்கிற்கு மேல் மற்றும் ஒரு அகல் விளக்கை வைக்க வேண்டும். இந்த அகல் விளக்கு சற்று பெரியதாக இருக்க வேண்டும்.

- Advertisement -

இந்த அகல் விளக்கில் எட்டு திசைகளையும் பார்த்தவாறு 8 திரிகளைப் போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை அக்டோபர் மாதம் 22ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு ஏற்ற வேண்டும். அக்டோபர் மாதம் 22ஆம் தேதியில் இருந்து தொடர்ச்சியாக 30 நாட்கள் இந்த தீபத்தை மாலை 6:00 மணிக்கு ஏற்ற வேண்டும். தினமுமே மனைப்பலகையை சுத்தம் செய்து விளக்கையும் சுத்தம் செய்து புதிதாக ஏற்றுவது போல் ஏற்ற வேண்டும். இப்படி ஏற்றுவதன் மூலம் மகாலட்சுமியின் அருளால் ஐஸ்வர்யம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட சஷ்டி முதல் நாள் பரிகாரம்

மகாலட்சுமியின் பரிபூரணமான அருளை பெற்று செல்வ செழிப்புடன் வாழ்வதற்காக ஏற்றக்கூடிய இந்த ஆகாச தீபத்தை நாமும் முழுமனதோடு ஏற்றி மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்