அஜீரண கோளாறை போக்க உதவும் பாட்டி வைத்தியம்

2119
Ajeeranam
- விளம்பரம் -

இன்றைய கால இளஞ்சர்கள் பலருக்கு அஜீரணம் என்பது அடிக்கடி வரக்கூடிய ஒரு கோளாறாக இருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது தூக்கமின்மையே. அது தவிர அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வில்லை என்றாலும், எளிதாத ஜீரணம் ஆகாத உணவை அதிகம் சாப்பிட்டாலும் அஜீரண கோளாறு வர வாய்ப்புள்ளது. அசிடிட்டி ஏற்படுவதற்கும் இதுவே முக்கிய காரணம். சித்த மருத்துவம் மூலமாக அஜீரண கோளாறை போக்க சில அறிய குறிப்புகளை இங்கு பார்ப்போம்.

siddha vaithiyam

குறிப்பு 1
ஒன்றரை டம்ளர் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் இஞ்சி, சீரகம், கருவேப்பிலை ஆகிய மூன்றையும் போட்டு கொதிக்கவைத்து பின் வடிகட்டி அந்த நீரை குடித்தால் அஜீரண கோளாறு பறந்து போகும்.

- Advertisement -

குறிப்பு 2
உணவு அருந்திய பின் வெற்றிலை சாறு 2 ஸ்பூன் குடித்தால் அஜீரணம் நீங்கும். இதனாலேயே நம் முன்னோர்கள் உணவருந்திய பின் வெற்றிலை போட்டுக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

குறிப்பு 3
சாதிக்காய், சுக்கு, சீரகம் ஆகிய மூன்றையும் தலா 100கிராம் எடுத்துக்கொண்டு அதை போடி செய்து உணவருந்தும் முன்பு 2 கிராம் சாப்பிட்டு வந்தால் அஜீரணம் கோளாறு நீங்கும்.

Seeragam

குறிப்பு 4
நெல்லிக்காய் சாறில் மூன்றில் ஒரு பங்கு தேன் கலந்து காலையில் வெறும் கயிற்றில் குடித்து வர அஜீரணம் நீங்கும் அதோடு குடல் வலுவடையும்.

குறிப்பு 5
சுக்கு, மிளகு, திப்பிலி, பெரும்காயம் ஆகிய நான்கையும் சம அளவில் எடுத்துக்கொண்டு பொரித்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் சிறிதளவு சாப்பிட்டு வர அஜீரணம் கோளாறு அகலும் அதோடு வாய்வு தொல்லையும் நீங்கும்.

Milagu

இதையும் படிக்கலாமே:
வாய் துர்நாற்றம் நீங்க பாட்டி வைத்திய முறை

இது போன்ற மேலும் பல சித்த மருத்துவ குறிப்புகள், ஆன்மிக தகவல்கள், ஜோதிடம் சம்மந்தமான தகவல்களை அறிய தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

Advertisement