அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க முடியாதவர்கள் இதை வாங்கினால் கூட போதும்

Akshaya thiruthiyai 2023 Tamil
- Advertisement -

பொதுவாக அட்சய திருதியை என்றாலே அன்றைய தினம் சிறிதளவாவது தங்கம் வாங்க வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் விருப்பமாக உள்ளது. எனினும் தற்கால பொருளாதார சூழ்நிலையில் தங்கத்தின் விலையை பார்க்கும் பொழுது, பல குடும்பங்களில் ஒரு கிராம் தங்கம் வாங்குவது பற்றி கூட சிந்திக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க இயலாதவர்கள் வேறு என்னென்ன பொருட்களை வாங்கினால் தங்கம் வாங்கியதற்கு நிகரான அதிர்ஷ்டங்களை ஏற்படுத்தும் என்பது குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

“அட்சய” என்றால் வற்றாமல் கொடுத்துக் கொண்டே இருப்பது என பொருள். அதேபோல் “திருதியை” என்றால் அமாவாசை தினத்தில் இருந்து மூன்றாவதாக வருகின்ற திதி எனப் பொருள். மற்ற மாதங்களில் வருகின்ற வளர்பிறை, தேய்பிறைதிதிகளை போல் அல்லாமல், இந்த சித்திரை மாதத்தில் வருகின்ற வளர்பிறை திருதியை தினம் “அட்சய திருதியை” என கொண்டாடப்படுகிறது.

- Advertisement -

இந்த அட்சய திருதியை தினத்தில் மட்டும் எந்த ஒரு நல்ல காரியத்தை செய்தாலும் அது பல மடங்கு பெருகிக் கொண்டே செல்லும் என்பது ஐதீகம். எனவே தான் அன்றைய தினம் தங்கம் வாங்கினால், அது பல மடங்காக பெருகும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் பலரும் தங்கம் வாங்குகின்றனர்.

அட்சய திருதியை தினத்தில் எல்லோருமே தங்கம் வாங்க முடியுமா என்றால் முடியாது என்பது தான் எதார்த்தமான உண்மையாகும். அப்படி தங்களுக்கென சொந்தமாக தங்க நகை வாங்க இயலாதவர்கள் வேறு என்னென்ன வாங்கி வாழ்வில் அதிர்ஷ்டங்களை பெருகச் செய்யலாம் என்பதை இப்போது பார்ப்போம்.

- Advertisement -

அரிசி
நமது அன்றாட உணவு வகையாக அரிசி இருக்கிறது. நாம் உயிர் வாழ உதவும் இந்த அரிசி தானியம் கடவுளுக்கு நிகரானதாகும். எனவே அட்சய திருதியை அன்று புத்தம் புதிய அரிசியை வாங்கி வீட்டில் வைப்பதால், அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் வறுமை ஏற்படாமல், தன – தானிய சம்பத்து பெருகும். அந்த தினத்தில் புதிதாக வாங்கிய அரிசியில் இருந்து சிறிதளவு எடுத்து, யாரேனும் ஒருவருக்கு தானம் அளிப்பதால், பல மடங்கு புண்ணியங்கள் தானம் கொடுப்பவர்கள் மற்றும் அவர்களின் பரம்பரையை சேரும்.

வலம்புரி சங்கு
கடலில் இருந்து கிடைக்கக்கூடிய மற்றொரு பொருள் சங்கு. இந்த சங்கு என்பது திருமால் மற்றும் லட்சுமி தேவியின் அம்சம் பொருந்தியதாகும். அட்சய திருதியை தினத்தன்று தங்கம் வாங்க முடியாதவர்கள் புதிதான வெள்ளை நிற வலம்புரி சங்கை வாங்கி, அதற்கு மஞ்சள், குங்கும பொட்டிட்டு, வீட்டின் பூஜையறையில் வைத்து வழிபடுவதால் லட்சுமி நாராயணன் எனப்படும் திருமால் மற்றும் மகாலட்சுமியின் அருட்கடாட்சம் கிடைக்கும்.

- Advertisement -

பானை
அக்காலத்தில் நம் முன்னோர்களின் வீடுகளில் பாத்திரங்களாக இருந்தது பெரும்பாலும் மண்ணால் செய்யப்பட்ட மண்பானைகள் மற்றும் மண்சட்டிகள் தான். மண் பானைகள் என்பது பஞ்சபூத தன்மைகள் நிறைந்த ஒரு பொருளாகும். எனவே தான் திருப்பதி திருமலை வெங்கடாசலபதி திருக்கோயில் உட்பட பல திருக்கோயில்களில் மண்பாண்டங்களில் மட்டுமே பிரசாதம் அக்கோயிலின் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது. எனவே அட்சய திருதியை தினத்தன்று புதிய மண்பானைகளை வாங்கி, அதற்கு மஞ்சள் குங்கும பொட்டிட்டு, வீட்டில் வைப்பதால் பஞ்சபூத சக்திகள், திருமால் – மகாலட்சுமி தாயார் ஆகிய அனைவரின் ஆசிகளும் கிடைத்து, வீட்டில் செல்வம் செழிக்கும்.

இதையும் படிக்கலாமே: அட்சய திருதியை 2023 வழிபாடு நேரம்

சோழிகள்
அக்காலத்தில் தாயக்கட்டை ஆட்டங்களில் சோழிகளை காய்களாக பயன்படுத்தி ஆடுவார்கள். கடலில் இருந்து கிடைக்கின்ற இந்த சோழிகள் என்பது மகாலட்சுமி அம்சம் கொண்டதாகும். அட்சய திருதியை தினத்தன்று புதிதாக வெள்ளை நிற சோழிகளை வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்து, பூஜையில் லட்சுமி படத்திற்கு முன்பாக வைத்து, தீபமேற்றி, வழிபாடு செய்த பிறகு, அந்த சோழிகளை உங்களின் பணம் சேகரிக்கும் பர்ஸ், பணப்பெட்டி போன்றவற்றில் போட்டு வைப்பதால் லட்சுமி தேவியின் அருள் கிடைத்து வருமானம் பெருகும். செல்வம் சேரும்.

- Advertisement -