சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு நம்மில் எல்லோருக்குமே இருக்கிறது. ஆனால் எல்லோராலும் நினைத்தபடி சொந்த வீட்டில் குடியேற முடியவில்லை. சில பேர் வாடகை வீட்டில் தான் குடியிருப்பார்கள். ஆனால் இருக்கின்ற வாடகை வீட்டில் அத்தனை பிரச்சனை. ஒரு வருடத்தில் நான்கைந்து வீடு மாற்றக்கூடிய சூழ்நிலையும் வரும்.
சில பேர் சொந்த வீட்டை அடமானம் வைத்துவிட்டு, அந்த கடனை அடைக்க முடியாமல் சொந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலையும் இருக்கும். இப்படி உங்களுக்கு வீடு சம்பந்தமாக எந்த பிரச்சனை இருந்தாலும் சரி, இந்த ஒரு எளிமையான வழிபாட்டை செய்து பாருங்கள். ஆனால் இதற்கு நீங்கள் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும். இந்த பரிகாரம் என்ன, காத்திருக்க வேண்டிய காலம் எவ்வளவு, ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
அலமேலு மங்கை தாயார் வழிபாடு
பௌர்ணமி திதி அன்று அலமேலு மங்கையை வழிபாடு செய்தால் சொந்த வீடு கட்டும் பாக்கியம் கிடைக்கும். கீழ் திருப்பதியில் இருக்கக் கூடிய அலமேலு மங்காபுரத்தில் வீற்றிருக்கும் அலமேலு மங்கை தாயார் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். அதுவும் திங்கட்கிழமையோடு சேர்ந்து வரும் பௌர்ணமி திதி அன்று அலமேலு மங்கை தாயாருக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்து, உங்களுடைய பிரார்த்தனையை வைத்தால் வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனை எதுவாக இருந்தாலும் அடுத்த பௌர்ணமி திதிக்குள் சரியாகும் என்பது நம்பிக்கை.
இது அவ்வளவு எளிதில் சாத்தியமாக கூடிய காரியம் அல்ல. கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். ஏனென்றால் பௌர்ணமி திதி, திங்கட்கிழமை வரும் வரை காத்திருக்க வேண்டும். அதற்கு முன்பாக வீட்டிலேயே சாதாரண பௌர்ணமி நாளில் உங்கள் வீட்டில் பெருமாள் தாயாரது திருவுருவப்படம் இருந்தால், தாயாருக்கு உங்கள் கையாலேயே குங்கும அரசனை செய்து, திங்கட்கிழமையோடு வரக்கூடிய பௌர்ணமி திதி அன்று அலமேலு மங்காபுரம் வந்து தாயாரை சந்திக்க கூடிய பாக்கியத்தை கொடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டாலும், இந்த பாக்கியம் உங்களுக்கு விரைவில் கிடைக்கும்.
இந்த பரிகாரத்தை சொல்லும்போது யாருக்கும் நம்பிக்கை வராது. வீட்டில் இருந்து கிளம்பி தாயாரை பார்க்கும் வரை, அலமேலு மங்கையின் திருவுருவம் உங்கள் மன கண்களில் இருக்க வேண்டும். தாயாருடைய நாமத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். மனதை அலைபாய விடக்கூடாது.
வாகனத்தில் கோவிலுக்கு செல்லும்போது கூட தாயாரின் நினைப்போடு சென்று, தாயாருக்கு குங்கும அர்ச்சனை செய்து அந்த குங்குமத்தை திரும்பவும் பெற்று வீட்டிற்கு திரும்ப வேண்டும். சரியாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். திங்கட்கிழமை பௌர்ணமி அன்று இந்த பரிகாரத்தை செய்தால் 30 நாட்களில் உங்களுடைய பிரச்சனை தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே: வள்ளலார் ஜோதி வழிபாடு
ஆனாலும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் திங்கட்கிழமையும் பௌர்ணமி திதியும் சேர்ந்து வரும் நாள் வரை காத்திருக்காதீர்கள். வரக்கூடிய பௌர்ணமி நாளில் நீங்கள் தாயாரை நம்பிக்கையோடு வழிபாடு செய்யும் போதே உங்களுடைய பிரச்சனைகள் படிப்படியாக குறைவதை உணரலாம். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த எளிய ஆன்மீகம் பரிகாரத்தை செய்து பலன் பெறவும்.