இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட இந்த ஒரு டிஷ் இருந்தால் போதும். இதனை ஒருமுறை செய்து வைத்துக் கொண்டால் மூன்று நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்

inji-thuvayal
- Advertisement -

சமையல் என்றாலே அதில் பல வகைகள் இருக்கின்றன. காலை டீ போடுவதில் ஆரம்பித்து, இரவு உணவு சமைக்கும் வரை பலவிதமான வேலைகள் இருக்கின்றன. அதில் காலை உணவு, மதிய உணவு ,இரவு உணவு என்று மூன்று வேளையும் மூன்று விதமான உணவுகளை சமைக்க வேண்டி உள்ளது. ஏனென்றால் காலையில் சுவைத்து மதியம் பலருக்கும் பிடிப்பதில்லை. ஒவ்வொரு வேளையும் புது விதமான சுவையில் இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அவ்வாறு சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட காரசாரமாக காரக்குழம்பு, வத்தக்குழம்பு இவற்றையும், இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட சட்னி, சாம்பார் போன்றவற்றையும், சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட தக்காளி தொக்கு போன்ற சைடிஷ்களையும் தான் எதிர்பார்க்கின்றனர். ஆனால் இந்த ஒரு டிஷ்ஷை மட்டும் ஒரு முறை செய்து பாருங்கள். இதன் சுவை அனைத்து வகையான உணவுகளுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
இஞ்சி – 200 கிராம், எண்ணெய் – 7 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், வரமிளகாய் – 10, புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், வெல்லம் – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் 200 கிராம் இஞ்சியை தண்ணீர் இருக்கும் கிண்ணத்தில் போட்டு, அதில் உள்ள மண் அனைத்தும் சுத்தமாக போகும் வரை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதன் மேல் உள்ள தோலை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும்.

பிறகு 10 வரமிளகாய் சேர்த்து லேசாக வறுத்து ஒரு தட்டில் மாற்றிக்கொள்ள வேண்டும். பின்னர் அதே எண்ணெயில் ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அதனையும் அதே தட்டில் மாற்றிக்கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் மீண்டும் மூன்று ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள இஞ்சியை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி முழுவதுமாக சுருங்கி வதக்கிய பின்னர், அதனுடன் சிறிய நெல்லிக்காயளவு புளியையும் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனையும் அதே தட்டிற்க்கு மாற்றி, அனைத்தையும் நன்றாக ஆற வைக்க வேண்டும்.

பிறகு இவை அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் கால் கப் தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெயை சேர்க்க வேண்டும். பிறகு இதனுடன் கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, இஞ்சித் துவையலுடன் சேர்த்து கிளறி விட வேண்டும். பிறகு இதனை ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால், அனைத்து வகை உணவுடனும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். மூன்று நாட்கள் வரையிலும் கெடாமல் இருக்கும்.

- Advertisement -