விராட் கோலி “பாலோ ஆன்” தராததன் காரணம் இதுதானா – ஆலன் பார்டர்

border

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் கடந்த 26ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய முன்றாம் நடைபெற்று ஆட்டம் முடிந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 151 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 54 ரன்களுக்கு 5 விக்கட்டுகளை இழந்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 346 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

team 1

இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்ததும் போட்டியின் வர்ணனையாளர்களான ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ஆலன் பார்டர் மற்றும் மைக்கேல் கிளார்க் ஆகியோர் போட்டியின் நிலைமை குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அதில் ஆலன் பார்டர் கூறியதாவது : விராட் கோலி ஏன் ஆஸ்திரேலிய அணிக்கு “பாலோ ஆன்” குடுக்கவில்லை என்பது எனக்கு குழப்பமாக உள்ளது என்று கூறினார். மேலும் நான் விராட் கோலிக்கு இந்த குழப்பத்தினை ஒரு கேள்வியாக முன்வைக்கிறேன்.

மேலும், ஆஸ்திரேலிய அணி 151 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தமையால் 292 ரன்கள் பின்தங்கி இருந்தார்கள். இந்திய அணியின் பந்துவீச்சு இன்று சிறப்பாக இருந்தது. ஒரு வேலை இந்திய கேப்டன் கோலி ஆஸ்திரேலிய அணிக்கு பாலோ ஆன் கொடுத்திருந்தால் தொடர்ச்சியாக இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். அதோடு மட்டுமல்லாமல் இந்திய அணியின் வெற்றிக்கும் அது பிரகாசமான வழியினை ஏற்படுத்தியிருக்கும்.

team

அதனை செய்யாமல் ஏன் இந்திய அணி 2வது இன்னிங்க்ஸை தொடர்ந்தது ஒருவேளை இந்திய அணி நாளை காலை விரைவில் ரன்களை குவித்து டிக்ளேர் செய்து அதிகநேரம் ஆஸ்திரேலியர்களை பேட்டிங் செய்ய வைத்தால் அவர்களது விக்கெட்டினை வீழ்த்திவிடலாம் என்ற யுக்தியை கையாளுகிறாரா.? என்று ஆலன் பார்டர் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

தன்னை வம்பிழுத்த ஆஸி கேப்டன் பெயினுக்கு பதில் இதுதான் – ரோஹித்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்