தன்னை வம்பிழுத்த ஆஸி கேப்டன் பெயினுக்கு பதில் இதுதான் – ரோஹித்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் (26-12-2018) 26ஆம் தேதி துவங்கியது. பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியான இதில் ஆஸ்திரேலிய டே பெற ஆக்கிரோஷமாக விளையாடும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணிவீரர்களை தொடர்ந்து சீண்டிய வண்ணம் வசைபாடி வருகின்றனர்.

rohit-2

ரோஹித் சர்மா பேட்டிங் செய்யும் போது ஸ்டம்புக்கு பின்னால் இருந்து ரோஹித் சர்மாவினை பார்த்து அவரது பேட்டிங் குறித்து விமர்சித்தார். ரோஹித் நீ சிக்ஸ் அடித்தால் நான் மும்பை அணிக்காக எனது ஆதரவினை தருகிறேன் என்று வம்பிழுத்தார். அவரை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே அவரை ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சீண்டினர். ஆனால் ரோஹித் அதனை காதில் வாங்காமல் தொடர்ந்து நிதானமாக ஆடினார்.

மேலும் ரோஹித் இதுகுறித்து எதிர்முனையில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ரஹானேவிடம் பேசியுள்ளார்.
ரோஹித் ரஹானேவிடம் கூறியதாவது :பெயின் இந்த போட்டியில் சதமடித்தால் நான் எனது அணியான மும்பை இந்தியன்ஸ் உரிமையாளரிடம் பேசி அவரை ஏலம் எடுக்க சொல்லவேன். இதுவே என்னை சீண்டிய பெயினுக்கு எனது பதில் என்று நகைச்சுவையாக ரஹானேவிடம் உரையாடியுள்ளார்.

rohith Hit

டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் விளையாடிவரும் ரோஹித் தனது பொறுமையினை இழக்காமல் விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பெயின் இந்திய வீரர்களை இந்த போட்டியில் வசைபாடுவது மிகவும் அதிகம் என்று இந்திய ரசிகர்கள் இணையதளத்தில் பதிவிட்டு வரும் நிலையில் ரோஹித்தின் இந்த நகைச்சுவையான உரையாடல் ரசிகர்களிடையே வரவேற்பினை பெற்றுள்ளது.

இதையும் படிக்கலாமே :

இந்திய அணியை சேர்ந்த இவரே அடுத்த சில மாதத்தில் உலகின் நம்பர் 1 பவுலர்- கிளார்க் கணிப்பு

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்