வட இந்தியர்கள் செய்யும் சப்பாத்தியே தோத்துப்போகும். இதோட டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும். 20 நிமிடத்தில் சூப்பரான ‘ஆலு பராத்தா’ செய்வது எப்படி?

chappathi3
- Advertisement -

எவ்வளவு நாளைக்குத் தான் இட்லி தோசை சப்பாத்தியை சாதாரணமாக சாப்பிடுவது. ஒரு முறை இந்த வித்தியாசமான ரெசிபியை ட்ரை பண்ணித்தான் பாருங்களேன். சிலபேர் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பார்க்காதீங்க, சரியா வரல அப்படின்னு சொல்றாங்க. ஆனா சரியான பக்குவத்தில் மாவை கரைத்து, ட்ரை பண்ணுங்க. நிச்சயமா சூப்பராக வரும். சுலபமான முறையில் ஆலு பரோட்டா எப்படி செய்வது என்பதை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மாவு பிசைய வேண்டாம். திரட்ட வேண்டாம். கஷ்டப்பட்டு சுட்டு எடுக்க வேண்டாம்.

chappathi4

முதலில் ஒரு மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து தோல் உரித்து துருவிக் கொள்ள வேண்டும். இந்த துருவிய உருளைக்கிழங்குடன் சில்லி ப்ளேக்ஸ் – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்த மல்லித்தழை – 1 டேபிள்ஸ்பூன், ஆயில் – 1 ஸ்பூன், உப்பு தேவையான அளவு இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து உங்கள் கைகளை வைத்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கு கட்டி பிடிக்கக் கூடாது. எல்லா மசாலாப் பொருட்களும் உருளைக்கிழங்குடன் சேர்ந்திருக்க வேண்டும். (சில்லி ஃப்ளேக்ஸ் இல்லாதவர்கள் மிளகாயை மிக்ஸியில் போட்டு பல்ஸ் பட்டனில் ஓட்டி சேர்த்துக்கொள்ளலாம்.)

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு அகலமான பவுளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 1 கப் அளவு கோதுமை மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். 250 கிராம் கோதுமை மாவு. 1 கப் கோதுமை மாவுக்கு 1 & 1/3 கப் தண்ணீர் சரியாக இருக்கும். இந்த மாவுக்கு தேவையான அளவு உப்பை மட்டும் போட்டு கொண்டு தண்ணீரை ஊற்றி கட்டி படாமல் மாவை கரைக்க வேண்டும்.

chappathi5

அடுத்தபடியாக பிசைந்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மசாலாவை இந்த மாவோடு சேர்த்து கட்டி படாமல் கரைக்க வேண்டும். தண்ணீர் ஊற்ற வேண்டாம். இந்த தண்ணீரே போதுமானது. ஒரு சப்பாத்தியை தோசைக்கல்லில் ஊற்றி, சரியாக வரவில்லை என்றால், தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

கடாயை சூடுபடுத்தி அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை இதற்கு நான்ஸ்டிக் கடாயை பயன்படுத்துவது நல்லது. இல்லாதவர்கள் சாதாரண தோசைகளும் செய்யலாம். தயாராக இருக்கும் மாவை ஒரு குழி கரண்டி அளவு எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி விடவேண்டும். அடுப்பு சிம்மில் தான் இருக்க வேண்டும்.

chappathi6

சப்பாத்தி மேல்பக்கம் வெந்து நிறம் மாறியதும், சப்பாத்தியை திருப்பி போட்டு வேக வைத்து, மீண்டும் மீண்டும் திருப்பி போட்டு கொண்டே இருக்கவேண்டும். இரண்டு பக்கமும் நன்றாக வெந்தவுடன், ஒரு கரண்டியை வைத்து சப்பாத்தியின் ஓரங்களை மட்டும் அழுத்தம் கொடுத்து எடுத்தால் உப்பிய ஆலு பராத்தா தயாராகி வரும்.

chappathi8

இறுதியாக தேவைப்பட்டால் நெய் அல்லது வெண்ணெய் தடவி, எடுத்து பரிமாறி பாருங்கள். வட இந்தியர்கள் செய்யும் சப்பாத்தி தோற்றுப்போனது போங்க. அந்த அளவிற்கு சூப்பரான ரெசிபி இது. கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க. முதல் சப்பாத்தி சரியாக வரவில்லை என்றால், மீண்டும் மீண்டும் முயற்சி செய்யும்போது நிச்சயம் சரியாக வரும். உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -