உங்களுடைய கன்னங்கள் எப்போதும் பேபி சாஃப்ட் கன்னங்களாகவே இருக்க வேண்டுமா? இந்த ஒரு ஐஸ் கட்டி இருந்தால் போதும். மாசு மறு இல்லாத பளபளக்கும் பளிங்கு கன்னங்களை பெறலாம்.

face10
- Advertisement -

எல்லோருக்கும் பேபி சாஃப்ட்டாக கன்னங்கள் வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் கன்னத்தில் மாசு மங்கு மரு போன்ற பிரச்சனைகள் இருந்தால், பேபி சாஃப்ட் கன்னங்கள் கனவாகவே தான் இருக்கும். சில பேருக்கு ஓபன் போர் என்று சொல்லப்படும் சின்ன சின்ன ஓட்டைகள் கூட அழகை குறைக்கும். இப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து எல்லாம் படிப்படியாக குணமாக, பேபி சாஃப்ட் கன்னங்கள் வேண்டும் என்ற கனவு நினைவாக, இந்த ஐஸ் க்யூப் மசாஜ் உங்களுக்கு ரொம்பவும் உதவியாக இருக்கும். எளிமையான முறையில் இந்த ஐஸ் கியூபை எப்படி தயார் செய்வது, அதை வைத்து எப்படி முகத்தில் மசாஜ் செய்வது கொள்வது என்பதைப் பற்றிய அழகு குறிப்பு இதோ உங்களுக்காக.

அழகான கன்னங்கள் பெற ஐஸ் கியூப் மசாஜ்:
இந்த ஐஸ் கியூப் தயார் செய்ய நமக்கு இரண்டு பொருட்கள் தேவை. ஆலுவேரா ஜெல், அரிசி ஊற வைத்த தண்ணீர். ஃபிரஷ் கற்றாழையாக எடுத்து அதன் உள்ளே இருக்கும் ஜெல்லை சுடுதண்ணீரில் இரண்டு முறை நன்றாக கழுவி விடுங்கள். பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்தால் சூப்பரான அலோவேரா ஜெல் நமக்கு கிடைத்திருக்கும்.

- Advertisement -

பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் அரிசி போட்டு, அதை இரண்டு முறை நன்றாக கழுவி விட்டு, பிறகு நல்ல தண்ணீரை ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைத்தால் அரிசி ஊறிய தண்ணீரும் நமக்கு கிடைக்கும். இப்போது மிக்ஸி ஜாரில் எடுத்து வைத்திருக்கும் அலோவேரா ஜெல், ஊற வைத்து எடுத்து வைத்திருக்கும் அரிசி கலைந்த தண்ணீரை ஊற்றி, ஒரு ஓட்டு ஓட்டினால் சூப்பரான ஆலுவேரா ஜெல் ரைஸ் வாட்டர் தயார்.

இதை இப்போது ஐஸ் ட்ரைவில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். சில மணி நேரம் கழித்து சூப்பரான ஐஸ்க்யூப்கள் நமக்கு கிடைக்கும். இரவு நீங்கள் தூங்க செல்வதற்கு முன்பாக இதில் இருந்து ஒரு ஐஸ் கட்டியை எடுத்து வெள்ளைத் துணியில் வைத்து உங்களுடைய மேக்கப் இல்லாத சுத்தமான முகத்தில் ஒத்தி ஒத்தி எடுக்க வேண்டும். எப்போதுமே ஐஸ் கட்டியை அப்படியே முகத்தில் வைத்து தேய்க்க கூடாது. ஒத்தடம் தான் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

உங்களுடைய கன்னங்கள், நெற்றி, தாடை பகுதி, கழுத்து என்று லேசாக ஒத்தடம் கொடுத்து எடுப்பது போல் ஐஸ் கியூபை முகத்தில் வைத்து எடுக்க வேண்டும். நேரடியாக ஐஸ் கியூபை சருமத்தில் வைக்காதீங்க. எப்போதுமே வெள்ளைத் துணியில் சுற்றி தான் ஐஸ் கியூபை முகத்தில் வைக்க வேண்டும். 15 நிமிடங்கள் அந்த ஐஸ் க்யூப் கரையும் வரை இப்படி முகத்தை லேசாக மசாஜ் செய்து விட்டு, அப்படியே விட்டு விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: கருப்பா இருந்தாலும் கலையாகி வெறும் 15 நாட்களில் தங்கம் போல ஜொலிக்க சமையல் கட்டில் இருக்கும் இந்த 2 பொருள் போதுமே!

கொஞ்ச நேரம் கழித்து முகத்தில் இருக்கும் அந்த ஈரம் காய்ந்து விடும் அல்லவா. அப்போது முகத்தை விரல்களால் லேசாக அழுத்தம் கொடுத்து கொடுத்து எடுத்து மசாஜ் செய்தால், முகத்திற்கு வரக்கூடிய ரத்த ஓட்டம் சீராகும். பிறகு வெறும் தண்ணீரில் முகத்தை கழுவி விட்டு, நீங்கள் தூங்க செல்லலாம். மறுநாள் காலை உங்களுடைய முகத்தை கண்ணாடியில் பாருங்களேன். அவ்வளவு பிரஷ்ஷாக இருக்கும். முகத்தில் எந்த ஒரு வீக்கமும்(puffiness) இருக்காது. முகம் அழகாக பார்ப்பதற்கு கிலோயிங்ஆக தெரியும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் கூட இந்த மசாஜை நீங்கள் செய்து வரலாம். பிறகு ஒரு சில வாரங்களில் உங்களுடைய முகத்தில் இருக்கும் மாசு மருவெல்லாம் மறைந்து, சாஃப்ட் கன்னங்களை பெறலாம்.

- Advertisement -