கருப்பா இருந்தாலும் கலையாகி வெறும் 15 நாட்களில் தங்கம் போல ஜொலிக்க சமையல் கட்டில் இருக்கும் இந்த 2 பொருள் போதுமே!

face-pack-kadalai-paruppu
- Advertisement -

கறுத்த தேகம் உடையவர்கள் கூட கலையாக இருந்தால் எல்லோருக்கும் பிடிக்கும். முகம் கலையாக இருக்க மாசு, மரு இல்லாமல் மேடு, பள்ளங்கள், சுருக்கங்கள் எதுவும் இல்லாமல் மிருதுவாக இருக்க வேண்டும். அதற்கு நாம் என்ன செய்யலாம்? ரொம்ப சுலபமாக 15 நாட்களில் தங்கம் போல நம்முடைய சருமம் தகதகன்னு ஜொலிக்க சமையல் கட்டில் இருக்கக் கூடிய இந்த இரண்டு பொருட்கள் போதும். அது என்னென்ன? எப்படி அதை பயன்படுத்த வேண்டும்? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

நம்முடைய சருமத்தில் இருக்கும் மெலனின் என்னும் சுரப்பியை சரி செய்வதன் மூலம் இழந்த பொலிவு மற்றும் நிறம் மீண்டும் நமக்கு கிடைக்கும். சுருக்கங்களை அகற்றி, தோலினை இறுக்கமாக்கி இளமையை தக்க வைத்துக் கொள்ள உதவக் கூடிய இந்த சில பொருட்கள், நம் சமையல் கட்டிலேயே முடங்கி கிடக்கிறது. இவற்றை நாம் பயன்படுத்தினாலே போதும், பல ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

- Advertisement -

தோலில் இருக்கக் கூடிய சுருக்கங்களை விரைவாக மறைய செய்யக் கூடிய தன்மை பாசிப்பயருக்கு உண்டு. இழந்த நிறத்தை மீட்டுக் கொடுக்கக் கூடிய சக்தி கடலை பருப்புக்கு உண்டு. இந்த ரெண்டு பொருட்களும் நம் சமையல் கட்டில் இருக்கக் கூடியவை தான். 100 கிராம் பாசிப்பயறு எடுத்துக் கொண்டால், 50 கிராம் அளவிற்கு கடலைப் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவற்றை லேசாக வாணலியில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். சூடு ஏறினால் போதும், மாவு நைசாக அரைப்படுவதற்கு தான் இது! இல்லையேல் நீங்கள் இரண்டு நாட்கள் வெயிலிலும் நன்கு காய வைத்தும் எடுத்து பயன்படுத்தலாம். இதை பெரிய மிக்ஸர் ஜாரில் போட்டு நைசாக பவுடர் போல அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒருமுறை அரைத்ததும் நன்கு அரை பட்டுவிடாது எனவே சலித்து மீண்டும் மீதம் இருப்பவற்றை போட்டு அரைத்து சலித்து பயன்படுத்துங்கள். பின்னர் இதை கண்டெய்னரில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பயத்தம்மாவும், கடலைமாவும் கலந்த இந்த கலவையில் இருந்து ஒரு டீஸ்பூன் அளவிற்கு ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் அரை ஸ்பூன் அளவிற்கு கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். கஸ்தூரி மஞ்சள் தூள் நீங்கள் கடைகளில் வாங்கினாலும் சரி அல்லது அவற்றையும் வெயிலில் காய வைத்து மெஷினில் அரைத்து வைத்தாலும் சரி. பின்னர் இதனுடன் திக் பேஸ்ட் ஆக கலந்து கொள்ள தயிர் சேர்க்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
இந்த ஹேர் பேக்கை போட்டால் முடி உதிர்வதை 30 நாட்களில் நிறுத்தி விடலாம். கொத்து கொத்தாக முடி கொட்டும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கொத்தமல்லி.

இப்பொழுது இந்த கலவையை நீங்கள் முகம், கழுத்து போன்ற பகுதிகளில் முழுமையாக தடவி நன்கு உலர விட்டுக் கொள்ளுங்கள். உலர்ந்து காய்வதற்கு 20 லிருந்து 25 நிமிடம் வரை எடுக்கும். நன்கு காய்ந்து இருக ஆரம்பிக்கும். அதன் பிறகு நீங்கள் சாதாரணமான குளிர்ந்த நீரில் முகத்தை மென்மையாக மசாஜ் செய்து கழுவி விடுங்கள். அவ்வளவுதாங்க, ஒரே முறையில் உங்க முகம் பார்ப்பதற்கே பளிச்சுனு இருக்கும். இதை ஒருநாள் விட்டு ஒரு நாள் 15 நாட்கள் தொடர்ந்து செய்து வர எத்தகைய கறுத்த தேகமும் நன்கு கலையாக பொன் நிறமாக ஜொலிக்கும்.

- Advertisement -