- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆளுமை திறன் அதிகரிக்க தாயத்து

ஆளுமை திறன் அதிகரிக்க தாயத்து

- Advertisement -

இந்த அதிகாரம் அந்தஸ்து மதிப்பு மரியாதை இதெல்லாம் நம் கண்களுக்கு தெரியவே தெரியாது. ஒரு இடத்திற்கு இரண்டு பேர் ஒன்றாக செல்வோம். நம் பக்கத்தில் இருப்பவர்களை ராஜ உபச்சாரம் செய்வார்கள். ஆனால் நம்மை கண்டு கொள்ள கூட மாட்டார்கள். அப்போதுதான் இந்த அதிகாரம் அந்தஸ்து எல்லாமே நம்முடைய கண்களுக்கு தெரியும்.

அட நம்ம கூடவே இருக்கிற இவங்களுக்கு இவ்வளவு மரியாதை தராங்க. நம்மள கண்டுக்கவே மாட்டாங்களே அப்படின்ற சின்ன தாழ்வு மனப்பான்மை நம் மனதிற்குள் எழும். இது ஒரு பக்கம் இருக்கட்டும். ஒரு சிலருடைய பேச்சுக்கு கூட மரியாதையே இருக்காது. நம்ம பேசுறத கூட நாலு பேர் காது கொடுத்து கேட்க மாட்டாங்க.

- Advertisement -

சில பேர் பெரிய பெரிய பதவியில் இருப்பாங்க ஆனாலும் அவர்களுடைய சொல்லுக்கு மரியாதை இருக்காது. இப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் நீங்கள் எதிர் கொண்டால், உங்களுக்கும் ஆளுமை திறன், அதிகரிக்க வேண்டும் என்றால், என்ன செய்வது. ஆன்மீகம் சார்ந்த ஒரு எளிய பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஆளுமை திறன் அதிகரிக்க பரிகாரம்

ஆளுமை, அதிகாரமாக மாற்றப்படக் கூடாது. ஆளுமை இருக்கிறது என்பதற்காக அதை குறுக்கு வழியில் நாம் பயன்படுத்தக் கூடாது, நம்முடைய பவரை வைத்து அடுத்தவர்களை அடிமைத்தனம் செய்யக்கூடாது, என்ற தகவலையும் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்வோம். சரி பரிகாரத்தை பார்த்து விடுவோம்.

- Advertisement -

இந்த தாயத்தை தயார் செய்ய வாழைத்தண்டு திரி, வெள்ளெரிக்கு நார், தாமரை தண்டு திரி, அரகஜா, புனுகு இந்த ஐந்து பொருட்கள் தேவை. இந்த ஐந்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வாங்கிக்கோங்க, இந்த பரிகாரத்திற்கு கட்டாயம் வெள்ளி தாயத்து தான் தேவை அதை வாங்க வேண்டும்.

ஒரு சின்ன கிண்ணத்தில் மேலே சொன்ன பொருட்களையும் ஒன்றாக போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள். அரகஜா புனுகோடு மற்றும் மூன்று பொருட்களும் நன்றாக சேர வேண்டும். தாமரை தண்டு திரி, வெள்ளருக்கு நார், வாழைத்தண்டு திரி, எல்லாம் ரொம்பவும் நீளமாக பெருசாக இருந்தால் அதிலிருந்து இரண்டு இன்ச் அளவு மட்டும் வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள் போதும்.

- Advertisement -

தாயத்துக்கு உள்ளே போகின்ற அளவு மட்டும் இந்த பொருட்களை எடுத்தால் போதும். இப்போது கலந்து வைத்திருக்கும் இந்த பொருட்களை எல்லாம் எடுத்து வெள்ளி தாயத்துக்கு உள்ளே போட்டு மூடி, ஒரு கயிறு கோர்த்து கட்டி பூஜை அறையில் வைத்து விடுங்கள். உங்கள் குலதெய்வ நாமத்தை 108 முறை சொல்லி இந்த தாயத்துக்கு உரு ஏற்றிக் கொள்ளுங்கள்.

என்னுடைய ஆளுமை திறன் அதிகரிக்க வேண்டும் என்னுடைய பேச்சுக்கு அடுத்தவர்கள் மரியாதை கொடுக்க வேண்டும் என்ற பிரார்த்தனையும் செய்யலாம் தவறு ஒன்றும் கிடையாது. இந்த தாயத்தை எடுத்து நீங்களே கழுத்தில் கட்டிக் கொள்ளலாம். இடுப்பில் கட்டிக் கொள்ளலாம் அல்லது கைகளில் புஜப் பகுதியில் கட்டிக் கொள்ளலாம் அது உங்களுடைய விருப்பம்.

பெண்கள் இதை இடுப்பில் கட்டிக் கொள்ளாதீர்கள். உங்களுடைய தாலி சரடு அல்லது செயினில் போட்டு கூட இந்த தாயத்தை கட்டிக் கொள்ளுங்கள்.  இந்த தாயத்தை கட்டிக் கொண்டால் எந்த கட்டுப்பாடும் கிடையாது நீங்கள் எப்போதும் போல இருக்கலாம்.

இந்த தாயத்தை கட்டிய பிறகு உங்களுடைய வாழ்க்கையில் நிறைய நல்ல மாற்றங்கள் வரும். ஒரு சில பேருக்கு தாயத்து அணிந்து கொள்ளும் வழக்கம் இருக்காது. அவர்கள் என்ன செய்யலாம். மேலே சொன்ன பொருட்களை எல்லாம் ஒரு மண் சட்டியில் போட்டு அதில் ஒரு கற்பூரத்தை கொளுத்திப் போட்டு, இந்த பொருளை எல்லாம் சாம்பலாக்கி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: புதன்கிழமை பிரதோஷ வழிபாடு சிறப்பு

பிறகு இந்த சாம்பலை எடுத்து ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு அதில் நெய் விட்டு கலந்தால் கருப்பு நிறத்தில் மை தயாராக இருக்கும் தினமும் இதை நெற்றியில் இட்டுக் கொண்டாலும் உங்களுடைய ஆளுமை திறன் அதிகரிக்கும். இதை நெற்றியில் ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் உச்சம் தலையில் தடவிக் கொள்ளலாம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்