- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபுதன்கிழமை பிரதோஷ வழிபாடு சிறப்பு

புதன்கிழமை பிரதோஷ வழிபாடு சிறப்பு

- Advertisement -

சிவ சிவ நாமத்தை நாம் சொல்லுவது ஒரு புண்ணியம் என்றால், நாம் சொன்ன சிவசிவ நாமத்தை அடுத்தவர் கேட்பது அதைவிட புண்ணியம் என்று சொல்லுவார்கள். இன்று புதன்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் பிரதோஷ நாள். இந்த நாளில் சிவபெருமானை வழிபாடு செய்வதன் மூலம் நாம் செய்த பாவங்கள் எல்லாம் தீர்ந்து நம் கஷ்டங்கள் எல்லாம் குறைந்து நம்முடைய வீட்டில் செல்வ கடாட்சம் உயரத் தொடங்கிவிடும்.

உங்கள் கஷ்டங்களுக்கு எல்லாம் முடிவு காலம் பிறக்க வேண்டுமா? உங்கள் கையால சிவபெருமானின் வாகனமான காளை மாட்டிற்கு இந்த ஒரு பொருளை மட்டும் கொடுக்க போதும். இந்த பிரதோஷத்திற்கு மட்டும் இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது. தொடர்ந்து வரும் 21 பிரதோஷ நாளில் இந்த பரிகாரத்தை செய்தால் உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போகும். ஏழேழு ஜென்மத்திற்கும் உங்களுடைய தலைமுறை தழைக்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

இன்று பிரதோஷ தின வழிபாடு

சிவபெருமானை நினைத்து, பிரதோஷ நாளான இன்று நீங்கள் விரதம் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, மாலை குளித்து விடுங்கள். கொஞ்சமாக பச்சரிசி எடுத்து, நன்றாக கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து நன்றாக வேக வைத்துக் கொள்ளுங்கள்.

கொஞ்சம் குழைய குழைய சாதம் வேகட்டும். அதை வடிக்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. கொஞ்சம் திக்கான கஞ்சி போல காய்ச்சி அதை ஆற வைத்து விட வேண்டும். மதிய நேரமே இதை நீங்கள் சுத்தபத்தமாக செய்து வைத்தாலும் தவறு கிடையாது.

- Advertisement -

பிறகு இந்த கஞ்சியில் சின்னதாக ஒரு கட்டி வெல்லம் சேர்த்து, கலந்து கொள்ளுங்கள். 6 அல்லது 8,10 வாழைப்பழம். உங்கள் சௌகரியம் தான் எத்தனை வாழைப்பழம் முடியுமோ அதை இந்த கஞ்சியோடு போட்டு இதில் இரண்டு அருகம் பிள்ளை போட்டு, கலந்து கொண்டு போய் காளை மாட்டிற்கு சாப்பிட கொடுக்க வேண்டும்

பசு மாட்டிற்கு கொடுக்கக் கூடாது. இன்றைய தினம் காலை மாட்டிற்கு இந்த பொருளை சாப்பிட கொடுப்பதுதான் உங்கள் குடும்பத்தில் இருக்கும் தோஷத்தை நீக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 21 பிரதோஷ நாளில் இந்த பரிகாரத்தை செய்தால் உங்களை பின் தொடரும் தோஷங்கள் கஷ்டங்கள் எல்லாம் விலகும்.

- Advertisement -

இந்த பிரசாதத்தை பிரதோஷ நேரமான மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் காளை மாட்டுக்கு கொடுப்பது சிறப்பு. அந்த நேரத்தில் உங்களுக்கு சௌகரியப்படவில்லை என்றால் இன்றைய தினம் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இதை காளை மாட்டுக்கு உங்கள் கையால் சாப்பிட கொடுத்து விடுங்கள்.

பிரதோஷ நேரத்தில் நந்தியம்பெருமானுக்கும் சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகங்கள் ஆராதனைகள் நடக்கும். அந்த அபிஷேக ஆராதனைக்கு உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி கொடுங்கள். பிரதோஷ நேரத்தில் வழக்கம் போல சிவன் கோவிலில் அமர்ந்து சிவபெருமானை நினைத்து தியானம் செய்வது, பிரார்த்தனை செய்வது மனநிறைவை கொடுக்கும். சந்தோஷத்தை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: முருகன் அருள் பெற வழிபாடு

இன்று புதன்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கக்கூடிய பிரதோஷ நாள் என்பதால் உங்களுடைய குழந்தைகளை கோவிலுக்கு அழைத்துச் சென்று சிவபெருமானையும் நந்தி தேவரையும் வழிபாடு செய்ய சொல்லுங்கள். பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க இன்றைய பிரதோஷ நாள் வழிபாடு அவர்களுக்கு கை கொடுக்கும். அதோடு மட்டுமல்லாமல் இன்றைய தினம் சிவன் வழிபாடு செய்வது உங்கள் வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்கும் தனம் தானியத்தை கொழிக்க செய்யும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்