வீட்டில் நீண்டநாள் பயன்பாட்டில் உள்ள கருப்பாக இருக்கும் அலுமினிய கடாயை எப்படி 10 நிமிடத்தில் புத்தம் புதியதாக மாற்றி காட்டுவது?

burnt-vessel-aluminium
- Advertisement -

நாம் வீட்டில் சமையல் அறையில் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு பொருள் என்றால் அது அலுமினிய கடாய் என்று கூறலாம். எல்லா குழம்பு வைக்கவும், பொரியல் பண்ணவும், அப்பளங்கள் பொரிக்கவும் நமக்கு அவசரத்திற்கு அலுமினிய கடாய் தான் உபயோகப்படும். நம்மிடம் என்ன தான் நான்ஸ்டிக் மற்றும் எவர்சில்வர் கடாய்கள் இருந்தாலும் நமக்கு மிகவும் பிடித்தது அலுமினிய கடாய் தான். நம்மிடம் பத்து அலுமினிய கடாய்கள் இருந்தாலும், அதில் பழைய அலுமினிய கடாயை தான் அதிகம் விரும்பி தேர்ந்தெடுத்து சமைக்க ஆரம்பிப்போம்.

burnt-vessel

ஆனால் அந்த அலுமினிய கடாய் மிகவும் கருப்பாக தேய்ந்து போய் காணப்படும். நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இருக்கும் இந்த அலுமினிய கடாய் நாம் புதிதாக வாங்கும் பொழுது எப்படி இருந்ததோ! அதே போல புத்தம் புதியதாக மாற்றி காட்ட நம் வீட்டில் இருக்கும் இந்த சில பொருட்களை பயன்படுத்தி சுத்தம் செய்தால் போதும். நமக்கு பிடித்தமான நம்முடைய அலுமினிய கடாய் புதிதாக மாற என்ன செய்யலாம்? என்பதை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

- Advertisement -

அலுமினிய கடாய் வகைகளில் எவ்வளவு இருந்தாலும் நமக்கு பழைய நன்கு குழியுள்ள கருப்படைந்த கடாய் தான் அடிக்கடி சமைப்பதற்கு மிகவும் பிடிக்கும். அந்த கடாயை நீங்கள் ஒவ்வொரு முறை கழுவும் பொழுது நன்கு தேய்த்து சுத்தம் செய்து வைத்தாலே அது நன்றாக தான் இருக்கும். ஆனால் மற்ற பாத்திரங்களை போல் சாதாரணமாக தேய்த்தால் அது நாளடைவில் கருமை அடையும். இந்த கருமை மாறவே செய்யாது. விடாப்பிடியாக இருக்கும் இந்த கருப்பு நிறம் மறைய வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.

aluminium-kadaai

முதலில் நீங்கள் பயன்படுத்த இருக்கும் கருப்படைந்த கடாய் எந்த அளவிற்கு இருக்கிறதோ! அதை விட பெரிதாக இருக்கும் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அடுப்பை பற்ற வையுங்கள். தண்ணீர் கொதித்து வந்ததும் அதில் இரண்டு டீஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடா கலந்து கொள்ளவும். பேக்கிங் சோடா போட்டதும் தண்ணீர் நுரை பொங்கி ‘விஸ்’ என சத்தம் கேட்கும். அதன் பிறகு அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் வினிகர் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் லிக்விட் ஜெல்லை இரண்டு டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது நன்கு நுரை வர ஆரம்பிக்கும்.

- Advertisement -

நுரை வரும் பொழுது அதில் அந்த கடாயை போட்டு ஊற வையுங்கள். ஒரு எலுமிச்சை பழம் மூடியை மொத்தமாக பிழிந்து விடுங்கள். இந்த எல்லா கலவையும் சேர்ந்து ஒன்றோடு ஒன்று நுரைத்து கொதிக்கும் பொழுது ரசாயன கலவைகள் மூலம் வாணலியில் இருக்கும் கருமை அனைத்தும் எளிதாக நீங்கும். அல்லது கடாயில் நன்கு ஊறி விடும். அதன் பிறகு தண்ணீர் ஆறியதும், அதில் இரும்பு நார் கொண்டு நன்றாகத் தேயுங்கள். உங்களால் எந்த அளவிற்கு முடியுமோ, அந்த அளவிற்கு அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டும். அப்படியும் விடாப்பிடியாக இருக்கும் கரைகளுக்கு மேலே நீங்கள் காய்கறி வெட்ட பயன்படுத்தும் கத்தியை கொண்டு லேசாக தேய்த்து விடுங்கள். கருமை மொத்தமும் வெளியே வந்துவிடும்.

aluminium-kadaai1

அப்படி செய்தும் உங்களுக்கு திருப்தியாக இல்லை என்றால், ஆங்காங்கே சில இடங்களில் கருமை இருக்கிறது என்றால் கொஞ்சம் உப்பு தூளுடன் சேர்த்து பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சைச்சாறு கலந்து கொள்ளுங்கள். இந்த பவுடரை கொண்டு லேசாக இரும்பு நார் கொண்டு தேய்த்து எடுத்தால் போதும், எப்பேர்ப்பட்ட விடாப்பிடியான கரையும் நீங்கி புதிதாக வாங்கிய கடாய் போல நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பளிச்சிட ஆரம்பிக்கும்.

- Advertisement -