கார்த்திகை அமாவாசை துர்கை அம்மன் வழிபாடு

durgai1
- Advertisement -

காலத்தால் தீர்த்து வைக்க முடியாத பிரச்சனைகளுக்கு, அந்த அம்பாள் தான் நல்லதொரு தீர்வினை தர முடியும். 12.12.2023 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று கார்த்திகை அமாவாசை வரவிருக்கின்றது. இந்த நாளில் உங்கள் குடும்ப கஷ்டம் தீர, தீராத துன்பங்கள் தீர, துர்க்கை அம்மன் வழிபாட்டை எப்படி மேற்கொள்வது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த பதிவு தான் இது. இந்த கலியுகத்தில் காலத்தால் தீர்க்க முடியாத நிறைய பிரச்சனைகள் இருக்கிறது.

இந்த பிரச்சனை இன்று சரியாகும். நாளை சரியாகிவிடும், என்று எதிர்பார்த்து பார்த்து நம்முடைய கண்கள் தான் பூத்து போகிறது. மனது சோர்ந்து போகிறது. ஆனால் பிரச்சனை முடிந்த பாடாக இல்லை. நீங்கள் கவலையே படாதீங்க. நாளை அமாவாசை அன்று பின் சொல்ல கூடிய முறைப்படி துர்க்கை அம்மனை போய் வழிபாடு செய்து பாருங்கள். உங்கள் கஷ்டங்களுக்கெல்லாம் நிச்சயம் விடிவுகாலம் பிறக்கும்.

- Advertisement -

கார்த்திகை அமாவாசை துர்க்கை வழிபாடு

பிரபஞ்ச சக்தியானது அமாவாசை நாளில் இந்த பூலோகத்தில் முழுமையாக பரவி இருக்கும். அந்த நேரத்தில் நாம் வைக்கக்கூடிய வேண்டுதல் சீக்கிரம் பலிக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை. வழக்கம்போல செவ்வாய்க்கிழமை காலை நேரத்தில் முன்னோர்கள் திதி தர்ப்பணம் வழிபாட்டை எல்லாம் முடித்து விடுங்கள்.

வீட்டில் முன்னோர்களுக்கு படையல் போட்டு வழிபாட்டை செய்து முடித்து விடுங்கள். முன்னோர் தர்ப்பணம் மிக மிக முக்கியம். அது நமக்கு பித்ருக்களின் ஆசிர்வாதத்தை பெற்று தரும். அடுத்தபடியாக கஷ்டங்கள் தீர துர்க்கை அம்பாள் வழிபாட்டை செவ்வாய்க்கிழமை அமாவாசை தினத்தன்று ராகு கால நேரத்தில் மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

துர்க்கை அம்மன் சன்னிதி இருக்கக்கூடிய கோவில்களில் கட்டாயமாக செவ்வாய்க்கிழமை ராகுகால நேரத்தில் பூஜை நடைபெறும் அல்லவா. இந்த அமாவாசை, செவ்வாய்க்கிழமை அன்று வந்திருப்பதால் நீங்க ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று 2 மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள்.

சிவப்பு நிற அரளி புஷ்பங்களை அம்பாளுக்கு வாங்கி செல்லுங்கள். முடிந்தால் சிவப்பு நிற குங்குமத்தை அம்பாளுக்கு வாங்கி கொடுத்து குங்கும அர்ச்சனை செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு. அமாவாசை தினத்தில் ராகு கால நேரத்தில் துர்க்கை அம்பாளுக்கும் நேர் எதிராக முட்டிப்போட்டு, மண்டியிட்டு உங்கள் பிரச்சனைகளை அம்பாளிடம் சொல்லி அந்த கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டும் என்று மனநிறைவோடு பிரார்த்தனை செய்து கொண்டால் உங்களுடைய வேண்டுதல் உடனே பலிக்கும்.

- Advertisement -

பொதுவாகவே அமாவாசை தினத்தில் அம்பாள் வழிபாட்டிற்கு சிறப்பு உண்டு. அதிலும் செவ்வாய்க்கிழமை ராகுகால நேரத்தில் அமாவாசை தினத்தில் இந்த துர்க்கை அம்பாளை வழிபாடு செய்து பாருங்கள். அதனுடைய சக்தியை வார்த்தைகளால் சொல்லி புரிய வைக்க முடியாது. வேண்டுதல் வைத்து, வேண்டுதல் பலிக்கும்போது தான் உங்களுக்கு புரியும்.

இப்படி வழிபாட்டை முடித்துவிட்டு சிறிது நேரம் அம்பாள் சன்னதியில் அமர்ந்து அம்பாளை வேண்டி பிறகு வீடு திரும்பங்கள். குறிப்பாக திருமணம் நடக்காதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நல்ல வேலை கிடைக்காமல் திண்டாடுபவர்கள், குடும்பத்தில் கணவர் சரியில்லை, மாமியார் சரியில்லை, மருமகள் சரியில்லை, நாத்தனார் பிரச்சனை இப்படி குடும்பத்தில் நிம்மதியை இழந்து தவிப்பவர்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: லட்சுமி நாராயண யோகம் பெரும் ராசிகள்

கடன் சுமையால் வாடி கஷ்டப்படுபவர்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். எல்லோருக்கும் அம்பாள் அருள் ஆசையை வழங்குவாள். வரக்கூடிய அமாவாசை தினத்தில் இந்த எளிய அம்பாள் வழிபாட்டை அனைவரும் செய்து பலன் பெற வேண்டி இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -