இன்றைய அமாவாசை திதியில் மாலை மகாலட்சுமி தாயாரை இப்படி வழிபாடு செய்தால், தரித்திரம் நீங்கி முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைப்பதுடன், வீட்டில் லட்சுமி கடாட்சமும் என்றென்றும் நிறைந்து இருக்கும்.

Amavasai Mahalashmi
- Advertisement -

அமாவாசை என்றால் அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, படையல் இடுவது போன்றவற்றை தான் நாம் செய்வோம். இது நம் கர்ம வினைகளை நீக்கி நல்ல முறையில் வாழ முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெற வழி செய்யும். இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் இந்த அமாவாசை திதியில் லட்சுமி தாயாரை வணங்கும் போது நம் வீட்டில் தரித்திர நிலை மாறி லட்சுமி கடாட்சம் பெருகும் என்றும் சொல்லப்படுகிறது. அந்த வழிப்பாடை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய மாசி மாத அமாவாசை ஆனது இன்று மாலை 4 மணி முதல் நாளை மதியம் 1.30 மணி வரை உள்ளது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, படையல் இடுவது போன்ற காரியங்களை நாளை மதியத்திற்குள் (20.2.23) செய்ய வேண்டும். அதே நேரத்தில் அமாவாசையில் கண் திருஷ்டிக்காக சுற்றி போடுவது, அமாவாசை பரிகாரங்கள் போன்றவற்றை இன்று (19.2.23) மாலை செய்து விட வேண்டும். இதை நாளைய தினம் செய்யக் கூடாது. இதை எல்லாம் செய்யும் பொழுது அந்த நாளில் அமாவாசை திதி இருக்கும் நேரத்தில் தான் செய்ய வேண்டும் இது மிகவும் முக்கியம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை மகாலட்சுமி தாயாருக்கு இன்று மாலை 6 மணிக்கு மேல் 8 எட்டு மணிக்குள் செய்து விடுவது மிகவும் சிறப்பு. இந்த வழிபாட்டை செய்ய முதலில் உங்கள் பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து வாசனை மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

இன்று மாலை 6 மணிக்கு மேல் தாயாரின் படத்திற்கு முன்பாக ஒரு அகல் விளக்கில் பசு நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்று வைத்து விடுங்கள். அந்த தீபத்திற்கு முன்பு வெற்றிலை, பாக்கு, பழம் தேங்காய் போன்றவற்றை வைத்த பிறகு, தாயாருக்கு ஏதாவது ஒரு நெய்வேத்தியம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு தாயாரின் படத்திற்கு முன்பாக அமர்ந்து அவரின் நாம அர்ச்சனையை (ஓம் மகாலட்சுமி தாயே நமஹ) 108 முறை கூறி வழிபடுங்கள். மகாலட்சுமி தாயாரின் வேறு லஷ்மி ஸ்தோத்திரம் உங்களுக்கு தெரிந்திருந்தால் அதை படிப்பது மிகவும் சிறப்பு. அதன் பிறகு தாயாருக்கு தீப தூப ஆராதனை செய்து உங்களின் குறைகளை தாயார் இடத்தில் கூறி மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

அமாவாசை தோறும் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மகாலட்சுமி தாயாரை இப்படி வழிபடும் போது, நம் வீட்டின் தரித்திர நிலை மாறி வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். முன்னோர்களின் ஆசிர்வாதத்துடன், தாயாரின் அனுகிரகமும் கிடைக்கும் போது குடும்பத்தில் என்றென்றும் நிம்மதியும் சந்தோஷமும் நிலைத்திருக்கும்.

இதையும் படிக்கலாமே: பிரிய நினைக்கும் கணவன் மனைவி பிரியாமல் இருக்க சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம் என்ன தெரியுமா? இதை சொன்னால் என்ன நடக்கும்?

இன்றைய அமாவாசை தினத்தில் மாலை தாயாரை இப்படி எளிமையான முறையில் வழிபட்டு நம் குடும்பம் நல்ல முறையில் மகிழ்ச்சியுடனும், செல்வ செழிப்புடனும், தரித்திர நிலை இல்லாமல் வாழ வழி தேடி கொள்ளலாம்.

- Advertisement -