பண வரவிற்கு அமாவாசை மிளகு பரிகாரம்

amavasai cash poosaikkai
- Advertisement -

பொதுவாக அமாவாசை தினம் என்றாலே அதற்கென தனி ஒரு சக்தி உண்டு அந்த தினத்தில் நாம் செய்யக்கூடிய பல விஷயங்களை பல மடங்கு பலனை பெறலாம். ஆகையால் தான் நம் முன்னோர்கள் கலந்து விட்டு அமாவாசையில் முன்னோர் வழிபாடு திருஷ்டி நீக்கவும் பணவரவு போன்றவற்றிற்கான பரிகாரங்களை செய்து வந்தார்கள்.

அதே போல அமாவாசை தினத்தில் பலரும் வீட்டில் திருஷ்டிக்கு பூசணிக்காய் கட்டுவது இன்றளவும் வழக்கமாக கொண்டுள்ளார்கள். அதில் நாம் செய்யும் இந்த சிறு மாறுதலானது நமக்கு பணவரவு அதிகரித்து கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பண வரவிற்கு அமாவாசை மிளகு பரிகாரம்

இந்த பரிகாரத்தை அமாவாசை அன்று காலை மதியம் மதியம் மாலை என எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த பரிகாரம் செய்வதற்கு ஒரு சிகப்பு நிற சிறிய துண்டு ஐந்து மிளகு எடுத்துக் கொள்ளுங்கள். இவை இரண்டும் அங்காரகரனுக்கு உரியதாக சொல்லப்படுகிறது. இவர் கடனை நீக்கி பணவரவை அதிகரித்து தரக்கூடியவர்.

நீங்கள் வாங்கி வைத்திருக்கும் சிகப்பு நிறத்துணியில் ஐந்து மிளகாய் வைத்து முடிச்சாக கட்டுங்கள். அதன் பிறகு இந்த முடிச்சை நீங்கள் வீட்டில் அமாவாசை அன்று கட்டும் பூசணிக்காயுடன் சேர்த்து கட்டுங்கள். பூசணிக்காய் கட்டும் வழக்கம் உள்ளவர்கள் அதனுடன் கட்டுங்கள் இல்லாதவர்கள் இதை கட்டும் போது பூசணிக்காயும் சேர்த்து கட்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த முடிச்சு அடுத்த அமாவாசை வரை அப்படியே இருக்க வேண்டும். அடுத்த அமாவாசைக்கு முதல் நாள் இந்த மிளகை முடிந்து எடுத்து தனியாக ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். அமாவாசை அன்று புதிய துணி, 5 மிளகாய் வைத்து மறுபடியும் முடிச்சு போட்டு விடுங்கள். இதே போல தொடர்ந்து 11 அமாவாசைகள் வரை செய்ய வேண்டும்.

11வது அமாவாசை அன்று இந்த முடிச்சிலுள்ள மிளகை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். துணியை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள் உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் லட்சுமி நரசிம்மர் ஆலயத்திற்கு செல்லுங்கள் இல்லாத பட்சத்தில் பெருமாள் கோவில் அல்லது லட்சுமி தாயார் ஆலயத்திற்கு செல்லலாம்.

- Advertisement -

அங்கு கோவில் அர்ச்சகரிடம் இந்த மிளகுகளை கொடுத்து விட்டு துணிகளை வீட்டிற்கு கொண்டு வந்து விடுங்கள்.இந்த துணிகளை அப்படியே பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான் பரிகாரம் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யத் தொடங்கிய நாளிலிருந்து உங்களுடைய பணவரவில் நல்ல முன்னேற்றம் தெரியும்.

11 மாதங்கள் முடியும் போது பண வரவில் நல்ல மாற்றம் ஏற்பட்டு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் வந்திருக்கும். ஒரு வேளை நீங்கள் ஆலயத்தில் இன்னும் மிளகை கொடுக்கும் போது கோவில் அர்ச்சனை வாங்கவில்லை என்றால் அதே சிகப்பு துணியில் மிளகை வைத்து கட்டி கோவில் உண்டியலில் போட்டு விடலாம். அதிலும் தவறு ஒன்றும் கிடையாது.

இதையும் படிக்கலாமே: அனுமன் ஜெயந்தி அன்று செய்ய வேண்டிய தானம்

பணவரவை அதிகரித்து தரக் கூடிய இந்த பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள், நம்பிக்கையுடன் செய்து பணவரவை தாராளமாக பெறலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -