பரம ஏழை என்றால், எல்லோரும் திருவோட்டை கையில் வைத்துக்கொண்டு பிச்சை எடுக்கக்கூடிய சூழ்நிலையில் இல்லை. ஆனால் தேவைக்கு ஏற்ப பணம் இல்லாமல் வீடு இருந்தும், வாசல் இருந்தும், வேலை இருந்தும் தொழிலிருந்தும், பிச்சைக்காரர்கள் ஆகத்தான் இருக்கின்றோம். அவசர தேவைக்கு அடுத்தவர்களிடம் கையேந்தும் நிலைமை வந்தாலும் அது பிச்சை எடுப்பதற்கு சமம் தான்.
கடன் வாங்கி வாழ்க்கையை நடத்தினால் நாம் செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ்ந்து விடுவதாக அர்த்தம் கிடையாது. அப்படி பார்த்தால் இன்று ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் கடன் இருக்கிறது. அடுத்தவர்களிடம் கை நீட்ட வேண்டிய சூழ்நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இப்படிப்பட்ட பண பிரச்சனையிலிருந்து வெளிவர வேண்டும், கடன் சுமையிலிருந்து வெளிவர வேண்டும், நாம் அடுத்தவர்களிடம் கைநீட்டி கடன் வாங்காமல் கௌரவமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால், சில பல புண்ணிய காரியங்களை நம் கையால் செய்ய வேண்டும். அந்த வகையில் நாளை கார்த்திகை மாதம் சனிக்கிழமையில் வந்திருக்கக்கூடிய அமாவாசை திதி. இந்த நன்னாளில் நம்முடைய கையால் வாயில்லா ஜீவன்களுக்கு கொடுக்கப்படும் தானம் நம்முடைய கர்ம வினைகளை குறைத்து கஷ்டங்களை குறைப்பதற்கு வழிவகுக்கும். அதற்காகத்தான் இந்த பரிகாரம்.
அமாவாசை பசுவிற்கு செய்ய வேண்டிய தானம்
உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மட்டும் இதை செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். நம்பிக்கை இல்லை என்பவர்களுக்கு பரிகாரம் பலனளிக்காது. உங்களுக்கான பரிகாரம் இது கிடையாது. நாளைய தினம் காலையில் எழுந்து முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி தர்ப்பணம் முறைகளை தவறாமல் செய்ய வேண்டும். தாய் தந்தை இல்லாதவர்கள், முன்னோர்களுக்கு படையல் போட்டுவிட்டு அந்த சாதத்தை காகத்திற்கு முதலில் வைத்துவிட்டு பிறகு தான் சாப்பிட வேண்டும். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இது தவிர அமாவாசை சமையலோடு சேர்த்து ஒரு பக்கம் தனியாக ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பச்சரிசி வைத்து வேக விடுங்கள். அந்த சாதம் நன்றாக குழைய குழைய வேகட்டும். அதை வடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கஞ்சி சாதம் போல கொஞ்சம் கட்டியாகவே செய்து, கொஞ்சமாக உப்பு போட்டு, சிறிய துண்டு வெல்லம் சேர்த்து, கலந்து அந்த சாப்பாட்டை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் இறுதியாக ஒரு சொட்டு நெய் விட வேண்டும். இது சர்க்கரை பொங்கல் போல இனிப்பாக இருக்கக் கூடாது. சாஸ்திரத்திற்கு ஒரு ஸ்பூன் வெல்லம் போட்டால் போதும்.
இது நன்றாக ஆறிய பிறகு இதைக் கொண்டு போய் பசு மாட்டிற்கு சாப்பிட கொடுக்க வேண்டும். உங்கள் வீட்டு பக்கத்தில் எந்த இடத்தில் பசு இருந்தாலும் அதைத் தேடிக் கொண்டு போய் கொடுங்க. உங்க வீட்டு வாசலிலேயே பசு வரும். உங்க தெருகளில் பசு நடமாட்டம் இருக்கும் என்றால் உங்கள் வீட்டு வாசலில் பசு வரும்போது வாசலில் நின்று இந்த சாதத்தை பசுவிற்கு சாப்பிட வைப்பது கோடான கோடி புண்ணியத்தை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருமுறை உங்கள் வீட்டு வாசலில் நின்று பசுவிற்கு சாப்பாடு வைத்து விட்டால், தினம் தினம் பசு அந்த வழியாக போகும் போது உங்கள் வீட்டில் சாப்பிடுவதற்காக வரும் அப்போது உங்களால் முடிந்த உணவுப் பொருட்களை அந்த பசுவிற்கு சாப்பிட கொடுப்பது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும்.
நாளைய தினம் தாய் தந்தை இல்லாதவர்கள் அகத்திக்கீரை பசுவிற்கு வாங்கி கொடுக்கலாம். தவறு கிடையாது. உங்களுக்கு தாய் தந்தை இருந்தாலும் இந்த சாதத்தை செய்து பசுமாட்டிற்கு நீங்கள் கொடுத்தீர்கள் என்றால், உங்களுடைய கர்ம வினைகள் கழியும் என்பது நம்பிக்கை. அதிலும் பசுவில் மகாலட்சுமி தாயார் வாசம் செய்கிறார்கள்.
இதையும் படிக்கலாமே: எதிர்மறை ஆற்றல்கள் விலக தாந்த்ரீக பரிகாரம்
முப்பத்து முக்கோடி தேவர்களும் பசுவில் வாசம் செய்வதால் அவர்களுடைய ஆசிர்வாதம் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். மகாலட்சுமியின் அருளால் பணக்கஷ்டத்திலிருந்து படிப்படியாக விடுபடக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். கடன் சுமை குறையும் என்பதுதான் இதற்கு பின்னால் மறைந்திருக்கும் நம்பிக்கை. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் ஆன்மீகம் பரிகாரங்களை செய்து பலன் பெறவும்.