இன்று இரவு, இந்த முறைப்படி திருஷ்டி கழித்தால் வீட்டை பிடித்த கெட்ட சக்தி, உங்கள் உடம்பை பிடித்திருக்கும் கெட்ட சக்தி, கண் திருஷ்டி அனைத்தும் நீங்கிவிடும்.

amavasai-lemon
- Advertisement -

இன்று அமாவாசை. இன்றைய தினத்தில் உங்கள் வீட்டு வழக்கப்படி முன்னோர்களுக்கு செய்யக்கூடிய வழிபாட்டை தவறாமல் செய்து விட வேண்டும். உங்கள் முன்னோர்களுக்கு கொடுக்க வேண்டிய தர்ப்பணத்தை கொடுக்க தவறக் கூடாது. அமாவாசை அன்று குலதெய்வ வழிபாடு செய்வதும் சிறப்பு. இத்தனை அம்சங்களைக் கொண்ட இந்த அமாவாசை தினத்தில் நம்முடைய வீட்டில் இருப்பவர்களுக்கு கண் திருஷ்டி கழிக்கவும் மறக்க கூடாது. மாதம் ஒருமுறை வரக்கூடிய அமாவாசை நாளில், கெட்ட சக்திகளின் ஆதிக்கங்களை ஒழித்துக் கட்ட சில குறிப்புகள் நம்முடைய முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. அதில் சிலவற்றை இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

இன்று காலை பூஜை செய்யும்போது ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி, அந்த எலுமிச்சம் பழத்தில் ஒரு பக்கம் மஞ்சள், ஒரு பக்கம் குங்குமம் தடவி நிலை வாசலில் இரண்டு பக்கமும் வைக்க வேண்டும். இரண்டு எலுமிச்சம் பழ துண்டுகளிலும் குங்குமத்தை தடவி வைத்தாலும் தவறு கிடையாது. காலையிலேயே இந்த பரிகாரத்தை செய்து அப்படியே நிலை வாசலில் எலுமிச்சம் பழத்தை வைத்து விடுங்கள். பிறகு வழக்கம் போல உங்களுடைய அமாவாசை பூஜையை செய்து முடிக்கலாம்.

- Advertisement -

இன்று இரவு அதாவது, அமாவாசை இரவு 8 மணிக்கு மேல் வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் கிழக்கு பார்த்தவாறு அமர வைத்து விடுங்கள். ஒரு முழு எலுமிச்சம் பழத்தை எடுத்து நான்கு பாகங்களாக வெட்ட வேண்டும். நான்கு துண்டுகளாக கையில் வரக்கூடாது. நான்கு பாகங்களாக வெட்டிய எலுமிச்சம் பழத்தை, பிரித்து எலுமிச்சம் பழத்திற்கு நடுவே நன்றாக குங்குமத்தை தடவி விடுங்கள். சிவப்பு நிற குங்குமத்தை இதற்கு பயன்படுத்துங்கள். அதன் பின்பு எலுமிச்சம் பழத்தின் அந்த நான்கு பாகங்களுக்கு நடுவே எவ்வளவு கல்லுப்பை நிரப்ப முடியுமோ அவ்வளவு கல்லுப்பை நிரப்பிவிட்டு, அந்த எலுமிச்சம் பழத்தை கொண்டு உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சுற்ற வேண்டும்.

வலது பக்கம் மூன்று முறை, இடது பக்கம் மூன்று முறை, ஏற்ற இறக்கமாக மூன்று முறை, சுற்றிவிட்டு இந்த எலுமிச்சம் பழத்தை ஒரு பேப்பரில் வைத்து மடித்து யார் கால் படாத இடமாக தூக்கி குப்பை தொட்டியில் போட்டு விடுங்கள். வீதியில் போட்டால் குழந்தைகள், வீதியில் செல்லும் மற்றவர்கள் எல்லாம் மிதிப்பார்கள் தாண்டுவார்கள். பிறகு அடுத்தவர்களுக்கு பிரச்சனை வந்துவிடும். அந்த தவறை செய்யாதீங்க.

- Advertisement -

இப்படி எலுமிச்சம் பழத்தை வைத்து திருஷ்டி கழிப்பது ஒரு முறை. அப்படி இல்லை என்றால் சிவப்பு நிறத்தில் ஆரத்தியை கலந்து அதில் மூன்று வரமிளகாய்கள் போட்டு, அதன் மேலே ஒரு வெற்றிலை வைத்து, ஒரு சூடம் ஏற்றி, அந்த ஆரத்தியை வீட்டில் இருப்பவர்களுக்கு சுற்றி கூட நிலை வாசலுக்கு வெளியில் ஓரமாக கொட்டி விடலாம். இப்படியும் திருஷ்டி கழிப்பது சில பேருடைய வழக்கமாக இருக்கும்.

உங்களுக்கு எது சௌகரியமாக படிக்கிறதோ அதன்படி வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த திருஷ்டியை கழித்து விடுங்கள். சில பேர் வெறும் கற்பூரத்தில் திருஷ்டி கழிப்பார்கள். சில பேர் பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழிப்பார்கள். அது உங்களுடைய விருப்பம் தான். ஆனால் நாளைய தினம் ஏதாவது ஒரு வழியில் வீட்டில் இருப்பவர்களுக்கு திருஷ்டி கழித்தே ஆக வேண்டும்.

பிறகு காலையில் நிலை வாசலில் இரண்டு எலுமிச்சம் பழங்களை வெட்டி குங்குமம் தடவி வைத்திருக்கிறீர்கள் அல்லவா. அது உங்கள் வீட்டில் இருக்கும் அத்தனை எதிர்மறை ஆற்றலையும் ஈர்த்து வைத்திருக்கும். அமாவாசை இரவு முழுவதும் அது நிலை வாசலில் அப்படியே இருக்க வேண்டும். மறுநாள் காலை அதாவது, இன்று வெள்ளிக்கிழமை அமாவாசை, சனிக்கிழமை காலை எழுந்து முதல் வேலையாக நிலை வாசலில் இருக்கும் அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து ஒரு பேப்பரில் மடித்து கொண்டு போய் தூரமாக குப்பை தொட்டியில் போட்டுவிட்டு வந்து, நீங்கள் குளித்து விடலாம். அவ்வளவு தான்.

மாதம் தோறும் இந்த பரிகாரத்தை செய்து வந்தாலே உங்கள் குடும்பம் சுபிட்சம் பெறும். கண் திருஷ்டியோ கெட்ட சக்தியோ உங்கள் வீட்டை பிடித்து ஆட்டி படைக்காது என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் மேல் சொன்ன பரிகாரங்களை பின்பற்றி பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -