அமாவாசை அன்று தவறாமல் இந்த ஒரு பொருளை வாங்கி வைத்து உங்கள் முன்னோரை வழிபட்டால் வீட்டில் பணக்கஷ்டம் நீங்கி ராஜயோகம் தேடி வரும்.

kadan amavasai
- Advertisement -

அமாவாசை என்றாலே அது முன்னோர்களின் வழிபாட்டிற்குரிய நாள் தான். அந்த நாளில் நாம் வீட்டில் இறந்தவர்கள், பெரியவர்களை முறைப்படி வணங்கி வரும் பொழுது நம்முடைய குடும்பம் என்றென்றைக்கும் தழைத்தோங்கி வாழும் என்பது அனைவரும் தெரிந்த ஒன்றே. அந்த அமாவாசை வழிபாட்டு நாளில் முன்னோர்களுக்கு இந்த ஒரு பொருளை வாங்கி வைத்து வணங்கும் பொழுது அவர்களின் ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைத்து குடும்பத்தில் பணக்கஷ்டம் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. அதைப் பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.

அமாவாசை அன்று முன்னோர்களுக்கு படைக்க வேண்டிய பொருள்
இந்த ஆடி மாத அமாவாசை இன்று செவ்வாய்க்கிழமை 15. 8.23 அன்று மதியம் 1 மணிக்கு மேல் அமாவாசை தொடங்கி நாளை மதியம் புதன்கிழமை 16.8. 23  3 மணி வரை தொடர்கிறது. ஆகையால் அமாவாசை படையல் தர்ப்பணம் போன்றவற்றை புதன்கிழமை அன்று செய்வதே சிறந்தது. இந்த அமாவாசை வழிபாட்டிற்கான கடவுள் சூரிய பகவான் தான். எனவே சூரியன் உதிக்கும் நேரத்தில் அமாவாசை திதி இருக்கும் போது இந்த தர்ப்பணம் படையல் செய்வது அதிக பலனை கொடுக்கும்.

- Advertisement -

இந்த அமாவாசை வழிபாடு பல முறைகளில் செய்தாலும் கூட அதில் முக்கியமாக அனைவரும் செய்யக் கூடிய ஒரே விஷயம் எனில் அது தர்ப்பணம் கொடுப்பது தான். தர்ப்பணம் எனும் போது எள்ளும் தண்ணீரும் இறைப்பது தான் இதில் முக்கியம். அந்த எள்லை தான் இப்போது நாம் முன்னோர் வழிபாட்டில் படையலில் வைத்து வணங்க வேண்டும் அதை எப்படி செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

எள்ளை வைத்து வணங்க வேண்டும் என்றால் அதை அப்படியே வாங்கி வைத்து வணங்குதல் கூடாது. இந்த எள்ளை கடைகளில் விற்கும் எள்ளுருண்டை ஆக வாங்கி வைக்க வேண்டும். அதில் இனிப்பு கலந்து இருக்கும் அந்த எள்ளுருண்டை வாங்கி படையளில் வைக்க வேண்டும். இந்த எள்ளு உருண்டை ஒற்றைப்படையில் இருக்கும் படி வைக்க வேண்டும். இதை வைத்து வணங்கிய பிறகு வீட்டில் உள்ளவர்களும் இதை சாப்பிட வேண்டும்.

- Advertisement -

இதை வைத்து வணங்கும் போது முன்னோர்கள் மனமகிழ்ந்து நம்முடைய துயரங்களை நீக்குவதுடன் குடும்பம் நிம்மதியாக ராஜபோகமாக வாழ்வதற்கான வழியை அவர்கள் காட்டுவார்கள் என்று நம்பப்படுகிறது. இந்த அமாவாசை வழிபாட்டு தினத்தில் நிச்சயம் யாரேனும் ஒருவருக்காவது நாம் அன்னதானம் வாங்கி தர வேண்டும். அப்போது அதில் இந்த எள்ளுருண்டை சேர்த்து வாங்கி கொடுப்பது மிகவும் விசேஷம்.

இந்த நாளில் நாம் செய்ய வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் கோவில்களுக்கு நெய்யை தானமாக வாங்கி தருவது. அதுவும் சுத்தமான பசு நெய்யை தான் வாங்கி தர வேண்டும். நீங்கள் வாங்கித் தரும் அந்த நெய்யை தெய்வத்தின் சன்னிதான விளக்கில் ஊற்றி அது எரியும் போது அந்த தீப சுடரில் தெய்வத்தின் முகம்மானது பிரகாசிக்கும். அப்படி உங்கள் வாழ்க்கையும் பிரகாசமாக இருக்கும் என்பதுதான் இந்த தானத்திற்கான பொருள்.

இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டிக்காக வீட்டின் நுழைவாயிலில் கண்ணாடி கிளாசில் எலுமிச்சம் பழம் போட்டு வைக்கும் பழக்கம் உடையவரா? இதைத் தெரிந்து கொண்டு பிறகு இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

ஆகையால் அமாவாசை வழிபாட்டில் இந்த மூன்று விஷயங்களை தவறாமல் செய்து உங்களுடைய குடும்பம் என்றென்றைக்கும் பணக்கஷ்டம் இன்றி நோய் நொடியும் இன்றி நிம்மதியாக வாழ இந்த வழிபாட்டின் மூலம் வழித்தேடி கொள்ளலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -