கண் திருஷ்டிக்காக வீட்டின் நுழைவாயிலில் கண்ணாடி கிளாசில் எலுமிச்சம் பழம் போட்டு வைக்கும் பழக்கம் உடையவரா? இதைத் தெரிந்து கொண்டு பிறகு இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

vasal lemon in glass
- Advertisement -

கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது என்று சொல்வார்கள். கல்லடியால் நமக்கு ஏற்படக்கூடிய காயத்தை நம்மால் விரைவில் ஆற்றி விட முடியும். ஆனால் கண்ணடி என்று சொல்லக்கூடிய கண் திருஷ்டியால் நமக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து நாம் வெளியில் வருவது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. இந்த கண் திருஷ்டியில் இருந்து வெளியில் வருவதற்காக நாம் பல பரிகாரங்களை மேற்கொள்கிறோம். அவற்றில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது தான் கண்ணாடி டம்ளரில் நீரை ஊற்றி அதனுள் எலுமிச்சம் பழத்தை போடுவது. இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பாக சில முக்கியமான விஷயங்களை தெரிந்து கொண்டு பிறகு செய்தால் தான் இந்த பரிகாரத்தின் முழுமையான பலனையும் நம்மால் அடைய முடியும். அப்படி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்ன என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

எந்த பரிகாரத்தை நாம் செய்தாலும், அந்த பரிகாரத்திற்குரிய அனைத்து செய்திகளையும் உணர்ந்த பிறகு செய்தால் தான் அதனால் நமக்கு பலன் ஏற்படும். அரைகுறையாக தெரிந்து கொண்டு எந்த பரிகாரத்தை நாம் செய்தாலும் அதன் பலன் நன்மையாக இருக்கும் என்பதில் எந்த உறுதியும் இல்லை. மாறாக அந்த நன்மைக்கு பதிலாக தீமை விளைவிக்க கூடிய பாதிப்புகள் ஏற்படும் என்பது உறுதி.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நாம் மேற்கொள்ளும் பொழுது உபயோகப்படுத்தக்கூடிய கண்ணாடி டம்ளர் புதிதாக வாங்கியதாக இருக்க வேண்டும். வேறு எந்த செயலுக்காகவும் அதை உபயோகப்படுத்தி இருக்கக் கூடாது. மேலும் இதில் ஊற்றப்படும் தண்ணீரானது கடல் தண்ணீராக இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. கடல் தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் சுத்தமான குடிக்கும் தண்ணீரைப் பிடித்து அதில் சிறிது கல்லுப்பை போட்டு தான் வைக்க வேண்டும். அப்பொழுதுதான் கண் திருஷ்டிகளால் ஏற்படக்கூடிய தீய சக்திகளை அந்த தண்ணீர் உட்கிரகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தண்ணீரில் போடப்படும் ராஜகனி என்று அழைக்கக்கூடிய எலுமிச்சம் பழத்தை நாம் கடைகளில் இருந்து வாங்கி வந்து போடுவதை விட, சக்தி வாய்ந்த மாரியம்மன், காளியம்மன் போன்ற தெய்வங்களின் காலடியில் வைத்து பிரார்த்தனை செய்து எடுத்து வந்து போட்டால் அந்த ராஜ கனியின் சக்தி மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இவ்வாறு நாம் போடும் எலுமிச்சம் பழம் ஆனது தண்ணீரின் மேலே மிதக்க வேண்டும். அவ்வாறு மிதந்தால் தான் நம் வீட்டிற்கு கண் திருஷ்டி இல்லை என்று அர்த்தம். அதற்கு மாறாக நாம் போட்ட எலுமிச்சம் பழம் அடியில் சென்று விட்டால் நாம் அதை எப்பொழுது பார்க்கிறோமோ அப்பொழுதே அந்த தண்ணீரையும் எலுமிச்சம் பழத்தையும் கால்படாத இடத்தில் போட்டுவிட்டு புதிதாக தண்ணீரையும் எலுமிச்சம் பழத்தையும் அந்த கிளாஸில் வைக்க வேண்டும். காரணம் நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை ராஜ கனி உட்கிரகிப்பதால் தான் அந்த கனி தண்ணீரின் அடியில் செல்வதாகவும், நாம் அதை அப்படியே வைத்திருந்தால் அதனால் மேலும் நமக்கு அதிகமான எதிர்வினை ஆற்றல்களே ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: வெற்றி எப்போதும் உங்கள் பக்கம் நிற்க வேண்டுமா? இந்த விநாயகரை கொண்டு வந்து வீட்டில் வச்சுக்கோங்க. எந்த தோல்வியும் உங்களை நெருங்காது.

மேற் சொன்ன கருத்துக்களை நினைவில் கொண்டு இந்த பரிகாரத்தை நாம் முறையாக மேற்கொண்டோம் என்றால் நம் வீட்டில் இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கி நேர்மறை ஆற்றல்கள் நிறைந்து மகிழ்ச்சியோடும், நலமோடும், சிறப்போடும் வாழலாம்.

- Advertisement -