அமாவாசையில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா? ஜோதிடம் என்ன சொல்கிறது?

amavasai2
- Advertisement -

அமாவாசையில் பிறந்த குழந்தை பிற்காலத்தில் திருடனாக இருப்பான் என்று கூறுவதை நாம் கேட்டிருப்போம். இது உண்மையா? என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்று தான் கூற வேண்டும். ஜோதிடத்தில் கூறப்படும் பல தகவல்கள் தவறாக திரிக்கப்பட்டு வழக்கத்தில் உள்ளது உண்மையான ஒன்று. உதாரணத்திற்கு ‘பூராடத்தில் நூலாடாது’ என்று ஒரு பழமொழி இருக்கும். இதில் நூல் என்பதை திருமண மாங்கல்யத்தை குறிப்பதாக சிலர் தவறாக திரித்து கூறுகின்றனர். உண்மையில் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கல்வியில் தடை ஏற்படும். படிக்கும் புத்தகத்தை குறிப்பது தான் அந்த நூல். ஆரம்பத்தில் கல்வியில் தடை ஏற்பட்டாலும் பின்னாளில் அவர்கள் நல்ல கல்வி பெற்று வளர்ச்சி காண்பார்கள். இது போன்ற தவறான தகவல்களில் ஒன்று தான் அமாவாசையில் பிறந்தால் திருடன் ஆவான் என்பதும். அப்படி என்றால் அமாவாசையில் பிறந்தவர்கள் எப்படி தான் இருப்பார்கள் என்று இப்பதிவில் காண்போமா?

அமாவாசை மற்றும் பௌர்ணமி திதிகளில் தான் அனைத்து கிரகங்களும் வலிமை பெறுகின்றன. ஆத்மகாரகனான சூரியனும் மனோகர சந்திரனும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் நாள் தான் அமாவாசை என்று கூறப்படுகிறது. ஜோதிடத்தில் ஒரு குறிப்பிட்ட திதியில் பிறந்தவர்களுக்கு குறிப்பிட்ட தோஷம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அந்த நாளில் ஒரு சில கிரகங்கள் வலுவடைவதால் இந்த தோஷம் ஏற்படுகிறது. உதாரணத்திற்கு துதியை திதியில் தனுசு மற்றும் மீன ராசி வலிமை இழக்கும். சதுர்த்தி திதியன்று கும்பம் மற்றும் ரிஷபம் வலிமை இழக்கும். பிரதமை திதி அன்று துலாம் மற்றும் மகர ராசி வலிமை இழக்கும். இது போல் ஒவ்வொரு திதி அன்றும் சில ராசிகள் வலிமை இழக்கும். ஆனால் அமாவாசை மற்றும் பௌர்ணமி திதிகளில் அனைத்து கிரகங்களும் வலிமை பெற்று விளங்கும். இதனால் அந்த திதிகளில் பிறந்தவர்களுக்கு தோஷம் ஏற்படாது.

- Advertisement -

எனவே அமாவாசை திதியில் பிறந்தவர்களுக்கு அதிக அறிவாற்றல் இருக்கும். திறமையானவர்களாக திகழ்வார்கள் ஆனால் அவர்களுடைய திறமை பிறரால் அங்கீகரிக்கப்படாமல் இருக்கும். இதனால் அவர்கள் அவர்களுக்குரிய வாய்ப்புகளை தாங்களாகவே ஏற்படுத்திக் கொள்வார்கள். வாய்ப்புக்காக காத்திருக்க மாட்டார்கள். இதனால் சில பிரச்சினைகளையும் சந்திப்பார்கள். தன்னலமின்றி அடுத்தவர்களின் நலம் கருதி வாழ்பவர்களாக இருப்பார்கள். தங்கள் திறமைகள் தடுக்கப்படுவதால் தங்களை தாங்களே முன்னிலைப்படுத்தி கொள்வார்கள். இதனால் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இவர்கள் தலைகணம் பிடித்தவர்கள் போல் தோன்றுவார்கள்.

இவர்களுடன் இருப்பவர்களுக்கே இவர்களை பற்றி முழுமையாக புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படும். மிகவும் குழப்பவாதியாகவே இருப்பார்கள். தந்திரக்காரர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் கூறிய சில கருத்துக்கள் அந்த சமயத்தில் புரியாவிட்டாலும் வேறொரு சமயத்தில் நிச்சயம் உணர்ந்து கொள்ள முடியும்.

- Advertisement -

அமாவாசையில் பிறந்தவர்கள் எதையாவது தேடுவதிலேயே நாட்டம் கொண்டிருப்பார்கள். புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் செலுத்துவார்கள். இன்னும், இன்னும், இன்னும் என்று அதிகம் எதிர்பார்ப்பார்கள். இருப்பதை வைத்து திருப்தி கொள்ளமாட்டார்கள். இவர்களிடம் ஏதோ ஒரு விஷயம் இல்லாதது போல் தோற்றமளிப்பார்கள். எதையோ இழந்தது போல் மன இறுக்கத்துடன் இருப்பார்கள். இதற்கு காரணம் அமாவாசை அன்று சந்திரன் பலமிழந்து காணப்படுவது தான் என்கிறது ஜோதிடம். ஒரு விஷயத்தில் வெற்றி கண்ட பிறகும் திருப்திக் கொள்ளாமல் மனசஞ்சலம் கொண்டே இருப்பார்கள்.

இவர்களுக்கு தாங்கள் எதிர்பார்த்த திருமண பந்தம் ஏற்பட்டாலும் அதிலும் திருப்திக் கொள்ள மாட்டார்கள். இன்னும் சிறப்பான வாழ்க்கை அமைந்து இருக்கலாமோ என்று எண்ணுவார்கள். எந்த விஷயத்தை எடுத்தாலும் அதில் முழு கவனத்துடன் ஈடுபடுவார்கள். தங்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். உணவருந்தும் போதும் திருப்திக் கொள்ள மாட்டார்கள், ஏதாவது குறை கூறிக்கொண்டே இருப்பார்கள்.

- Advertisement -

ஒரு விஷயத்தை தீர்க்கமாக முடிவெடுத்து விட்டால் அதிலிருந்து பின்வாங்க மாட்டார்கள். ஒருமுறை முடிவெடுத்தால் முடிவெடுத்தது தான் தங்களது முடிவை மாற்றிக் கொள்ளமாட்டார்கள். அறிவியல் சார்ந்த விஷயங்களில் அதிக நாட்டம் இருக்கும். இவர்கள் மற்றவர்களின் மனதை சுலபமாக கவர்ந்து விடக் கூடியவர்களாக இருப்பார்கள்.

இதையும் படிக்கலாமே
வாஸ்துவினால் தான் உங்கள் வீட்டில் பிரச்சனையா? வாஸ்து தோஷம் தீர்க்க மிகவும் சுலபமான வழி இதோ!

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Amavasya birth effects in Tamil. Amavasai pirantha kulanthai eppadi irukkum. Amavasya birth astrology in Tamil. Amavasai pirantha palangal in Tamil. Amavasaiyil piranthal.

- Advertisement -