வருடத்தில் இரண்டு நாட்கள் மட்டும் மழை பொழியும் அதிசய மரம்

adhisaya-maram

திருநெல்வேலி மாவட்டம் ஆல்வார்க்குறிச்சி என்னும் கிராமத்திற்கு அருகில் உள்ளது அத்திரி மலை. புலிகள் உட்பட பல வனவிலங்குகள் வாழும் இந்த மலையில் வருடா வரும் ஒரு அதிசயம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அதை பற்றி விரிவாக பார்போம் வாருங்கள்.

Athiri Hills

அத்திரி என்னும் மகரிஷி தன் மனைவியோடு இந்த மலையில் வாழ்ந்துள்ளார். அதனாலேயே இந்த மலைக்கு அத்திரி என்னும் பெயர் வந்துள்ளது. அடர்ந்த இந்த மாலைக்குள் ஒரு அற்புதமான சிவன் கோவில் உள்ளது. அதோடு கங்கைக்கு நிகராக கருதப்படும் அத்ரி கங்கை என்னும் தீர்த்தம் எப்போதும் இங்கு வற்றாத நிலையில் உள்ளது. இதில் வெள்ளை ஆமை ஒன்று உள்ளதாகவும் அதை காண்பது அவ்வளவு எளிதல்ல எனவரும் கூறப்படுகிறது.

சிவன் கோயிலிற்கு அருகே பாலை மரம் என்றொரு அரியவகை மரம் உள்ளது. இந்த மரத்தில் இருந்து வருடா வருடம் அதிசயிக்கும் வகையில் ஒரு அற்புதமான பன்னீர் மழை பொழிகிறது. பங்குனி மாதத்தின் கடைசி 5 நட்கள், சித்திரையின் முதல் 5 நாட்கள் என இந்த 10 நாட்களுக்கும் ஏதாவது 2 நாட்கள் மட்டும் இந்த மரத்தின் கிளைகளில் ஒருவகையான வண்டுகள் வந்து அமர்கின்றன.

tree

அந்த வண்டுகள் ஒரே நேரத்தில் தங்கள் உடம்பில் இருந்து நீர் போன்ற ஒரு திரவத்தை சுரந்து அதை பீய்ச்சி அடிக்கின்றன. அதை பார்க்கையில் அந்த மரணத்தில் இருந்து மட்டும் மழைபொழுவது போல காட்சி அளிக்கின்றன. வண்டுகளால் பீய்ச்சி அடிக்கப்பட்ட அந்த திரவத்தை நுகர்ந்து பார்த்தல் அது பன்னீர் வாசனையில் உள்ளது. அனால் அது மிக விரைவில் காய்ந்துவிடுகிறது.

- Advertisement -

Athiri Temple

மரத்தின் அடியில் நின்று பார்த்தால் ஒரு வண்டு கூட கண்களுக்கு தெரிவதில்லை. இந்த வண்டுகள் அனைத்தும் இந்த மலையில் வாழும் சித்தர்கள் என்று நம்பப்படுகிறது. தமிழ் புத்தாண்டான சித்திரை மாதத்தை வரவேற்கும் வகையில் சித்தர்கள் வண்டாக வந்து இந்த மரத்தில் இருந்து பன்னீரை தெளிக்கிறார்கள் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

அந்த வனப்பகுதியில் எத்தனையோ பாலை மரங்கள் இருந்தாலும் ஏன் வண்டுகள் அனைத்தும் கோவில் அருகில் உள்ள இந்த ஒரு மரத்தில் மட்டும் வந்து அமர்கின்றன ? ஏன் அனைத்து வண்டுகளும் இங்கு மட்டும் திரவத்தை மழைபோல பொழிகின்றன ? அவை ஏன் மனிதர்களின் கண்களுக்கு தென்படுவதில்லை போன்ற பல கேள்விகளுக்கு இன்று வரை விடை இல்லை.

இதையும் படிக்கலாமே:
பாண்டவர்களின் எதிரியான துரியோதனனுக்கு இருக்கும் கோவில் பற்றி தெரியுமா ?

அத்ரி முனிவர் வழிபட்ட சிவாலய ஸ்தலமான அத்ரிமலையில் உள்ள பாலை மரம் என்கிற ஒரு அரிய வகை மரத்தில் பங்குனி மாதத்தின் கடைசி 5 நட்கள் சித்திரையின் முதல் 5 நாட்கள் என இந்த 10 நாட்களுக்குள் 2 நாட்கள் மட்டும் மரத்தின் நிறத்தை ஒத்த பல்லாயிரக்கணக்கான வண்டுகள்( நம் கண்களுக்கு தெரியாது) கிளைகளில் கூடி தங்கள் உடம்பிலிருந்து சுரபிகள் வழியாக நீரை போன்ற திரவங்களை தெரித்தடிக்கும் . நம் பார்வைக்கு , மரத்தடியில் மட்டும் மழை பெய்வது போலத் தோன்றும் , ஆகையால் இந்த மரத்திற்கு அமிர்தவர்ஷிணி என்ற மற்றொரு பெயரும் உண்டு .