- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஎலுமிச்சை மாலை அம்பாள் வழிபாடு

எலுமிச்சை மாலை அம்பாள் வழிபாடு

- Advertisement -

ஒரு குடும்பத்திற்கு கெட்ட நேரம் துவங்கிவிட்டது என்றால், அந்த குடும்பத்தில் நடக்கும் விஷயங்கள் எல்லாமே கெடுதலாக தான் இருக்கும். அடுத்தடுத்து கெட்ட விஷயங்கள் நடந்து கொண்டே இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு துர்சக்தியால் பாதிக்கப்படுவார்கள். எதிர்மறையாற்றல் வேகமாக வேலை செய்ய துவங்கும். வீட்டில் இருள் சூழ்ந்த நிலை காணப்படும். நோய்வாய்ப்படக்கூடிய பிரச்சனை, வீண்விரய செலவுகள் வரும்.

சொத்து பத்துக்களை இழக்க கூடிய பிரச்சனைகள் வரும். இப்படி இழப்பீடுகள் ஒரு எல்லையை தாண்டி போய்விடும். இழப்பை ஈடுகட்ட முடியாத அளவுக்கு துன்பங்கள் இருக்கிறது என்றால், என்ன செய்வது. இதற்கு சக்தி வாய்ந்த ஒரு எளிமையான ஆன்மீகம் பரிகாரம் உள்ளது. இதோடு மட்டுமா. கெட்ட நேரம் துவங்கி விட்டால், பிள்ளைகளுக்கு கெட்டது நடக்கும். நம்முடைய குடும்பம் அவமானத்திற்கு தள்ள பட கூடிய சில விஷயங்கள் எல்லாம் தொடர்ந்து நடக்க துவங்கி விடும்.

- Advertisement -

இப்படி எல்லா பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, நம்முடைய கெட்ட நேரத்தை விரட்டி அடிக்க, நாம் செய்ய வேண்டிய ஒரே வழிபாடு அதர்வண பெண் தெய்வ வழிபாடு. உடனே பயந்து விட வேண்டாம். அதர்வணம் என்றால் கெட்டது கிடையாது. உக்கிரமான அம்மன் வழிபாட்டை தான் அதர்வண தெய்வ வழிபாடு என்று சொல்லுவார்கள். நம் வீட்டு அருகில் பத்திரகாளி கோவில், பிரத்தியங்கிரா தேவி கோவில், வாராகி அம்மன் கோவில், அங்காள பரமேஸ்வரி, இப்படி எந்த கோவில் இருந்தாலும் சரி அந்த கோவிலில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

ஒரு வெள்ளிக்கிழமையோ, செவ்வாய்க்கிழமையோ, எலுமிச்சம் பழம் மாலையை உங்கள் கையாலேயே கோர்த்து அதர்வண தெய்வத்திற்கு மாலை போட வேண்டும். அந்த உக்கிரமான அம்மன் கோவிலுக்கு சென்று, குடும்பத்தோடு வழிபாடு செய்து, இந்த மாலையை அம்மனுக்கு சாத்திவிட்டு குருக்களிடம் சொல்லிவிட்டு வாருங்கள். இந்த மாலையை மறுநாள் நானே வந்து பெற்றுக் கொள்கிறேன் என்று.

- Advertisement -

மறுநாள் சென்று அம்மனுக்கு சாத்திய அந்த எலுமிச்சை மாலையை நீங்கள் வாங்கி வீட்டிற்கு வர வேண்டும். வீட்டிற்கு வந்து இந்த எலுமிச்சம் பழம் மாலையை பூஜை அறையில் வைத்து குலதெய்வத்தை வேண்டி மனதார பிரார்த்தனை செய்து, அந்த மாலையை எடுத்து நிலை வாசல் கட்டி விட வேண்டும். இவ்வளவுதான் வழிபாடு. அந்த எலுமிச்சம் பழம் மாலை போக போக காயத் தொடங்கும்.

எலுமிச்சம்பழம் நன்றாக காய்ந்த பிறகு எலுமிச்சம் பழமாலையை எடுத்து கால் படாத இடத்தில், ஒதுக்கு புறமாக போட்டு விடுங்கள். ஏழு நாட்கள் வரை அந்த மாலை நிலை வாசல் படியிலேயே இருக்கலாம். ஒருவேளை போட்ட உடனே எலுமிச்சம் பழங்கள், அழுகத் தொடங்கி விட்டால், அந்த மாலையை உடனடியாக கழட்டி வீட்டிலிருந்து அப்புறப்படுத்தி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் கல் உப்பு

நிலை வாசலில் கட்டிய அம்மன் கழுத்தில் போட்ட எலுமிச்சம்பழம் அழுகி விட்டால், ஏதேனும் பாதிப்பு என்று கேட்டால், நிச்சயம் கிடையாது. உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை, இந்த எலுமிச்சம் பழம் தன்னகத்தை ஈர்த்துக் கொண்டது என்று தான் அர்த்தம். அதற்காக பயப்பட வேண்டாம். எலுமிச்சம் பழமாலையை அப்புறப்படுத்தி விட்டால் போதும். மற்றபடி எலுமிச்சம்பழம் காயும் போது பெருசாக உங்களுடைய வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆன்மீகம் தகவல் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்