- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர்க்கும் கல் உப்பு

கடன் தீர்க்கும் கல் உப்பு

- Advertisement -

பணம் தொடர்பாக எப்படிப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் அந்த பிரச்சினைகள் தீர்ந்து பணவரவு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பல விதமான முயற்சிகளை நாம் மேற்கொள்வோம். அந்த முயற்சிகளில் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக வழிப்பாட்டையும், பரிகாரங்களையும் செய்வோம். இருப்பினும் ஒரு சிலருக்கு பணத்தை சம்பாதிப்பதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றிகளை ஏற்படாது. அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய வீட்டு சமையலறையில் கல் உப்பை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கடன் அடைய கல் உப்பு பரிகாரம்

நம்முடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய பணத்தை அதிக அளவில் சம்பாதித்தால் தான் நம்மால் நிம்மதியாக வாழ முடியும். ஒரு சிலருக்கு எவ்வளவு தான் பணத்தை சம்பாதித்தாலும் ஏதாவது ஒரு வீண் விரயத்தால் பணம் அனைத்தையும் செலவு செய்து விட்டு குடும்பத்தை நடத்துவதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் கவலைப்படுவார்கள். அப்படிப்பட்டவர்களும் கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு கடனை திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்படுபவர்களும் செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரம்.

- Advertisement -

பொதுவாக வழிபாடாக இருந்தாலும் பரிகாரமாக இருந்தாலும் அதற்காக நாம் சில பொருட்களை வாங்கி வந்து சில வழிமுறைகளை பின்பற்றுவோம். அப்படி பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல் அதை குறிப்பிட்ட நாட்கள் தொடர்ச்சியாகவும் மேற்கொள்வோம். இவை அனைத்தையும் செய்யாமல் சாதாரணமாக நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய சில விஷயங்களை மாற்றி அமைத்தாலே நம்முடைய வாழ்வில் பெருமளவு மாற்றம் என்பது உண்டாகும். நம்முடைய முன்னோர்கள் நேர்மறையான வார்த்தைகளை உபயோகப்படுத்தினால் நம்முடைய வாழ்க்கையும் நேர்மறையாக இருக்கும் என்று கூறுவார்கள் அல்லவா? அதே போல் தான் இந்த வழிமுறையும்.

நம்முடைய பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கு உதவக்கூடிய தெய்வமாக மகாலட்சுமி தாயார் திகழ்கிறார். மகாலட்சுமி தாயாருக்கு உகந்த பொருட்களுள் ஒன்றாகவும் மகாலட்சுமி அம்சமாகவும் கருதக்கூடியது தான் கல்லுப்பு. அதனால் தான் வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் கல் உப்பை வீட்டிற்கு வாங்கி வந்து வைக்க வேண்டும். அப்பொழுது மகாலட்சுமியை வீட்டிற்குள் வருவதாக அர்த்தம் என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட கல் உப்பை சமையலறையில் நாம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைப்பதன் மூலம் பணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மகாலட்சுமியை சமையலறையில் இந்த இடத்தில் வைப்பதன் மூலம் சிறப்பான வருமானம் உண்டாகும். பொதுவாகவே குபேரரின் மூலையாக கருதப்படக் கூடியதுதான் ஈசானிய மூவை என்று கூறக்கூடிய வடகிழக்கு மூலை. சமையலறையில் இந்த மூலையில் நாம் கல் உப்பை வைக்க வேண்டும். கல்லுப்பை பிளாஸ்டிக் டப்பாவில் வைப்பதற்கு பதிலாக பீங்கான் ஜாடியில் வைக்கலாம். அதைவிட உத்தமமானது மண்பானையில் வைப்பது தான். மண்பானையில் கல் உப்பை போட்டு அதன் மேல் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து விடுங்கள். நாம் எப்பொழுதும் போல் சமையலுக்கு உபயோகப்படுத்துவதற்கு அந்த உப்பை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி ஈசானிய மூலையில் கல் உப்பை வைத்து சமையலுக்கு பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய குடும்பத்தில் இருக்கக்கூடிய கடன் என்பது படிப்படியாக குறையும். அது குறைவதற்குரிய பணவரவு ஏற்படும். நாம் செய்யக்கூடிய முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: சனி மகா சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

எளிமையான வழிமுறைதான், இதை செய்வதற்கு நேரமும் செலவாகாது பணமும் செலவாகாது. நம் வீட்டில் இருக்கக்கூடிய கல் உப்பை இந்த இடத்தில் வைத்தால் போதும் நம்முடைய வாழ்க்கையில் கடன் என்ற பேச்சுக்கு இடமில்லாமல் போகும். முழு நம்பிக்கையோடு இதை செய்து முழு பலனையும் பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்