- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவேண்டிய வரம் கிடைக்க அம்பாள் வழிபாடு

வேண்டிய வரம் கிடைக்க அம்பாள் வழிபாடு

- Advertisement -

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான பிரச்சினையை தீர்ப்பதற்காக ஆலய வழிபாட்டை மேற்கொள்வார்கள். ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒவ்வொரு வகையான தெய்வங்களை வழிபடவும் செய்வார்கள். இதோடு மட்டுமல்லாமல் குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு என்று பல வழிபாடுகள் இருக்கின்றன. என்ன பிரச்சனை தீர வேண்டும் என்று வரம் கேட்கிறோமோ அந்த வரத்தை பெறுவதற்கு அம்பாளை எந்த முறையில் வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற மூன்று சக்திகளும் ஒரு சேர இருக்கக்கூடிய தெய்வமாக திகழ்பவள்தான் அம்பாள். அம்பாளை வழிபடும் பொழுது சக்தி, லட்சுமி, சரஸ்வதி என்ற மூன்று தெய்வங்களையும் வழிபடுவதற்குரிய பலனை நம்மால் பெற முடியும். அப்படிப்பட்ட அம்பாளிடம் நாம் எந்த வரத்தை கேட்டாலும் அந்த வரம் கிடைக்க வேண்டும் என்றால் ஒரு சூட்சுமமான வழிபாடு இருக்கிறது.

- Advertisement -

இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். அருகில் இருக்கக்கூடிய அம்பாள் ஆலயத்திற்கு வெள்ளிக்கிழமை அன்று வரக்கூடிய சுக்கிர ஹோரையில் செல்ல வேண்டும். இவ்வாறு செல்லும் பொழுது அம்பாளுக்கு நெல்லிக்காய் மாலை தயார் செய்து எடுத்துச் செல்ல வேண்டும். 11, 27, 51, 101 என்ற எண்ணிக்கையில் நல்ல சுத்தமான நெல்லிக்காய்களாக பார்த்து வாங்கி அதை மஞ்சள் கலந்த தண்ணீரில் கழுவி மஞ்சள் நிற நூலினால் மாலையாக கோர்த்து தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த மாலையை வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் அம்பாளுக்கு அணிவித்து இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து நாம் நியாயமான வரம் எந்த வரமாக இருந்தாலும் அந்த வரத்தை அம்பாளிடம் கேட்கும் பொழுது கண்டிப்பாக முறையில் அந்த வரம் கிடைக்கும். இதோடு மட்டுமல்லாமல் இதே வழிபாட்டை மகாலட்சுமி தாயாருக்கும் நாம் செய்யலாம்.

- Advertisement -

கடன் பிரச்சனை தீர வேண்டும், பணரீதியான பிரச்சினைகளுக்கு நல்ல முடிவு கிடைக்க வேண்டும், திருமண வரம் வேண்டும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும், குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும், குடும்பம் நிம்மதியாக இருக்க வேண்டும், மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்க வேண்டும், தொழில் லாபகரமாக நடக்க வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று நம்முடைய வாழ்க்கையில் நமக்கு வேண்டிய எந்த வரமாக இருந்தாலும் அந்த வரத்தை இந்த முறையில் நெல்லிக்காய் மாலை அணிவித்து கேட்கும்பொழுது கண்டிப்பான முறையில் அந்த வரம் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த முறையில் தொடர்ந்து ஏழு வாரங்கள் வழிபாடு செய்ய வேண்டும். ஏழாவது வாரம் அம்பாளுக்கு சர்க்கரை பொங்கல், பால் பாயாசம் என்று நம்மால் இயன்ற ஏதாவது ஒரு பிரசாதத்தை நெய்வேத்தியமாக வைத்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: அரசு வேலை கிடைக்க எளிமையான வழிபாட்டு முறை

மிகவும் எளிமையான இந்த வழிபாட்டில் முழு நம்பிக்கை வைத்து நெல்லிக்காய் மாலையை சாற்றி வேண்டிய வரங்களை பெற்றுக் கொள்வோம்.

சற்று முன்