அரசு வேலை கிடைக்க எளிமையான வழிபாட்டு முறை

gover job
- Advertisement -

அன்றைய காலத்தில் இருந்து இன்றைய காலம் வரை அரசு வேலையில் இருப்பவர்களுக்கு என்று தனி மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. அன்றைய காலத்தில் அரசாங்க வேலை கிடைப்பது என்பது பெரிய விஷயமே இல்லை. ஏனென்றால் பலரும் அந்த வேலைக்காக முயற்சி செய்திருக்க மாட்டார்கள். ஆனால் இன்றைய காலத்தில் வேலையில் இருப்பவர்களும், வேலை இல்லாமல் இருப்பவர்களும், படித்துக் கொண்டு இருப்பவர்களும், படித்து முடித்தவர்களும் என்று பல தரப்பினரும் அரசாங்க வேலை வேண்டும் என்பதற்காக அரசு தேர்வுகளை எழுதும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அதனால் போட்டித் தேர்வு என்பது மிகவும் கடுமையாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட போட்டித் தேர்வில் வெற்றி பெறவும் அரசாங்க வேலையில் அமரவும் செய்யக்கூடிய ஒரு தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

முயற்சி திருவினையாக்கும் என்பது பழமொழி. இந்த முயற்சியோடு தெய்வ வழிபாட்டியும் நாம் மேற்கொள்ளும் பொழுது அந்த முயற்சி வெற்றி அடைவதற்கு தெய்வத்தின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்ற அடிப்படையில் அரசு தேர்வு எழுதுவதற்காக படித்துக்கொண்டு இருக்கும் நபர்கள் தங்களுடைய முழு நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டையும் மேற்கொள்ள அவர்களுடைய முயற்சிகள் வெற்றி அடையும்.

- Advertisement -

பொதுவாக அரசு வேலை என்றாலே சூரியபகவான் என்று தான் சொல்லுவோம். சூரிய பகவானிற்குரிய கிழமையாக ஞாயிற்றுக்கிழமை திகழ்கிறது. தினமுமே சூரிய உதயம் ஆகும் பொழுது சூரிய பகவானை பார்த்து வழிபட்டோம் என்றால் அவரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அப்படி கிடைக்கும் பட்சத்தில் அரசாங்க வேலையோ அல்லது அரசு தொடர்பான வேலைகளோ நமக்கு சாதகமாக முடியும் என்று கூறப்படுகிறது.

அப்படிப்பட்ட சூரிய பகவானை ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய ஹோரையான காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள்ளோ அல்லது மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள்ளோ வழிபடும் பொழுது சூரிய பகவானின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். இதற்காக ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் இருந்து கொண்டே இந்த வழிபாட்டை நாம் செய்யலாம்.

- Advertisement -

சூரிய ஒளி நம்மீது படும் இடமாக பார்த்து ஒரு இடத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். ஒரு தாம்பாளத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பாளத்திற்கு மஞ்சள் குங்குமம் வைத்து விடுங்கள். பிறகு ஒரு அரச இலையை எடுத்து மஞ்சள் கலந்த தண்ணீரில் சுத்தம் செய்து அந்த அரச இலைக்கும் மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த அரசு இலையை தாம்பாளத்தில் வைத்து அரச இலைக்கு மேல் சிறிதளவு முழு கோதுமையை வைக்க வேண்டும்.

அதற்கு மேல் மஞ்சள் குங்குமம் வைத்த ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்திற்கு முன்பாக வெற்றிலை பாக்கு வாழைப்பழம் சிறிது கற்கண்டு இவற்றை சூரிய பகவானுக்கு நெய்வேத்தியம் செய்வது போல் வைக்க வேண்டும். பிறகு பஞ்ச பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் மஞ்சள் பொடியை கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது இந்த விளக்கை கிழக்கு முகமாக எரியும்படி வைத்துக்கொண்டு அதற்குப் பின்பாக நாமும் கிழக்கு முகமாக அமர்ந்து கொண்டு சூரிய பகவானுக்குரிய காயத்ரி மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். காயத்ரி மந்திரம் தெரியாதவர்கள் “ஓம் சூரிய பகவானே போற்றி” என்னும் எளிமையான மந்திரத்தை கூட கூறலாம். இப்படி 108 முறை கூற வேண்டும்.

பிறகு பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் தீர்த்தத்தை எடுத்து மூன்று முறை சூரிய பகவானை பார்த்தவாறு கீழே விட வேண்டும். அவ்வளவுதான் சூரிய பகவானின் வழிபாடு முடிந்துவிட்டது. அந்த தீபம் முழுமையாக எரிந்து முடிந்த பிறகு அதை எடுத்து பூஜையறையில் வைத்து விடலாம். கோதுமையை எறும்புகளோ, பறவைகளோ சாப்பிடும் வகையில் தானமாக வைத்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: செல்வ வளம் பெருக பெருமாள் வழிபாடு

இந்த முறையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு நம்பிக்கையுடன் வழிபடுபவர்களுக்கு சூரிய பகவானின் அருள் பரிபூரணமாக கிடைத்து அரசு வேலைக்கான தேர்வில் முழு முயற்சியுடன் எழுதுபவர்களுக்கு கண்டிப்பான முறையில் அரசாங்க வேலை கிடைக்கும்.

- Advertisement -