துர்க்கை அம்மனுக்கு இந்த நேரத்தில் விளக்கு போட்டு வழிபாடு செய்தால் கோடி நன்மைகள் தேடி வரும்.

durgai
- Advertisement -

நாம் எல்லோருக்கும் தெரியும். துர்கை அம்மன் வழிபாடு நமக்கு எவ்வளவு பெரிய பலம் என்பது. அதிலும் இந்த ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதில் நிறைய நன்மைகள் இருக்கிறது. வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கெட்ட நேரத்திலும் நமக்கு கஷ்டம் வந்து கழுத்தை நெரிக்காமல் இருக்க வேண்டும் என்றால் தினமும் ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்யலாம்.

இது எல்லோருக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய வழிபாடு. நீங்கள் எந்த ராசி, எந்த நட்சத்திரம் உங்களுக்கு ஜாதகத்தில் எந்த தோஷம் இருக்கிறது, எந்த தோஷம் இல்லை, அதையெல்லாம் பார்க்கவே வேண்டாம். கண்ணை மூடிக்கொண்டு தினமும் ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக துர்க்கை அம்மன் வழிபாட்டிற்கு, இந்த நேரத்தை நீங்கள் சரியாக பயன்படுத்தினால், உங்களுக்கு கோடி நன்மைகள் தேடி வரும் என்று சொல்லப்பட்டுள்ளது. அது எந்த நேரம் தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

ராகு கால துர்க்கை அம்மன் வழிபாடு

உதாரணத்திற்கு இப்போது செவ்வாய்க்கிழமை 3.00 மணியிலிருந்து 4.30 வரை ராகு கால நேரம் என்று வைத்துக் கொள்வோம். இதில் கடைசி 1/2 மணி நேரத்தை ‘அமிர்த கடிகை’ என்று சொல்லுவார்கள். அதாவது 4 மணியிலிருந்து 4.30 மணி வரை இருக்கக்கூடிய நேரம். இந்த அரை மணி நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கு போட்டு வழிபாடு செய்வது என்பது நமக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

- Advertisement -

துர்க்கை அம்மனுக்கு விளக்கு போடுவது என்பது காலம் காலமாக நம் கோவிலுக்கு சென்று தான் செய்கின்றோம். அதேபோல தான் இந்த வழிபாட்டையும் நீங்கள் கோவிலுக்கு சென்று செய்யுங்கள். இந்த நேரத்தில் இரண்டு மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றலாம். நெய் விளக்கும் ஏற்றலாம்.

சில பேருக்கு எலுமிச்சம்பழ தீபம் என்றும் வழக்கம் இருக்கும். உங்களுக்கு அந்த பழக்கம் இருந்தால் நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். தினமும் வரக்கூடிய ராகுகால நேரத்தை இதற்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாரத்தில் ஏழு நாட்களும் ராகு காலம் எந்த நேரத்தில் வருகிறது என்று உங்களுக்கு தெரியுமா.

- Advertisement -

ஞாயிறு: 4.30-6.00
திங்கள்: 7.30-9.00
செவ்வாய்: 3.00-4.30
புதன்: 12.00-1.30
வியாழன்: 1.30-3.00
வெள்ளி: 10.30-12.00
சனி: 9.00-10.30

ராகு காலத்தில் இருக்கும் அந்த கடைசி அரை மணி நேரத்தில் நீங்கள் செய்யும் வழிபாடு, பரிகாரம், பூஜையால் உங்களுடைய குடும்பம் சுபிட்சம் பெறும். இந்த நேரத்தில் செய்யக்கூடிய வழிபாடு இரட்டை பலனை நமக்கு பெற்றுத் தரும். அதிலும் துர்க்கை அம்பாளை வழிபாடு செய்து வரும்போது நம்முடைய குடும்பத்திற்கு கண் திருஷ்டி படாது.

இதையும் படிக்கலாமே: தளிகை போட முடியாதவர்கள் புரட்டாசி மாதம் பெருமாளை எப்படி வழிபாடு செய்வது?

ஏவல் பில்லி சூனியம் போன்ற பெரிய பாதிப்புகளால் இழப்பு எதுவும் ஏற்படாது. தொழிலில் முன்னேற இந்த ராகு காலை வழிபாட்டை நிறைய பெரிய மனிதர்கள் இன்றளவிலும் செய்து வருகிறார்கள். நகை கடை வைத்திருப்பவர்கள் இன்னும் சில வடமாநிலத்தவர்கள் எல்லாம் ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மன் பூஜை செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கும் இந்த வழிபாட்டின் மீது நம்பிக்கை இருந்தால் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பாருங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.

- Advertisement -