தளிகை போட முடியாதவர்கள் புரட்டாசி மாதம் பெருமாளை எப்படி வழிபாடு செய்வது?

perumal
- Advertisement -

இப்போது புரட்டாசி மாதமானது நடந்து கொண்டிருக்கிறது. முதல் வாரம் சனிக்கிழமை முடிந்துவிட்டது. இரண்டாவது வாரம் சனிக்கிழமை நாளை 7ஆம் தேதி வரவேற்கின்றது. மூன்றாவது வாரம் சனிக்கிழமை அமாவாசையோடு சேர்ந்து வருகின்ற சனிக்கிழமை. அடுத்த வாரம் பெரும்பாலும் எல்லோரும் முன்னோர்கள் வழிபாடு செய்யத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

ஆகவே நாளைய தினம் முடிந்தவர்கள் பெருமாளுக்கு இந்த வழிபாட்டை செய்யலாம். நாளை இந்த வழிபாட்டை செய்ய முடியாதவர்கள், நான்காவது வாரம் சனிக்கிழமை, ஐந்தாவது வாரம் சனிக்கிழமை கூட இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். உங்களால் தளிகை போட முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, பெருமாளை நாளைய தினம் இப்படி வழிபாடு செய்யுங்கள்.

- Advertisement -

அந்த பெருமாளுக்கு தளிகை போட்டு வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்குமோ அதை விட பல மடங்கு பலனை பெற, நாளைய தினம் பெருமாளை எப்படி வழிபாடு செய்யணும். ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோமா.

தளிகை போடாமல் பெருமாளை எப்படி வழிபாடு செய்வது?

நாளை அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். பெருமாளை மனதார பிரார்த்தனை செய்து கொண்டு சுத்தமான பச்சரிசி எடுத்து அதை நன்றாக கழுவி காய வைத்துக் கொள்ளுங்கள். சுத்தம் செய்த பச்சரிசியை மிக்ஸி ஜாரில் போட்டு ஏலக்காய் போட்டு நைசாக பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த மாவில் பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றப் போகின்றோம். அரைத்த ஏலக்காய் வாசம் நிறைந்த பச்சரிசி மாவில் கொஞ்சமாக வெல்லம் சேர்த்து பிசைய வேண்டும். அந்த வெலல்த்தில் இருக்கும் தண்ணீரே நமக்கு போதுமானது. தேவைப்பட்டால் மிகக் குறைந்த அளவு தண்ணீரை ஊற்றி மாவை பிசைந்து மாவிளக்கு தயார் செய்து கொள்ளுங்கள்.

அதில் நெய் ஊற்றி திரி போட்டு பூஜை அறையில் பெருமாளின் படத்திற்கு முன்பு வைத்து ஏற்றி விடுங்கள். வாழை இலையில் இந்த மாவிளக்கு வைத்து ஏற்றலாம். அப்படி இல்லை என்றால் பித்தளை தட்டில் இந்த மாவிளக்கு வைத்து ஏற்றுங்கள். பிறகு உங்களுடைய வீட்டில் எப்போதும் போல ஏற்றக்கூடிய விளக்குகளை ஏற்றலாம்.

- Advertisement -

பெருமாளுக்கு துளசி இலைகளால் அலங்காரம் செய்து விடுங்கள். பஞ்சபாத்திர தண்ணீரில் துளசி, இலை, கிராம்பு, ஏலக்காய், ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம், போட்டு தீர்த்தம் தயார் செய்து கொள்ளுங்கள். கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்தை எழுப்பி கற்பூர ஆரத்தி காண்பித்து இந்த பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

அந்த வெங்கடாசலபதி உங்கள் வீட்டிற்குள் வந்து உங்களை ஆசீர்வாதம் செய்த மன நிறைவை நீங்கள் பெற்றுவிடுவீர்கள். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த பெருமாள் வழிபாடு தான் இது. இந்த மாவிளக்கை போட்டு வைத்து கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்தை எழுப்பினால் உங்கள் வீட்டிற்கு வெங்கடாஜலபதி வருகை தருவார் என்பது நம்பிக்கை.

கலவை சாதம் எல்லாம் செய்து வைத்து வடை பாயசம் எல்லாம் செய்து வைத்து தளிகை போட முடியாதவர்கள் மேல் சொன்ன இந்த எளிமையான வழிபாட்டை மேற்கொண்டாலே பெருமாளின் ஆசிர்வாதம் உங்கள் குடும்பத்திற்கு முழுமையாக கிடைத்துவிடும். அதிலும் உங்களுடைய குலதெய்வம் பெருமாளாக இருந்தால் இந்த புரட்டாசி மாதத்தில் நீங்கள் இந்த வழிபாட்டை ஏதாவது ஒரு சனிக்கிழமை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: உங்களுடைய வீட்டில் ஐஸ்வர்யம் தாண்டவமாட ஒரு கட்டி பெருங்காயம் போதும்.

பெருமாள் குலதெய்வமே இல்லை என்பவர்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். அதன் மூலம் எந்த ஒரு தவறும் கிடையாது. இந்த மாவிளக்கை பிரசாதமாக வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சாப்பிடலாம். தவறு கிடையாது. சில பேர் இதை கொண்டு போய் பசு மாட்டிற்கு கொடுப்பார்கள் அதுவும் தவறு கிடையாது. வழிபாட்டை முடித்துவிட்டு பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் தீர்த்தத்தை எல்லோரும் பருகலாம். எளிமையான ஆன்மீகம் சொல்லும் இந்த வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -