பெண்கள் வெளியே செல்லும் போது இதை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு போனாலே போதும். கண் திருஷ்டி, கெட்ட சக்தி, எதிர்மறை ஆற்றல் எதுவும் அந்தப் பெண்ணை நெருங்காது.

virali-manjal

பெண்கள் என்றாலே அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் தான். கண்ணுக்கு தெரிந்த சில பிரச்சனைகளிலிருந்து பெண்களை பாதுகாப்பது ஒரு கஷ்டம் என்றால், கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றல், கண் திருஷ்டி கெட்ட சக்தி இவைகளிடமிருந்தும் பெண்களைப் பாதுகாக்க வேண்டியது மிக மிக அவசியம். அந்த காலம் போன்று இந்த காலம் இல்லை. பெண்களும் நேரம் காலம் பார்க்காமல் வெளியே சென்று வரவேண்டிய சூழ்நிலை. காரணம் ஆண்களும் பெண்களும் சமம் என்ற சூழ்நிலை வந்துவிட்டது. இருப்பினும் பெண்களுக்கு உண்டான பிரச்சனைகள் மட்டும் குறைந்தபாடில்லை.

kumari-amman

ஆன்மீக ரீதியாக பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யலாம், எந்த பொருளை தங்களுடைய கையில் வைத்துக் கொள்ளலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பெண்கள் என்றாலே அவர்கள் தினம்தோறும் அம்பாளை மனதார நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். உலகுக்கே தாயாக இருப்பவள் அந்த சக்தி தேவி! அந்த சக்தி தேவியின் ஸ்வரூபத்தில் தான் பெண்கள் இந்த பூலோகத்தில் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆக பெண்களின் மனம் உறுதி அடைய, பெண்கள் தைரியமாக வாழ்க்கையை எதிர்கொள்ள அம்பாள் வழிபாடு நிச்சயமாக கை கொடுக்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகமே இல்லை. பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள ஆன்மீக ரீதியாக, ஒரே ஒரு விரலிமஞ்சளை கையில் வைத்துக் கொண்டாலே போதும். காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கொள்ளுங்கள்.

virali-manjal

உங்களுடைய வீட்டு பூஜை அறையில் கட்டாயம் ஏதாவது ஒரு அம்மனின் திருவுருவ படம் இருக்கும். அந்த அம்மனின் திருவுருவ படத்திற்கு முன்பாக ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அந்த அம்மனின் பாதத்தில் இந்த ஒரு மஞ்சளை வைத்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். உங்களை எந்த துர் சக்திகளும் அண்டக் கூடாது, கண் திருஷ்டியால் பிரச்சனைகள் ஏற்படக் கூடாது. எந்தவித எதிர்மறையான பிரச்சனையும் நீங்கள் வெளியே செல்லும் போது, உங்களுக்கு நேரக்கூடாது, என்றபடி மனதார பிரார்த்தனை செய்துகொண்டு, மூன்று முறை ‘ஓம் சக்தி’ என்று உச்சரித்து பூஜையை நிறைவு செய்துகொள்ள வேண்டும். அந்த விரலி மஞ்சளை எடுத்து முடிந்தால் உங்களுடைய முந்தானையில் முடிந்து வைத்துக் கொள்ளலாம்.

முடியாதவர்கள் உங்களுடைய ஹேண்ட்பேக் அல்லது பர்ஸில் கூட இந்த மஞ்சளை பத்திரமாக வைத்துக் கொண்டு வெளியே செல்லலாம். மீண்டும் வீடு திரும்பிய பின்பு அந்த மஞ்சளை சுவாமியின் படத்திற்கு முன்பாகவே வைத்துவிடுங்கள். தினம்தோறும் அந்த மஞ்சளை கையோடு எடுத்துச் சென்றால், கண்ணுக்கு தெரியாத எதிர்மறை ஆற்றலிலிருந்து நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

பொதுவாகவே நல்ல விசேஷங்களுக்கு விரலி மஞ்சளை, மஞ்சள் கயிற்றில் கட்டி, கையில் காப்பு கட்டும் பழக்கம் இருக்கும். எதற்காக இந்த காப்பு? விசேஷ தினங்களில் அழகாக அலங்காரம் செய்து கொள்ளும் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு கண்ணுக்கு தெரியாத எதிர்மறை ஆற்றலின் மூலம் எந்த ஒரு பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான். மஞ்சளுக்கு என்று எப்போதுமே தனி மகத்துவம் உண்டு. அதிலும் அம்பாள் பாதத்தில் இருந்து வைத்து எடுத்த மஞ்சள் என்றால், அதில் கெட்ட சக்தி நெருங்குவதற்கு வாய்ப்பே கிடையாது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் இந்த ஆன்மீகம் குறிப்பை முயற்சி செய்து பார்க்கலாம். நல்லதே நடக்கும்.