அம்மனுக்கு தக்காளியால் அபிஷேகம் நடக்கும் வினோத கோவில்

amman-1

நாம் கடவுளுக்கு எத்தனயோ விதமான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்வதை பார்த்திருப்போம். ஆனால் தமிழ் நாட்டில் உள்ள ஒரு கோவிலில் தக்காளி சாறு கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் ஒரு அற்புத நிகழ்வு நடக்கிறது. வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.

kamatchi amman

காரைக்குடியில் உள்ள மீனாட்சிபுரம் என்னும் பகுதியில் அமைந்துள்ளது முத்து மாரியம்மன் திருக்கோவில். வருடா வருடம் இங்கு நடக்கும் திருவிழா சமயங்களில் இங்குள்ள அம்மனுக்கு தக்காளி சாராள் பிரத்யேக அபிஷேகம் நடக்கிறது. ஏன் இந்த வினோதமான அபிஷேகம் என்று விசாரிக்கையில் இதற்கு ஒரு முக்கிய காரணமும் கூறப்படுகிறது.

கடந்த 1956 ஆம் ஆண்டு இந்த பகுதிக்கு ஒரு சிறுமி வந்துள்ளார். லலிதா என்று அழைக்கப்பட்ட அந்த சிறுமியின் உடல் முழுவதும் அம்மை இருந்துள்ளது. அந்த சிறுமி பலருக்கும் அருள் வாக்கு சொல்லி பலரின் துன்பங்களை போக்க வழி செய்துள்ளார். இவரின் புகழ் வெகு விரைவில் அந்த பகுதியில் பரவி உள்ளது.

amman

அந்த சிறுமி நாடகம் ஆடுகிறார், அவருக்கு சக்தி எல்லாம் எதுவும் கிடையாது என்றும் பலர் கூறி வந்துள்ளனர். ஒரு நாள் தன்னுள் இருக்கும் சக்தியை பற்றி நம்பிக்கை இல்லாமல் தன்னை ஏளனம் செய்த ஒருவரை அழைத்த அந்த சிறுமி, உங்கள் வீட்டு தோட்டத்தில் ஒரு கிணறு உள்ளது அந்த கிணற்றுக்கு அருகில் ஒரு தக்காளி செடி உள்ளது. அதில் உள்ள தக்காளியை எனக்கு பறித்து வாருங்கள் என்று கூறி உள்ளார்.

- Advertisement -

அந்த நபர் அது வரை அந்த இடத்தில் தக்காளி செடியை பார்த்ததே கிடையாது. எனினும் சிறுமியின் பித்தலாட்டத்தை இன்று நிரூபிக்கலாம் என்று நினைத்துக்கொண்டு அவர் கிணற்றருகில் சென்றுள்ளார். என்ன ஆச்சர்யம்! அங்கு ஒரு தக்காளி செடியும் அதில் தக்காளியும் இருந்துள்ளது. இதை கண்டு ஆச்சர்யம் அடைந்த அந்த நபர், சிறுமியின் சக்தியை உணர்ந்து அவருக்கு தக்காளியை பறித்து கொண்டுபோய் கொடுத்துள்ளார்.

Amman

அன்று முதல் பலரும் அந்த சிறுமிக்கு தக்காளியை காணிக்கையாக கொடுக்க ஆரமித்துள்ளனர். சில நாட்களில் சிறுமிக்கு அம்மையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. ஆனாலும் அவர் அருள் வாக்கு சொல்வதை நிறுத்தவில்லை. இறைவனின் பூரண அருள் பெற்ற அந்த சிறுமி, ஒரு நாள், நான் இறைவனிடம் செல்லும் நேரம் வந்துவிட்டது. ஆனால் அதன் பிறகும் உங்களுக்கு நான் அருள்புரிய விரும்புகிறேன் ஆகையால் இந்த இடத்தில் ஒரு கோவில் கட்டுங்கள் என்று கூறிவிட்டு மறைந்துள்ளார்.

இதையும் படிக்கலாமே:
கடல் நீரை இனிப்பாக மாற்றும் முருகன் கோவில் கிணறு – ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்

அதன் பிறகு அங்கு முத்து மாரியம்மனுக்கு கோவில் கட்டி மக்கள் அங்கு வழிபட ஆரமித்துள்ளனர். அந்த ஆலயத்தில் இன்று வரை அந்த அம்மனுக்கு பிடித்த தக்காளி சாரால் அபிஷேகம் நடக்கிறது.