- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணப் பிரச்சினையையும் மனப்பிரச்சினையையும் தீர்க்கும் சந்திர வழிபாடு

பணப் பிரச்சினையையும் மனப்பிரச்சினையையும் தீர்க்கும் சந்திர வழிபாடு

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் பணத்திற்கென்று முக்கியமான பங்கு இருக்கிறது. அந்த பணத்தை எப்படி கையாள வேண்டும் என்பதை நிர்ணயிக்கக் கூடியது நம்முடைய மனம் தான். நம்முடைய மனதில் ஏதாவது ஒன்றை நினைத்துக் கொண்டு ஏதாவது ஒரு செயலை செய்தோம் என்றால் அந்த செயலில் எந்த வித வெற்றியும் ஏற்படாது. அந்த அளவிற்கு மனம் என்பது நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும். மனம் தொடர்பான எந்த பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சினை தீர்வதற்கு சந்திர பகவானே அருள் புரிவார். அதனால் தான் அவரை மனோகாரகன் என்று கூறுவது உண்டு. சந்திர பகவானை தொடர்ச்சியாக வழிபாடு செய்யும்பொழுது மனம் தெளிவடைந்து சிறப்பான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்க முடியும். அந்த வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

பணப் பிரச்சினை தீர்க்கும் வழிபாடு

சந்திர பகவானின் முழு ஆதிக்கம் நிறைந்த நாளாக கருதப்படுவது தான் பௌர்ணமி. அதிலும் குறிப்பாக திங்கட்கிழமையுடன் சேர்ந்து வரக்கூடிய பௌர்ணமிக்கு அதீத பலன் இருக்கிறது. ஏனென்றால் திங்கட்கிழமை என்பது சந்திர பகவானுக்குரிய கிழமையாக கருதப்படுவதுதான். அதிலும் சித்ரா பௌர்ணமி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த நாளில் சந்திர பகவான எளிமையான முறையில் நாம் வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை மே மாதம் 12ஆம் தேதி விடியற்காலை 4 மணியிலிருந்து இரவு 10 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். ராகுகால, எமகண்ட நேரத்தை மட்டும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மந்திரத்தை கூறுவதற்கு முன்பாக சுத்தமாக குளித்திருக்க வேண்டும். அதேபோல் எந்தவித உணவையும் எடுக்காமல் வெறும் வயிற்றில் இந்த மந்திரத்தை கூறும்பொழுது அதற்குரிய பலன் இன்னும் அதிகமாகவே இருக்கும்.

தங்களுடைய வசதிக்கேற்ப ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு சந்திர பகவான் தனி சன்னதியில் வீற்றியிருப்பார். சந்திர பகவானுக்கு முன்பாக அமர்ந்து சந்திர பகவானை முழுமனதோடு நினைத்து பணம் தொடர்பான பிரச்சனைகள் தீர வேண்டும், மனம் தொடர்பான பிரச்சனைகள் தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பின்வரும் சந்திர பகவானின் காயத்ரி மந்திரத்தை 36 முறை கூற வேண்டும். பிறகு திரும்பவும் பணம் தொடர்பான பிரச்சனையை தீர வேண்டும் மனம் தொடர்பான பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டிக்கொண்டு வழிபாட்டை நிறைவு செய்துவிடலாம். ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய இயலவில்லை என்பவர்கள் வீட்டு பூஜை அறையில் அமர்ந்து கொண்டும் இந்த மந்திரத்தை கூறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மந்திரம்

“ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சோம ப்ரசோதயாத்”

இதையும் படிக்கலாமே:சித்ரா பௌர்ணமி அன்று செய்ய வேண்டிய 5 முக்கியமான வழிபாட்டு முறைகள்

இந்த சந்திர பகவானின் காயத்ரி மந்திரத்தை மற்ற நாட்களில் கூறுவதை விட திங்கட்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய சித்ரா பௌர்ணமி அன்று நாம் கூறுவதன் மூலம் கோடிமுறை கூறியதற்குரிய பலன் கிடைக்கும் என்பதால் முழு மனதோடு இந்த மந்திரத்தை கூறி சந்திர பகவானின் அருளை பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்