உடல் சோர்வாக உள்ளதா? காய்ச்சல் வருவது போல் தோன்றுகிறதா? உடனே இந்த முருங்கை கீரை சூப் வைத்துக் குடித்து பாருங்கள் அனைத்தும் பறந்து போகும்

murungai-keerai-soup
- Advertisement -

அதிகப்படியான உடல் உழைப்பு காரணமாகவும் உடல் சோர்வு ஏற்படும், அல்லது வெகு தூரம் பிரயாணம் செய்து விட்டு திரும்பி வரும் பொழுது உடல் களைப்பாக இருக்கும், மற்றும் காய்ச்சல் வரப்போவதாக இருந்தாலும் முதலில் உடல் சோர்வு தான் உண்டாகும். இவ்வாறு உடல் சோர்வு வரும் பொழுது அதனை சரி செய்து விட்டால் காய்ச்சல் வராமல் தடுத்துவிட முடியும். இப்படி உடல் சோர்வை சரி செய்வதற்காக மருந்து கடைகளுக்கு சென்று தேவையற்ற மாத்திரைகளை வாங்கி உபயோகிப்பதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நிரந்தர தீர்வு கிடைப்பதில்லை. இதன் மூலம் பிற்காலத்தில் தேவையற்ற பிரச்சனைகள் வர தோன்றும். எனவே நமது பாரம்பரிய முறைப்படி சூப் குடிப்பது அல்லது கசாயம் வைத்து குடிப்பதே இது போன்ற முறைகளை பின்பற்ற வேண்டும். அவ்வாறு உடல் சோர்வை போக்க வல்ல ஒரு முருங்கைக்கீரை சூப்பை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
முருங்கைக் கீரை – ஒரு கைப்பிடி, தக்காளி – 1, சின்ன வெங்காயம் – 6, பூண்டுப் – 5 பல், சீரகம் – ஒரு ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், தனியா – ஒரு ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், மிளகுத்தூள் – அரை ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் முருங்கைக்கீரையை கிள்ளி வைத்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதும் கீரை பொறியல் செய்வதற்கு ஏற்றார்போல் கீரையின் இலைகளை மட்டும் கிள்ளி வைப்போம். அது போல் இல்லாமல் மெல்லிய காம்புகளுடன் இருக்கும்படி கீரையை கிள்ளி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு முருங்கைக்கீரையை இரண்டு, மூன்று முறை தண்ணீர் விட்டு சுத்தமாகக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பிறகு ஒரு குக்கரை எடுத்துக்கொண்டு, அதில் சுத்தம் செய்த முருங்கைக்கீரையை சேர்க்க வேண்டும். பிறகு அதனுடன் வெங்காயம் மற்றும் பூண்டை தோலுரித்து சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் ஒரு தக்காளியை பொடியாக நறுக்கி இவற்றுடன் சேர்க்க வேண்டும். பிறகு இதனுடன் ஒரு ஸ்பூன் தனியா, ஒரு ஸ்பூன் சீரகம்,அரை ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலத்து விட வேண்டும். பிறகு இவற்றுடன் இரண்டு அல்லது 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து விட்டு, குக்கரை மூடி, அடுப்பின் மீது வைக்க வேண்டும். பிறகு குக்கரில் இருந்து 3 விசில் வரும் வரை வேக வைத்து இறக்க வேண்டும்.

பின்னர் இவற்றில் இருக்கும் தண்ணீரை மட்டும் தனியாக வடிகட்டி எடுக்க வேண்டும். பிறகு இதனுடன் சேர்த்த பொருட்கள் அனைத்தையும் தனியாக எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அனைத்தையும் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு இவற்றையும் நன்றாக வடிகட்டி சூப்புடன் சேர்த்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான முருங்கைக்கீரை சூப் தயாராகிவிட்டது. இதனுடன் அரை ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து விட்டு குடித்து பாருங்கள். உங்கள் உடல் வலி அனைத்தும் பறந்து போய்விடும்.

- Advertisement -