இந்த 4 ராசியில் பிறந்தவர்கள் அன்பிற்கு அதிகம் ஏங்குபவர்களாக இருப்பார்களாம்! நீங்களும் அந்த ராசியில் ஒருவரா?

sad-astro

இந்த பிரபஞ்சமே அன்பினால் சூழப்பட்டுள்ளது. அன்புக்காக ஏங்குபவர்கள் இந்த உலகில் ஏராளமானோர் இருக்கின்றனர். மனிதன் மட்டுமல்லாமல் ஜீவராசிகள் அத்தனையும் அன்பினால் பிணைக்கப்பட்டவையாக உள்ளன. அன்பு இல்லையேல் இவ்வுலகம் இன்றளவும் இயங்காமல் போயிருக்கும். எவ்வளவு தான் மனிதன் நாகரிக வளர்ச்சியினால் மனசாட்சியின்றி நடந்து கொண்டாலும், அவனும் ஏதாவது ஒரு உண்மையான அன்பிற்கு ஏங்கி தான் கொண்டிருப்பான். அவ்வரிசையில் இந்த 4 ராசிக்காரர்கள் அதிக அளவு அன்பிற்காக ஏங்கி தவிப்பவர்களாக இருப்பார்களாம். அது எந்தெந்த ராசி? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்கள் பிரதிபலன் பாராது மற்றவர்களுக்கு உதவி செய்யும் ஆற்றல் கொண்டவர்கள். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி அன்பை மழையாகப் பொழிவார்கள் ஆனால் இவர்களுக்கு தேவைப்படும் அன்பு மற்றவர்களிடம் கிடைக்க அதிக அளவு போராட வேண்டிய சூழ்நிலையில் இருப்பார்கள். அப்படியே போராடி ஒருவருடத்தில் கிடைக்கும் அன்பும் இறுதியில் அவர்களுக்கு நிலைக்காமல் போய்விடும். கடைசி வரை உண்மையான அன்பிற்கு ஏங்கி கொண்டு இருப்பார்கள்.

மிதுனம்
Mithunam Rasi
மிதுன ராசிக்காரர்கள் தாராள மனம் படைத்தவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் மும்முரமாக செயல்படுவார்கள். அதிலும் இவர்களுடைய நெருக்கமானவர்களுக்கு எதுவென்றாலும் ஓடோடி போய் அரவணைப்பை கொடுப்பார்கள். ஆனால் இவர்களுக்கு தேவைப்படும் அன்பானது பல்வேறு காலகட்டங்களில் உடைந்து போய்விடும். எவ்வளவு தான் இவர்கள் விட்டுக்கொடுத்து சென்றாலும் இவர்களை புரிந்து கொள்வதற்கு மற்றவர்களுக்கு மனம் என்பது வருவதில்லை. சிறுவயது முதலே அன்புக்காக ஏங்கி ஏங்கி தவிப்பவர்களில் மிதுன ராசிக்காரர்களும் ஒருவராவார்.

துலாம்
Thulam Rasi
துலாம் ராசியில் பிறந்தவர்கள் நீதி, நேர்மை, நியாயம் என்று எப்பொழுதும் ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளாதவர்கள். எவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தாலும் நியாயத்தின் பக்கம் எப்பொழுதும் துணையாக நிற்பார்கள். அனைவரிடத்திலும் சரிசமமான அன்பை வாரி வழங்குவார்கள். பேதமின்றி அன்பு கொடுக்கும் இவர்களுக்கு உண்மையான அன்பு கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். யாராவது ஒருவர் நம்மீது உண்மையாக அன்பு செலுத்துவார்களா? என்று காத்துக் கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு அன்பு இவர்களுக்கு கிடைத்தால்! அவர்களுக்கு துலாம் ராசிக்காரர்கள் வரமாக மாறி விடுவார்கள்.

விருச்சிகம்
Viruchigam Rasi
விருச்சிக ராசிக்காரர்கள் எவரிடமும் எளிதாக பழகக் கூடியவர்களாக இருப்பார்கள். இதனால் இவர்களுக்கு நட்பு வட்டாரம் என்பது பெரியதாக அமையும். அனைவருடைய அன்பையும் இவர்கள் சம்பாதித்தாலும் அது ஏதாவது ஒரு கட்டத்தில் அவர்களுக்கு திருப்தி அடையாமல் செய்துவிடும். உண்மையான அன்பை இவர்கள் மற்றவர்களுக்கு கொடுத்தாலும், அவர்களிடத்தில் பதிலுக்கு பொய்யான அன்பு அதிகமாக வரும். அன்பை வழங்குவதில் கடன்காரர்களாக விளங்கும் விருச்சிக ராசிக்காரர்கள் ஒருபொழுதும் மற்றவர்களுக்கு தீங்கு இழைக்காதவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு மற்றவர்கள் துரோகம் செய்தாலும் கூட அவர்களை மன்னித்து தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் இனிமையானவர்களாக இவர்கள் இருப்பதால் பலருக்கும் இவர்களை ஏமாற்றுவது என்பது எளிதாகப் போய்விடுகிறது.

astrology

இந்த 4 ராசியில் பிறந்தவர்கள் மட்டுமல்ல! பூமியில் பிறந்த மனிதன் முதல் ஜீவராசிகள் அத்தனையும் அன்பிற்காக ஏங்கி தவித்துக் கொண்டு இருக்கின்றன. மற்றவர்கள் நம்மீது அன்பு செலுத்துவார்கள் என்று காத்துக் கொண்டு இருந்தால் கடைசி வரை உங்களுக்கு உண்மையான அன்பு என்பதே கிடைக்காமல் போய்விடும். எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நீங்கள் ஒருவரிடம் அன்பு செலுத்துங்கள்! அது என்றாவது ஒரு நாள் மீண்டும் உங்களுக்கு பல மடங்காக பெருகி திரும்ப கிடைக்கும் என்பதை நம்புங்கள்.

இதையும் படிக்கலாமே
இந்த 8 மூக்கில் உங்கள் மூக்கு எப்படி இருக்கும்? என்று நீங்கள் பார்த்தால்! உங்கள் குணாதிசயத்தை நாங்கள் சொல்கிறோம்.

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.