ஆந்திரா ஸ்பெஷல், ‘நல்ல கார பொடி’ ஒருவாட்டி இப்படி செஞ்சுதான் பாருங்களேன்! உங்க வீட்டில இந்த பொடியை எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

nalla-kara-podi
- Advertisement -

ஆந்திர சாப்பாடு என்றாலே நாக்கை இழுக்கும் அளவிற்கு காரசாரமாக இருக்கும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். ஆந்திராவில் பிரபலமாக இருக்கும் நல்ல கார போடி என்று சொல்லப்படும், இந்த ரெசிபியை உங்க வீட்ல ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க. நாவிற்கு சுவையை கொடுக்கும் இந்த இட்லி பொடியை சுடச்சுட இட்லி யோடு நல்லெண்ணெய் ஊற்றி பரிமாறினால் அவ்வளவு அருமையாக, அவ்வளவு வாசமாக இருக்கும். சரி, இந்த ரெசிபியை இப்பவே தெரிஞ்சுக்கலாமா? நல்லா காரசாரமா இருக்கறதுனால இதோட பேரு ‘நல்ல காரப் பொடி’ அப்படின்னு வச்சுட்டாங்க.

podi-idli2

நல்ல கார பொடி செய்ய தேவையான பொருட்கள்:
வர மல்லி – 1/2 கப், உளுந்து – 1/4 கப், கடலைப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், வரமிளகாய் – 10, கறிவேப்பிலை – 2 கொத்து, பூண்டு – 5 பல், சிறிய நெல்லிக்காய் அளவு – புளி, தேவையான அளவு உப்பு. சிலபேருக்கு வரை மல்லி வாசம் பிடிக்காது. இப்படிப்பட்டவர்கள் 1/2 கப் உளுந்து, 1/4 கப் அளவு வரமல்லி என்று அளவுகளை எடுத்துக்கொள்ளலாம். இந்த பொடிக்கு, காரம் கொஞ்சம் தூக்கலாக தான் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

- Advertisement -

அடுப்பில் ஒரு கனமான கடாயை வைத்து 1/2 ஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு மேலே சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு பொருளாக சேர்த்து வறுக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து முதலில் வர மல்லியை போட்டு, வர மல்லி வாசம் வரும் வரை சிவக்க வேண்டும். அடுத்தபடியாக உளுந்தையும், கடலை பருப்பையும் ஒன்றாக சேர்த்து பொன்னிறமாக சிவக்கும் வரை வறுக்க வேண்டும்.

nalla-kara-podi-

மூன்றாவதாக சீரகத்தை மட்டும் தனியாக சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து சீரகத்தை கருக விடாமல் வறுத்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மிளகாயையும் உப்பையும் ஒன்றாக வருத்துக்கொள்ள வேண்டும். இறுதியாக கருவேப்பிலையை மொறுமொறுவென வறுக்க வேண்டும். பூண்டு சூடாகும் வரை வறுக்கவேண்டும். புளியை சிறிய சிறிய துண்டுகளாக கிள்ளி போட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நன்றாக அறையும் என்பது குறிப்பிடத்தக்கது. புளியை மொத்தமாக ஒரு நிமிடம் வறுத்தால் கூட போதும்.

- Advertisement -

இந்த பொருட்களை எல்லாம் மொத்தமாக ஒரு தட்டில் வைத்து நன்றாக ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். நைசாக அரைத்து விடக்கூடாது. 90% இந்த பொடி அரைந்தால் தான் ருசியாக இருக்கும்.

nalla-kara-podi1

மீண்டும் கடாயில், 1 ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி அரைத்த பொடியை கடாயில் கொட்டி அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு மூன்றிலிருந்து நான்கு நிமிடங்கள் இந்த பொடியை நன்றாக சூடு படுத்தி எடுத்து தனியாக ஒரு தட்டில் மாற்றி சூடு நன்றாக ஆற வைத்து விட்டு, ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு சேகரித்து வைத்துக் கொண்டால் மூன்று மாதங்களுக்கு இந்த போட்டி கெடாமல் இருக்கும். சுவையான சூப்பரான கொஞ்சம் வித்தியாசமான இந்த ஆந்திரா நல்ல காரப்பொடி ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும்.

இதையும் படிக்கலாமே
சத்து மிகுந்த இந்த கிரேவி சப்பாத்தி, பூரி, நாண், புல்கா போன்ற டிஷ்களுக்கு அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும்! ஒரு முறை செய்து கொடுத்தால் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -