சத்து மிகுந்த இந்த கிரேவி சப்பாத்தி, பூரி, நாண், புல்கா போன்ற டிஷ்களுக்கு அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும்! ஒரு முறை செய்து கொடுத்தால் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும்.

pachai-payaru-gravy0
- Advertisement -

சப்பாத்தி, பூரி, நாண் ரொட்டி போன்ற வகையறாக்களை சமைக்கும் பொழுது அதற்கு சைட்டிஸ் என்ன செய்வது? என்று தான் மண்டையைப் பிய்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். இதற்கு சத்துக்கள் மிகுந்துள்ள பச்சைப்பயிறு கிரேவி புதிய காம்பினேஷனாக இருக்கும். பச்சை பயறு ஊற வைத்தால் போதும்! 15 நிமிடத்தில் இந்த கிரேவியை சட்டென செய்து விட முடியும். மேலும் பச்சை பயறு அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியமும் பலம் பெறும் என்பதால் இதனை வித்தியாசமான வடிவங்களில் சமைத்து கொடுப்பது நல்லது. புரத சத்து மிகுந்துள்ள பச்சைப்பயிறு கிரேவி எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

pachai_payaru

பச்சைப்பயறு கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
பச்சை பயறு – 1 கப்,
பெரிய வெங்காயம் – 2,
தக்காளி – 2,
பூண்டு பல் – 3,
இஞ்சி – 1 துண்டு,
பிரிஞ்சி இலை – 1

- Advertisement -

மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி,
சீரகம் – ½ தேக்கரண்டி,
கரம் மசாலா – 1 தேக்கரண்டி,
மல்லி தூள் – 1 தேக்கரண்டி,
சீரக தூள் – ½ தேக்கரண்டி,
நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு,
மிளகாய் தூள், எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவிற்கு.

pachai-payaru-gravy1

பச்சை பயறு கிரேவி செய்முறை விளக்கம்:
முதலில் பச்சை பயறை நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி மற்றும் பூண்டை நசுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைத்துக் கொள்ளுங்கள். அதில் நெய் மற்றும் எண்ணெய் தலா ஒரு தேக்கரண்டி அளவிற்கு ஊற்றி சூடேற்றி கொள்ளுங்கள். எண்ணெய் சூடு ஏறியதும் அதில் சீரகம் போட்டு வெடிக்க வையுங்கள். ஒரு பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்தவுடன் அதில் நசுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டை சேர்த்து பச்சை வாசம் போக வதக்க வேண்டும். பின்னர் மஞ்சள் தூள், சீரகத் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள் ஆகியவற்றை மேலே கூறியுள்ள அளவின் படி சேர்த்து கொள்ள வேண்டும். மசாலா வாசனை போகும் வரை நன்கு வதக்கிய பின் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து மசியும் வரை வதக்க வேண்டும்.

pachai-payaru-gravy2

அதற்கு பிறகு ஊற வைத்திருக்கும் பச்சை பயறை மீண்டும் தண்ணீர் ஊற்றி ஒருமுறை கழுவி விட்டு சேர்க்க வேண்டும். பின்னர் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைத்து விட வேண்டும். ஐந்து விசில் வந்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதில் நறுக்கி வைத்த கொத்தமல்லி தழைகளை போட்டு இறக்கினால் சுடச்சுட பச்சை பயிறு கிரேவி தயாராகி விட்டிருக்கும். இறுதியாக தாளிக்க விரும்பினால் தாளித்து கொள்ளலாம்.

- Advertisement -

chappathi-gravy1

மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து, வைட்டமின் ஏ, பி, ஈ, நார் சத்து, புரத சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள பச்சை பயிறு அடிக்கடி சாப்பிட்டு வர முடி உதிர்வை கட்டுப்படுத்தும். கேன்சர் நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம். முளைவிட்ட பச்சை பயறு கூடுதல் சத்துக்களை கொடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே
மதுரை ஸ்பெஷல் தண்ணி சட்னி ஒருவாட்டி இப்படி செஞ்சு பாருங்க! இப்படி ஒரு காரசாரமான சூப்பர் சட்னியை மிஸ் பண்ணிடாதீங்க.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -