அசத்தலான சுவையில் இருக்கும் வாங்கிபாத் சாதம் ஒரு முறை ருசித்து விட்டால் மீண்டும் மீண்டும் ருசிக்க தோன்றும்

vangi-bath2
- Advertisement -

வாங்கிபாத், கத்திரிக்காய் சாதம் கர்நாடகத்தின் பாரம்பரிய உணவாகும்.  கர்நாடகா மட்டுமின்றி மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, மற்றும் தமிழ்நாட்டிலும் இது விரும்பி உண்ணப்படுகிறது. வாங்கிபாத் கத்தரிக்காய் பிரியர்களுக்கான மிகச்சிறந்த உணவு வகையாகும். கத்தரிக்காய் சாதம், மசாலாவுடன் ஊற வைத்த அரிசி மற்றும் கத்தரிக்காய் சேர்த்து பிரஷர் குக்கரில் தயாரிக்கலாம். நீங்கள் விருப்பப்பட்டால் நறுக்கிய கத்தரிக்காயுடன் கடைகளில் கிடைக்கும் வாங்கிபாத் மசாலா சேர்த்து வேகவைத்து, வெள்ளை சாதத்துடன் கலந்து எளிமையான முறையில் வாங்கிபாத் செய்யலாம். கத்தரிக்காய் சாதம் விரைவில் செய்யக்கூடிய ஒரு சுவையான சாதம் இதனை தயிர் பச்சடி அல்லது உருளைக்கிழங்கு பொடிமாஸ் உடன் பரிமாறலாம். வாருங்கள் இந்த சுவையான வாங்கிபாத் சாதத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – 4, பாசுமதி அரிசி – 1 கப், எண்ணெய் – ஸ்பூன், கடுகு – 1/2 ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு குத்து, பெரிய வெங்காயம் – 1, வேர்க்கடலை – 2 ஸ்பூன், கொத்தமல்லி விதைகள் – 2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், வெள்ளை எள் – 1 ஸ்பூன், துருவிய தேங்காய் – 2 ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன், கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் – 1ஸ்பூன், எண்ணெய் – 1ஸ்பூன், உப்பு – 1 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
பாசுமதி அரிசியை கழுவி 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும் . கத்தரிக்காய்களை கழுவி காம்பை நீக்கிவிட்டு ஏழு அல்லது எட்டு துண்டுகளாக நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்து சூடானதும் வேர்க்கடலை, எள் கொத்தமல்லி விதைகள், சீரகம் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து மூன்று அல்லது நான்கு நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வறுக்கவும்.

பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு கரம் மசாலா தூள், மிளகாய் தூள், மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும் இப்பொழுது அடுப்பை அணைத்துவிட்டு கலவையை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மைய அரைத்து வைக்கவும். பிரஷர் குக்கரில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வதக்கவும்.

- Advertisement -

நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து சில நிமிடங்களுக்கு வதக்கவும், கத்திரிக்காய் மென்மையானதும் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து கலக்கவும் இப்பொழுது ஊறவைத்து வடிகட்டிய ஒரு கப் அரிசியை சேர்த்து 1.5 கப் தண்ணீர் சேர்த்து இரண்டு சத்தம் வைக்கவும்.

நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து சில நிமிடங்களுக்கு வதக்கவும், கத்திரிக்காய் மென்மையானதும் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து கலக்கவும் இப்பொழுது ஊறவைத்து வடிகட்டிய ஒரு கப் அரிசியை சேர்த்து 1.5 கப் தண்ணீர் சேர்த்து இரண்டு சத்தம் வைக்கவும். குக்கரில் பிரஷர் வெளியானதும் குக்கரைத் திறந்து சாதத்தை மென்மையாக கிளறி விடவும். சுவையான கத்தரிக்காய் சாதம் தயாராகிவிடும் .

- Advertisement -