ஆந்திரா ஸ்டைலில் காரசாரமா இப்படி ஒரு முட்டை வறுவல் செய்துவிட்டு, ஒரு மிளகு ரசம் வைத்தால் சண்டே யாருமே சிக்கன் மட்டன் கேக்க மாட்டாங்க.

egg-masala
- Advertisement -

இந்த மழைக்காலத்திற்கு காரசாரமான முட்டை பூண்டு வறுவல் எப்படி செய்வது என்பது தான் ரெசிப்பி. இது ஆந்திரா பக்கத்தில் பிரபல்யமாக செய்யக்கூடிய ஒரு ரெசிபி. இதில் வெங்காயம் கூட சேர்க்க போவது கிடையாது. ஸ்பெஷலான ஒரு மசாலாவை அரைத்து போட்டு முட்டையை வறுத்து எடுத்தால், வெள்ளை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அத்தனை ருசியாக இருக்கும். கூடவே ஒரு மிளகு ரசம் வைத்து விட்டால் சண்டே அன்று இப்படி ஒரு சாப்பாட்டை வீட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிட்டு விடுவார்கள். வாங்க நேரத்தை கடத்தாமல் நாவில் எச்சில் ஊற வைக்கும் இந்த ரெசிபியை நாம் தெரிந்து கொள்வோம்.

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து சீரகம் – 1 ஸ்பூன், மிளகு – 1/2 ஸ்பூன், லவங்கம் – 2, ஏலக்காய் – 2, இந்த பொருட்களை போட்டு தண்ணீர் ஊற்றாமல் பொடி செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு இந்த பொடியோடு தோலுரித்த பூண்டு பல் – 10, மிளகாய் தூள் – 2 ஸ்பூன், போட்டு, உப்பு – 1/2 ஸ்பூன், போட்டு இதை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தேவை இருக்காது. பூண்டிலிருந்து நமக்கு தண்ணீர் விடும். அரைத்த இந்த விழுது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 4 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, கடுகு – 1/2 ஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், வரமிளகாய் – 2, பச்சை மிளகாய் – 2, கருவேப்பிலை – 1 கொத்து, போட்டு தாளிக்க வேண்டும்.

நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா அரைவிக்கு 6 லிருந்து 7 முட்டை சரியாக இருக்கும். முட்டைகளை உடைத்து கடாயில் இருக்கும் மசாலாவில் ஊற்றி மேலே மஞ்சள் பொடியை தூவி இந்த முட்டைக்கு மட்டும் 2 சிட்டிகை உப்பு தூவி, ஒரு மூடி போட்டு இரண்டு நிமிடம் முட்டைகளை வேக வைத்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு முட்டையை திறந்து ஓரளவுக்கு பெரிய பெரிய பீஸ் வரும் படி கலந்து உடைத்து கொள்ள வேண்டும். முட்டை அரை பாகம் நன்றாக வெந்து வந்த பிறகு லேசாக அதில் நுரைத்து எண்ணெய் பிரிந்து வரும். முட்டையை ஒதுக்கி வைத்து விட்டு, அந்த எண்ணெயில் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் கார விழுதை ஊற்றி, ஒரு நிமிடம் போல அப்படியே அந்த எண்ணெயில் வதக்கி விடுங்கள். பிறகு முட்டையோடு அந்த மசாலாவை எல்லாம் நன்றாக கலந்து விட்டு 4 நிமிடம் சிவக்க விட்டு, அடுப்பை அணைத்து விடுங்கள்.

காரசாரமாக பூண்டு வாசத்துடன் மிளகாய் தூள் காரத்துடன் இந்த முட்டை மசாலா அவ்வளவு ருசியாக இருக்கும். சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால் வேற லெவல் டேஸ்ட். இந்த சண்டேக்கு இந்த முட்டை மசாலாவை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. வாரம் வாரம் இதே மாதிரி முட்டை மசாலா வேண்டும் என்று வீட்டில் இருப்பவர்கள் அடம்பிடிப்பார்கள். ரொம்ப ரொம்ப ஈஸி ரெசிப்பி. ரொம்ப ரொம்ப சுவையான ரெசிப்பி.

பின்குறிப்பு: உங்களுடைய வீட்டில் இருப்பவர்களுக்கு ஏற்றவாறு இதில் காரத்தை கொஞ்சம் கூட்டி குறைத்தும் சேர்த்துக் கொள்ளலாம். காரத்தை இதோடு அதிகப்படுத்த முடியாது. தேவைப்பட்டால் இதில் இன்னும் இரண்டு முட்டையை சேர்த்து ஊற்றலாம். அல்லது மிளகாய் தூள் சேர்ப்பதை குறைத்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம்.

- Advertisement -