உங்களுக்கு ஏற்படும் துரதிர்ஷ்டங்கள் நீங்கி, வளமை பெருக சுலோகம் இதோ

வாழ்வில் எப்போதாவது தோல்வி ஏற்பட்டால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சிலருக்கு எப்போதும் தோல்விகளும், துரதிர்ஷ்டங்கள் மட்டுமே ஏற்படுகின்றன. அவற்றை போக்கும் அற்புத சுலோகம் இதோ

amman

வாழ்வில் பலரும் பல நேரங்களில் துரதிருஷ்டங்களும், தோல்விகளையும் மட்டுமே சந்திக்கின்றனர். இதனால் இவர்கள் மிகவும் மன விரக்தி அடைகின்றனர். மனித உறவுகளில் எதிர்பார்ப்பில்லாத அன்பு தரும் ஒரே உறவு தாய் உறவு தான். உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு ஜகன்மாதாவாக ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி இருக்கிறாள். அந்த அங்காளபரமேஸ்வரி தேவியின் ஸ்லோகத்தை துதிப்பதால். நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்

tara-devi-amman

அங்காளபரமேஸ்வரி ஸ்லோகம்

ஓங்கார உருவினளே ஓம்சக்தி ஆனவளே
ஓமென்ற பிரணவத்தின் உள்ளே ஒளிர்பவளே

பரசித் சொரூபமாக பரவியே நின்றவளே
அருளிடும் அம்பிகையே அங்காள ஈஸ்வரியே

அங்காள பரமேஸ்வரி அம்மனுக்குரிய மிகவும் சக்தி வாய்ந்த இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் அங்காள பரமேஸ்வரியை மனதில் நினைத்தவாறே 27 முறை உரு துதித்து வழிபடுவது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் அம்மன் படத்திற்கு முன்பு நெய் தீபம் ஏற்றி, இம்மந்திரத்தை 108 முறை அல்லது 1008 முறை துதித்து வணங்குவதால் உங்கள் வாழ்வில் துரதிஷ்டங்கள் நீங்கி அதிர்ஷ்டங்கள் ஏற்படும். உங்கள் வாழ்வில் அனைத்து வளங்களும் ஒவ்வொன்றாக கிடைக்க பெறுவீர்கள்.

Mariamman

- Advertisement -

பெண் சக்தியே உலகில் உயிர்களை தோன்ற செய்வதோடு, அண்ட சராசரங்களையும் இயங்க செய்கிறது. அந்த சக்தியை அம்மன் தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர். உண்மையான பக்தர்களுக்கு நன்மைகளையும், தீய எண்ணங்கள் மற்றும் செயல்களை அழிக்கும் பராசக்தியாக இருக்கிறார் அம்மன். அதிலும் சாந்த குணம் கொண்ட ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தன்னை வழிபடுபவர்களுக்கு அனைத்து நன்மைகளையும் அருளும் தெய்வமாக இருக்கிறாள்.

இதையும் படிக்கலாமே:
துஷ்ட சக்தி பாதிப்பு நீங்க மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Angala parameswari slokam in Tamil. It is also called as Amman mantras in Tamil or Angala parameswari mantra in Tamil or Athirstam tharum manthiram in Tamil or Amman manthirangal in Tamil.