உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் செய்வினை, துஷ்ட சக்திகள் பாதிப்பு நீங்க இதை துதியுங்கள்

veerabhadran
- Advertisement -

வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் என்பது ஒரு பழைய திரைப்பட பாடல் வரியாகும். அதாவது இந்த உலகத்தில் நாம் வாழும் காலத்தில் நாம் ஏழையாகவோ அல்லது சராசரி பொருளாதார நிலைமை கொண்டிருந்தால் நம்மை மட்டமாக எண்ணுகின்றனர். அதே நேரம் நாம் சுயமாக செல்வம் ஈட்டி அதை நாம் அனுபவித்தால் மிகுந்த பொறாமை கொண்டு நம்மை மனதிற்குள்ளாகவே சபிக்கின்றனர். ஒரு சிலர் நாம் அழிய வேண்டும் என்பதாற்காக தீய மாந்த்ரீக கலைகளை பயன்படுத்தி நமக்கு துன்பம் தருகின்றனர். அத்தகைய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் “வீரபத்திரர் துதி” இதோ

Veerabhadra

வீரபத்திரர் துதி

சத்துருவின் நிலைமை பெறு தக்கன் மகம்
அடும் நாளில், தலைமை சான்ற பத்து
உருவம் பெறும் திருமால் முதலாய
பண்ணவர் தம் படிவம் யாவும்,

- Advertisement -

உய்த்து உருவுதனி வாள் கையுறு
வாழ்க்கை பெற்ற உருத்திர மூர்த்தி
பொற் பத்திரை அன்புறு வீரபத்திரன்
சித் துருவினையே பரவல் செய்வாம்.

Seivinai

சிவனின் அன்பிற்குரியவரும் காவல் தெய்வமுமாகிய வீரபத்திரருக்குரிய துதி இது. இந்த துதியை தினமும் காலை 3 முறை துதித்து வெளியே செல்வது நல்லது. செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று, வீரபத்திரர் விக்கிரகத்திற்கு முன்பாக நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, இத்துதியை 27 முறை அல்லது 108 முறை துதித்தால் உங்களுக்கு எதிரிகளால் செய்யப்பட்ட செய்வினை ஏவல்களின் கடுமையான பாதிப்புகள் நீங்கும். வீட்டில் அண்டியிருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் வெளியேறும். உடல் நலக்குறைவு, மனகுழப்ப நிலை நீங்கும்.

- Advertisement -

veerabhadra

சிவபெருமானை வழிபடும் சைவர்களிடம் இந்த வீரபத்திரர் வழிபாடு இன்றும் பரவலாக கடைபிடிக்கப்படுகிறது. வீரபத்திரரை ஆலயத்தின் இறைவனாக கொண்ட கோவில்கள் தமிழகத்தில் ஒன்று, ஆந்திரத்தில் ஒன்று மற்றும் உத்திரகாண்டில் ஒன்று என மொத்தம் மூன்றே கோவில்கள் தான் பாரதத்தில் உள்ளன. தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் காவல் தெய்வமாக வழிபடப்படுகிறார் வீரபத்திரர். தீய சக்திகளை அழிக்கும் சக்தி படைத்த வீரபத்திரரை இத்துதியை துதித்து நாம் வழிபடுவதால், நம்மை பீடித்திருக்கும் அனைத்து தீமைகளும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
கடன் பிரச்சனை தீர மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Veerbhadra thuthi in Tamil. It is also called as Veerbhadra mantra in Tamil or Veerabadhrar manthiram in Tamil or Seivinai neenga in Tamil.

- Advertisement -