வீட்டில் பண கஷ்டம் ஏற்பட, பெண்கள் எல்லோரும் செய்யும் இந்த ஒரு தவறும் காரணம் தான். அந்தத் தவறு என்ன? நீங்களும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய வீட்டில் பணக்கஷ்டம் ஏற்படுவதற்கு பலவகைப்பட்ட காரணங்கள் இருக்கலாம். இருப்பினும் பெண்களாக இருந்தாலும், ஆண்களாக இருந்தாலும் இந்த ஒரு தவறை மட்டும் செய்யக் கூடாது. அது என்ன தவறு, என்பதைப் பற்றியும் பெண்கள் தங்களுடைய கையில் பணத்தை சேமிக்க அஞ்சறைப் பெட்டியில் கட்டாயமாக இந்த ஒரு பொருளை வைக்க வேண்டும், அந்த ஒரு பொருளை அஞ்சறைப் பெட்டியின் வைப்பதன் மூலம் கட்டாயமாக வீட்டுப் பெண்களின் கையில் சேமிப்பு உயரும். அது என்ன பொருள், என்பதை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இரண்டு விஷயங்கள் இரண்டுமே வீட்டிற்கு நன்மையைத் தரக்கூடிய விஷயங்கள். அது என்னென்ன? தெரிந்து கொள்வோமா?

money4

முதல் விஷயம் பெண்களாக இருந்தாலும் ஆண்களாக இருந்தாலும் தங்களுடைய கையில் பணம் இருக்கிறது, தங்களுடைய கையில் சேமிப்பு தொகை எவ்வளவு இருக்கின்றது என்பதை உங்களுடைய நெருங்கிய சொந்த பந்தங்களிடம்கூட சொல்வதை தவிர்த்து கொள்ளவேண்டும். சொல்வதினால் என்ன நடந்துவிடப் போகிறது! அந்தப் பணம் உங்களிடம் இருப்பதை அடுத்தவர்கள் தெரிந்து கொள்வதன் மூலம் உங்களுக்கு பல கஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

உங்களுடைய உறவினர்களோ உங்களுடைய நண்பர்களுக்கோ பண கஷ்டம் என்று வரும்போது, அவர்கள் உங்களிடம் வந்து பணம் கேட்க கூடிய சூழ்நிலை ஏற்படலாம். ஏனென்றால் அவர்களுக்கு உங்களிடம் பணம் இருப்பது முன்னதாகவே தெரிந்திருக்கின்றது. அவர்கள் உதவி என்று வந்து கேட்கும்போது, ‘பணம் இல்லை’ என்று சொல்ல முடியாது. ஏனென்றால் உங்களிடம் பணம் இருப்பது அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது.

money

சரி, அவர்களது கஷ்டத்தை புரிந்து கொண்டு நம்மிடம் இருக்கும் பணத்தை அவர்களுக்கு கொடுத்து உதவி செய்தால், அந்த பணம் திரும்பி வருமா என்பதும் சந்தேகம்தான். கட்டாயம் இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் சிக்கிக் கொள்வீர்கள்.

- Advertisement -

பாவப்பட்டு பணத்தை கொடுத்து விட்டாலும் பிரச்சனை. பணம் இல்லை என்று சொன்னாலும் நிச்சயம் பிரச்சனை வரத்தான் செய்யும். அந்த பிரச்சனையே உங்கள் கையில் இருக்கும் பணத்தை வீண் விரயம் செய்துவிடும். ஆக முடிந்தவரை உங்கள் கையில் சேமிப்பு இருந்தாலும், அந்த தொகையை அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதுதான் நல்லது. பொதுவாகவே இந்த தவறை பெண்கள் அதிகமாக செய்வது இயல்பு.

kadan

உதவி செய்ய வேண்டாம் என்று சொல்ல வர வில்லை. இருப்பினும் அடுத்தவர்களுக்கு நல்லது செய்யப்போய் நீங்கள் பிரச்சனைகள் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக சொல்லப்பட்டுள்ள ஒரு விஷயம் தான் இது. நிறைய பேர் இதை அனுபவபூர்வமாக உணர்ந்து இருப்பார்கள். சரி, அடுத்தபடியாக அஞ்சறைப் பெட்டியில் பெண்களுடைய கையால் கட்டாயம் இந்த ஒரு பொருளை வைக்க வேண்டும். அது என்ன பொருள்.

anjarai-petti

பெண்கள் அஞ்சறைப்பெட்டியில் கட்டாயம் வைக்க வேண்டிய பொருட்களின் பட்டியலில் இந்த ஜாதிக்காய்க்கு முதலிடம் உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது. வாசம் மிகுந்த இந்த ஜாதிக்காய்க்கு பணத்தை வசியப்படுத்த கூடிய தன்மை உள்ளது. ஒரு முழு ஜாதிக் காயை வாங்கி உங்களுடைய அஞ்சறைப்பெட்டியில் மிளகு வைத்திருக்கக் கூடிய அந்த சிறிய கிண்ணத்தில் போட்டு வைத்து விடுங்கள் போதும். நிச்சயமாக நல்ல மாற்றங்கள் தெரியும்.

Jathikkai

ஜாதிக்காய் போட்டு வைத்திருக்கும் அந்த அஞ்சறைப்பெட்டியில் கட்டாயமாக பெண்கள் பணத்தை சேமித்து வரவேண்டும். ஒரு ரூபாய் கூட இல்லாமல் அந்த அஞ்சறைப் பெட்டியை வெறுமனே விட்டு வைக்கக்கூடாது. அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். நம்பிக்கையோடு இதை செய்தால் நிச்சயமாக சேமிப்பு உயரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.