இரவில் மீறும் சாப்பாட்டை இப்படி செய்வதாலும் பணக்கஷ்டம் வரும். மீந்து போன சாப்பாட்டை என்ன செய்வீர்கள்?

rice-cash

இரவில் சாப்பாடு மீந்து போகாத அளவிற்கு சரியாக யாரும் சமைத்து விட முடியாது. ஆனால் அப்படி சமைப்பவர்கள் கூட இருக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் எல்லா நேரத்திலும் அப்படி இருக்க முடியாது என்பது தான் உண்மை. நிச்சயம் கொஞ்சமாவது உணவு மிச்சம் ஆகி விடும். அந்த சாப்பாட்டை என்ன செய்வது? என்று தெரியாமல் பலரும் செய்யும் இந்த தவறை எப்பொழுதும் இனி செய்து விடக் கூடாது என்பதற்காக தான் இந்த பதிவு. ஒவ்வொரு பருக்கையிலும் அன்னபூரணி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது.

Annapoorani

அந்த அன்னபூரணியை அவமதிப்பதாக நீங்கள் செய்யும் இந்த காரியம் வீட்டில் கஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நாம் அப்படி செய்யும் தவறு என்ன? இரவில் சாப்பாடு மீந்து போனால் என்ன செய்யலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

இரவு நேரத்தில் வீணாகும் சாப்பாட்டை ஒரு சிலர் ஃபிரிட்ஜில் எடுத்து வைத்து, மறுநாள் அதை தண்ணீர் ஊற்றி வேக வைத்து மீண்டும் வடிகட்டி சாப்பிடுவார்கள். ஆனால் பலரும் அதை வீணாக அப்படியே கொண்டு போய் குப்பை தொட்டியில் தான் கொட்டுவார்கள். குப்பைத் தொட்டியில் கொட்டும் சாதத்திற்கு தோஷம் உண்டு. நீங்கள் இந்த தவறை செய்தால் நிச்சயம் ஏதாவது ஒரு கஷ்டம் உங்களுக்கு தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கும். அன்ன தோஷம் இருப்பவர்கள் வீட்டில் பண குறையும், தானிய குறையும் ஏற்படும்.

rice

நல்ல வருமானம் இருந்தால் தான் நல்ல சாப்பாட்டை நம்மால் சாப்பிட முடியும். வருமானத்தில் தடையை ஏற்படுத்தும் அந்த தோஷத்தை இனியும் எப்பொழுதும் நீங்கள் பெற்று விடாதீர்கள். சாதம் மீந்து போனால் நாம் செய்யக் கூடாத ஒரே தவறு அதை குப்பையில் கொட்டுவது தான். நீங்கள் குழம்பு வைக்கிறீர்கள் அல்லது வேறு ஏதாவது உணவு பொருட்களாக இருந்தாலும் கூட அவற்றை குப்பையில் தூக்கி எறியாமல் வாயில்லா ஜீவன்களுக்கு உணவாகப் படைப்பது புண்ணியத்தை சேர்க்கும்.

- Advertisement -

தெரியாமல் கூட நீங்கள் இந்த தவறை செய்யும் பொழுது நிச்சயமாக உங்களுக்கு தோஷம் ஏற்படுகிறது. இதன் மூலம் வீட்டில் நிறைய கஷ்டங்கள் உருவாகிறது. அன்னத்தை குப்பையில் கொட்டுபவர்களுக்கு பசியால் வாடும் நிலைமையும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அல்லது ஏதாவது ஒரு மன கஷ்டம் வந்து விடும். சாப்பிடுவதற்கு பிடிக்காமல் போய்விடும். நிறைய பேருக்கு இந்த பிரச்சனை வருகிறது. ஏதோ கடமையே என்று சாப்பிடுவார்கள். ரசித்து ருசித்து, மனமார, மனமகிழ்ச்சியுடன் ஒருவரால் சாப்பிட முடிந்தால் அவர்கள் தான் அன்ன தோஷம் இல்லாதவர்கள் என்று தான் அர்த்தம்.

food

சரி, இப்பொழுது தவறு செய்தாகி விட்டது. அன்ன தோஷம் நீங்க என்ன தான் செய்வது? அன்ன தோஷத்தில் இருந்து விடுபட அன்னத்தை முறையாக முதலில் சமைக்க வேண்டும். அப்படி சமைக்க முடியாமல் அதிகமாக சமைப்பவர்கள் அதனை வேறு வகையில் எப்படியாவது உபயோகித்து விட வேண்டும். அன்ன தோஷம் வர பசி என்று வருபவர்களுக்கு உணவிடாமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கும்.

rice-satham

அது போல் இரவில் நீங்கள் சாதம் ஒரு கைப்பிடி அளவிற்கு கிண்ணத்தில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி பூஜை அறையில் வைத்து விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலமும் அன்னக்குறை ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். இரவில் மீந்து போகும் சாதத்தில் எள் கலந்து மறுநாள் காலையில் அதை காக்கைக்கு வைக்கலாம். இதனால் சனி தோஷம் மற்றும் பித்ரு தோஷங்கள் நீங்கும். இதையெல்லாம் விடுத்து வீணாக குப்பையில் கொட்டி அன்ன பூரணியின் சாபத்திற்கு ஆளாகாதீர்கள்.

இதையும் படிக்கலாமே
இந்த தீபத்தை ஒருமுறை ஏற்றினாலே போதும். வாழ்நாள் முழுவதும் உங்கள் குடும்பத்தில் சந்தோஷத்திற்கு ஒரு துளிகூட குறைவிருக்காது. உங்களுடைய வேண்டுதல் 11வது நாளில் நிச்சயம் நிறைவேறும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.