உங்க வீட்டில் அன்னபூரணி சிலை இருக்கிறதா? அன்னபூரணிக்கு இந்த சாதம் வைத்து வழிபட்டால் வீட்டில் வறுமை என்பதே வராதாம் தெரியுமா?

annapoorani-rice
- Advertisement -

வாரணாசி நகரின் முதல் கடவுளாக வணங்கப்படுபவர் அன்னபூரணி. அன்னபூரணி பார்வதி தேவியின் அம்சமாக கருதப்படுகிறார். இவ்வுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் பசி என்பதே இருக்கக் கூடாது என்கிற அருளால் தோன்றிய இந்த அன்னபூரணி எல்லோருடைய வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு தெய்வம் ஆவார். அன்னபூரணி சிலை வைத்திருப்பவர்கள், அதற்கு தினமும் அரிசி போட வேண்டும். மேலும் அன்னபூரணியை எப்படி வழிபட்டால் வறுமை வராது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள போகிறோம்.

அன்னபூரணி சிலை பித்தளை, செம்பு அல்லது எந்த உலோகத்தில் நீங்கள் வைத்திருந்தாலும் பரவாயில்லை! அன்னபூரணியின் சிலை பூஜை அறையில் இருந்தால் குடும்பத்தில் வறுமை என்பது ஏற்படாது. அன்னபூரணியின் சிலையை நேரடியாக தரையில் வைத்து வணங்க கூடாது. அதற்கு கீழே அடியில் ஒரு சிறிய தட்டு ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அன்னபூரணி கையில் வைத்திருக்கும் கரண்டியில் ஓரிரு அரிசிகளை போட்டு அவர் அமர்ந்திருக்கும் தட்டு முழுக்க அரிசியால் நிரப்பி அதில் அமர வைக்க வேண்டும் என்பது முறையாகும்.

- Advertisement -

மேலும் இந்த அரிசியை ஒருபோதும் வீணாக்கக் கூடாது. தினமும் அரிசி போட்டு மாற்றினாலும் சரி அல்லது வாரம் ஒரு முறை அரிசியை மாற்றினாலும் சரி அதை வீணாக்காமல் இருக்க வேண்டும் என்பது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயமாகும். அன்னபூரணியின் சிலையில் இருக்கும் அரிசியை மீண்டும் அரிசி பெட்டியில் போடுவதால் தன, தானியங்கள் பெருகும் என்பது நம்பிக்கையாகும்.

மேலும் அன்னபூரணி கையில் தங்க கரண்டியும், ஒரு புறம் மணிகள் பதித்த பானையும் வைத்திருப்பார். அதில் பால் சோறு வைத்திருப்பதாக புராணங்கள் கூறுகிறது. எனவே அன்னபூரணிக்கு பால் சோறு நைவேத்தியம் படைத்து வழிபட்டால் குடும்பத்தில் வறுமைக்கு இடமே இருக்காது என்பது ஐதீகம் ஆகும். இதை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். அன்னபூரணிக்கு உகந்த நாள் என்பது கிடையாது. எல்லா நாளும் அன்னபூரணியை வழிபட வேண்டிய முக்கியமான நாளாகவே இருக்கிறது. உணவில்லாமல் இவ்வுலகில் ஒரு நாள் கூட இருக்க முடியாது. அது போல ஒவ்வொரு நாளும் அன்னபூரணியை வழிபடுவது முறையாகும்.

- Advertisement -

அன்னபூரணி அவருடைய பக்தர்கள் அனைவரும் பசியாறிய பின்பே அவர் உணவு உண்கிறார். அதுவரை சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிப்பாராம். உலக உயிர்கள் அனைத்திற்கும் பசியாற்றும் அன்னபூரணியை படமாக சமையல் அறையில் ஒட்டி வைப்பது பஞ்சத்தைப் போக்கும். இவருக்கு மண் அகல் விளக்கினால் தீபம் ஏற்றி வழிபட்டால் ரொம்பவும் விருப்பம். எனவே அன்னபூரணிக்கு தனியாக அகல் விளக்கு தீபம் ஒன்றை தினமும் ஏற்றி வையுங்கள்.

அன்னம் என்பது சாதத்தையும், பூரணம் என்பது முழுமையையும் குறிக்கிறது. முழுமையான அன்னத்தை வழங்குபவர் அன்னபூரணி ஆவாள். அவளுடைய கைகளில் தங்க கரண்டியை வைத்திருக்கிறாள் எனவே அன்னபூரணி சிலை வைத்திருப்பவர்கள் அன்னபூரணியின் கரண்டிக்கும் மஞ்சள், குங்குமம் இட்டு வழிபட வேண்டும். மேலும் வெள்ளை நிற பூக்கள் அன்னபூரணிக்கு உகந்ததாகும் எனவே வெள்ளை நிற பூக்களை அதற்கு சாற்றி வையுங்கள். மேலும் அன்னபூரணியின் அஷ்டகம், ஸ்தோத்திரங்கள் போன்றவற்றை உச்சரித்து வருபவர்களுக்கு பசி என்பதே ஏற்படாதாம். பசிப்பிணி தீர, வறுமை போக அன்னபூரணியை இவ்வகையில் வழிபட்டு அனைவரும் பயன்பெறுவோம்.

- Advertisement -