நாளை அன்னாபிஷேகம் – சிவன் கோவிலுக்கு சென்றால் அறிய பலன் உண்டு

Sivan temple

சிவபெருமானுக்கும், சந்திர பகவானுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு, சந்திர பகவான் தனது சாபம் சிவபெருமானால் நீங்க பெற்று, சிவபெருமானின் தலையில் பிறை சந்திரனை அணிகலனாக அணியப்பெறும் பாக்கியம் பெற்றவர். எனவே தான் நமது பழந்தமிழ் பக்தி இலக்கியங்கள் சிவபெருமானை “பிறைசூடன், சந்திரசேகரன்” என்கிற பல பெயர்களில் சிவன் மற்றும் சந்திரனின் புகழை போற்றுகின்றனர். அப்படி சந்திரன் மற்றும் சிவபெருமானின் மிகுந்த அருளை பெற்று தரும் ஒரு வழிபாடு தான் “ஐப்பசி மாத பௌர்ணமி” அன்று சிவபெருமானுக்கு செய்யப்படும் “அன்னாபிஷேக வழிபாடு”. இந்த அன்னாபிஷேக வழிபாட்டை பற்றியும், அதனால் கிடைக்கும் பழங்கள் என்ன என்பதை பற்றியும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

Sivan

மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கு பரிணாம வளர்ச்சி அடைந்த காலம் முதல் மனிதன் உணவுதானியங்களை உற்பத்தி செய்யும் “உழவு” தொழிலில் ஈடுபட்டுவருகிறான். உலகில் பல பகுதிகளிலும் அரிசி தரும் நெற்பயிர்களே அதிகம் பயிரிடப்படுகின்றன. ஜோதிட ரீதியாக பார்க்கும் போது சந்திர பகவான் அரிசி தானியத்தின் மீது ஆதிக்கம் கொண்டவராவார். எனவே இந்த அரிசி தானியங்களை சந்திர பகவானையே அணிகலனாக அணிந்திருக்கும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு தங்களின் நன்றியை வெளிப்படுத்தும் வழிபாடாக இருக்கிறது.

மேலும் நமது சாஸ்திர நூல்களில் “அன்னம்” எனப்படும் “சோறு” ஈஸ்வர வடிவமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு பருக்கை அன்னம் கூட சிவலிங்கத்தின் அம்சம் எனவும், ஒவ்வொரு முறை நாம் அன்னத்தை தொடுகின்ற போதும் அந்த இறைவனையே தொடுவதாக ஐதீகம். மேலும் “துலாம்” ராசியில் பிறக்கும் “ஐப்பசி மாத பௌர்ணமி” தினம் சிவபெருமான் மிகவும் மனமகிழ்வோடு இருக்கும் தினம் என்பதால் இந்த நாளில் செய்யப்படும் அன்னாபிஷேகம் மிகச் சிறந்ததென்றும், அந்த அபிஷேகத்தை தரிசிப்பவர்கள் பேறு பெற்றவர்கள் எனவும் கூறப்படுகிறது.

ஐப்பசி பௌர்ணமி தினத்தில் சிவன் கோவில்களில் முதலில் வாசனை திரவியங்கள், பால், தென் முதற்கொண்டு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்யப்படுகிறது. பிறகு புதிதாக அறுவடை செய்த நெல்மணிகளை குத்தி, அரிசி எடுத்து, அந்த அரிசி கொண்டு செய்யப்பட்ட அன்னத்தை சிவலிங்கம் முழுவதும் மூடும்படியாக அலங்கரிப்பார்கள். அத்துடன் பலவகையான காய்கறிகளை கொண்டு லிங்கமூர்த்தியை ளநகரம் செய்வார்கள். பின்பு பூஜைகள் செய்யப்பட்டு அந்த அரிசி பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படும்.

- Advertisement -

ஐப்பசி பௌர்ணமி தினத்தில் சிவன் கோவில்களில் சிவபெருமானுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் தம்பதியர்கள் இணைபிரியாமல் வாழ்வார்கள். குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். தரித்திரம் நீங்கும். வறுமை நிலை ஏற்படாது. விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். குழந்தை பேறில்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிட்டும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும். முன்ஜென்ம பாவங்கள் தீரும். பித்ரு தோஷம் மற்றும் சாபங்கள் போன்றவையும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில் சிறப்புக்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக பலன்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Annabishekam 2018 in Tamil.