உங்கள் குடும்பத்தில் ஏற்படும் கடுமையான வறுமையை போக்கும் அற்புத மந்திரம்

annapurna
- Advertisement -

பசி என்கிற உணர்வு உயிர்கள் அனைத்திற்கும் ஏற்படுகின்ற ஒரு இயற்கையான உடல் சார்ந்த உணர்வாகும். இந்த பசிப்பிணியை போக்குவதற்கு ஒரே மருந்து வயிறார சாப்பிட செய்யப்படும் அன்னதானம் ஆகும். அத்தகைய அன்னம் எனும் உணவு ஒருவருக்கு வாழ்நாள் முழுக்க தங்கு, தடையில்லாமல் கிடைக்க அருள் புரியும் தெய்வம் ஸ்ரீ அன்னபூரணி தேவி. அந்த அன்னபூரணி தேவியின் அருளை தருகின்ற அன்னபூரணி மூல மந்திரம் இதோ.

annapurna

அன்னபூர்ணா மூல மந்திரம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஷ்ரீம் க்ளீம் அன்னபூர்ணாய நமஹ

- Advertisement -

நாம் உண்ணும் உணவிற்கு கடவுளாக இருப்பவர் அன்னபூரணி என்பதால் மேற்சொன்ன அன்னபூரணி மூல மந்திரத்தை தினமும் காலையில் 108 முறை துதிப்பது நல்லது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அன்னபூரணி தேவிக்கு காலையில் சமைத்த உணவு சிறிதை நைவேத்தியம் வைத்து அன்னபூரணி மூல மந்திரத்தை 108 முதல் 1008 முறை வரை துதித்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் என்றென்றும் உணவிற்கு பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் இருக்கின்ற தரித்திர நிலை முற்றிலும் நீங்கும். பொருளாதார நிலை மேம்படும். குடும்பத்தில் திருமணம் தடை தாமதங்களுக்கு ஆளாகின்ற ஆண்களுக்கும், பெண்களுக்கும் விரைவில் திருமணம் நடக்கும்.

annapurna

அன்னபூரணி தேவி வழிபாடு

- Advertisement -

மனிதருக்கு ஏற்படுகின்ற உடல் ரீதியான உணர்வுகளில் பசி மிகவும் பலம் வாய்ந்ததாகும். அதிலும் இந்தப் பசி என்கிற உணர்வு அதீத அளவில் மனிதர்களுக்கு ஏற்பட்டால் அவர்கள் எத்தகைய தீய செயல்களைச் செய்வதற்குத் தயங்க மாட்டார்கள். எனவே தான் ஞானிகள் பசியை ஒரு நோயாக கருதி பசிப்பிணி என்கின்றனர். உலகத்திற்கே படியளக்கும் தெய்வமாக இருப்பவர் தான் ஸ்ரீ அன்னபூரணி தேவி. அந்த அன்னபூரணி தேவியை நித்தம் வழிபடுபவர்களுக்கு வாழ்வில் உணவிற்கு கஷ்டப்படும் நிலை எப்போதும் ஏற்படாது.

annapurna

அன்னபூரணி தேவி வழிபாட்டிற்குரிய தினங்கள்

- Advertisement -

மக்களின் உணவு பஞ்சத்தை போக்குவதோடு வாழ்வில் சகல விதமான நற்பலன்களை ஏற்படுத்தி தரவல்ல அன்னபூரணி தேவியை அனைத்து தினங்களிலும் வழிபடலாம் என்றாலும் வாரத்தில் வருகின்ற புசெவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். மேலும் நவராத்திரி காலத்திலும் அன்னபூரணி தேவிக்கு வித விதமான நைவேத்தியங்கள் வைத்து வழிபடுவதால் அந்நபர் மற்றும் அவரின் குடும்பத்திற்கு வாழ்வில் மிகுதியான நன்மைகள் ஏற்பட செய்யும் ஒரு சிறந்த வழிபாடாக இருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
அனைத்து காரியங்கள் வெற்றி பெற மந்திரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Annapoorani moola mantra in Tamil. It is also called as Annapurana mantra in Tamil or Devi mantras in Tamil or Moola mantras in Tamil or Moola manthirangal in Tamil.

- Advertisement -